ஸ்டாக்கை கிளியர் பண்ண அதிரடி! டிவிஎஸ் இ-ஸ்கூட்டருக்கு கேஷ்பேக் அறிவிப்பு! ரூ17300 முதல் ரூ20000 வரை கிடைக்கும்

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube)-ம் ஒன்றாகும். இந்த ஸ்கூட்டரின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பணியிலேயே தற்போது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. அது கேஷ்பேக் மற்றும் கூட்டப்பட்ட வாரண்டி திட்டங்களையே ஸ்கூட்டரின் பக்கம் வாடிக்கையாளர்களை வளைத்துப் போடும் விதமாக அறிவித்திருக்கின்றது. ரூ. 17,300 முதல் ரூ. 20 ஆயிரம் வரை இன்ஸ்டான்ட் கேஷ்பேக் சலுகைகளே ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளன.

ஆனால், இந்த கேஷ்பேக் வேரியண்டைப் பொருத்து மாறுபடும் என்பது கவனிக்கத்தகுந்தது. டிவிஎஸ் நிறுவனம் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஐக்யூப் (iQube), ஐக்யூப் எஸ் (iQube S) மற்றும் ஐக்யூப் எஸ்டி (iQube ST) ஆகியவையே அவை ஆகும். இந்த வேரியண்டுகள் கூடுதல் ஆப்ஷனாக வெவ்வேறு விதமான பேட்டரி பேக் தேர்வுகள் அதில் வழங்கப்படுகின்றன.

Tvs launches cashback for iqube e-scooter

அந்தவகையில், ஆரம்ப நிலை வேரியண்டான ஐக்யூப்-இல் 2.2 kWh மற்றும் 3.4 kWh பேட்டரி பேக் தேர்வுகளும், ஐக்யூப் எஸ்டி-இல் 3.4 kWh மற்றும் 5.1 kWh பேட்டரி பேக் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன. ஆனால் நடுநிலை வேரியண்டான ஐக்யூப் எஸ்-இல் 3.4 kWh பேட்டரி பேக் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகின்றது.

இவற்றில் சிலவற்றிற்கே கேஷ்போக் மற்றும் சிறப்பு சலுகைகளை தற்போது டிவிஎஸ் நிறுவனம் அறிவித்திருக்கின்றது. 2.2 kWh திறன் கொண்ட பேக்கைக் கொண்டிருக்கும் ஐக்யூப் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக 12,300 ரூபாய் கேஷ்பேக்கும், 4,499 மதிப்புள்ள கூட்டப்பட்ட வாரண்டி திட்டமும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த சலுகை தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பொருந்தும். அதேநேரத்தில் இதே ஸ்கூட்டர் தேர்விற்கு உபி, உத்தர்காண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 15 ஆயிரம் ரூபாய் வரை கேஷ்பேக் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. ஐக்யூப் 3.4 kWh தேர்விற்கும் சிறப்பு சலுகைகளை டிவிஎஸ் அறிவித்திருக்கின்றது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி வாசிகள் இந்த ஸ்கூட்டரை வாங்குகையில் அவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரை கேஷ்பேக்கும், ரூ. 5,999 மதிப்புள்ள கூட்டப்பட்ட வாரண்டியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில் மஹாராஷ்டிரா வாசிகளுக்கு மட்டும் அதிகபட்ச சலுகையாக ரூ. 20 ஆயிரம் கேஷ்பேக்கும், 5,999 மதிப்புள்ள கூட்டப்பட்ட வாரண்டியும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இதேபோல், ஐக்யூப் எஸ் 3.4 kWh ஆப்ஷனுக்கும் கேஷ்பேக் சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. ரூ. 10 ஆயிரம் கேஷ்பேக்கும், 5,999 மதிப்புள்ள கூட்டப்பட்ட வாரண்டியும் இதற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த சலுகை தமிழகம் மற்றும் புதுச்சேரி போன்ற குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அதேவேளையில், கேரளா, கோவா மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநில வாசிகளுக்கு 15,000 ரூபா கேஷ்பேக் மற்றும் 6 ஆயிரம் ரூபா மதிப்புள்ள கூட்டப்பட்ட வாரண்டியும் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல், ஐக்யூப் எஸ்டி வேரியண்டின் 3.4 kWh மற்றும் 5.1 kWh ஆகிய இரண்டு தேர்வுகளுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

ரூ. 10 ஆயிரம் கேஷ்பேக் இதற்கு வழங்கப்படும். இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். மேலும், இந்த சலுகை வருகின்ற இம்மாதம் 28 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமில்லைங்க கிரெடிட் கார்டு மற்றும் சில ஆன்லைன் கொள்முதலுக்கு கூடுதல் சிறப்பு ஆஃபர்கள் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் ரூ. 89,999 தொடங்கி ரூ. 1.85 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் டிவிஎஸ் ஐக்யூப்-ம் ஒன்றாகும். இதற்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே தற்போது கேஷ்பேக் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமல்ல, இப்போது தயாரித்திருக்கும் அனைத்து இ-ஸ்கூட்டர்களையும் விற்று 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டை மிகப் பெரிய விற்பனை வளர்ச்சியுடன் முடிக்க வேண்டும் என்பதும் நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, February 7, 2025, 19:05 [IST]
English summary
Tvs unveils attractive cashback offer for iqube e scooter starting february 2025
மேலும்... #tvs motor #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+