கர்நாடகா வாசிகளுக்கு கம்மி விலை, தமிழர்களுக்கு அதிக விலையா!.. வித்தியாசத்த பார்த்து ஆடி போயிட்டாங்க..
தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் டிவிஎஸ் மோட்டார் (TVS Motor). இந்த நிறுவனம் சென்ற 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 'எக்ஸ்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை வெளியீடு செய்தது. இதன் டெலிவரி பணிகளையே அந்நிறுவனம் தற்போது நாட்டில் தொடங்கி இருக்கின்றது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் தொடங்கி இருக்கின்றது. டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவின் குறிப்பிட்ட சில மாநிலங்களிலேயே இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வழங்குகின்றது.
அந்த சில மாநிலங்களிலும் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது அந்தவகையில், தமிழகத்தில் இரண்டு முக்கிய நகரங்களில் மட்டுமே இந்த ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றது. சென்னை, கோவை ஆகியைவயே அவை ஆகும். இதேபோல் மற்ற மாநிலங்களிலும் சென்னை மற்றும் கோவை போன்ற மிக முக்கியமான நகரங்களில் மட்டுமே டிவிஎஸ் எக்ஸ் விற்பனைக்குக் கிடைக்கிறது என்பது கவனிக்கத்தகுந்தது.

தமிழகத்தில் இந்த ஸ்கூட்டரின் ஒரு யூனிட்டே ரூ. 2 லட்த்து 49 ஆயிரத்து 990க்கு விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அதேவேளையில், கர்நாடகாவில் இதைவிட சற்று குறைவாக ரூ. 2 லட்சத்து 47 ஆயிரத்து 605க்கு இந்த ஸ்கூட்டர் விற்கப்படுகின்றது.
தமிழகத்தைவிட குறைவான விலையில் இந்த ஸ்கூட்டர் கர்நாடகாவில் விற்க அம்மாநிலத்தில் மின்சார வாகனங்களுக்கு என பிரத்யேகமாக வழங்கப்படும் சிறப்பு சலுகை மற்றும் வரி விதிப்பு முறையே காரணமாக உள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தின்படி, டிவிஎஸ் எக்ஸ் மொத்தமாக இந்தியாவின் 10 மாநிலங்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைப்பது தெரிகின்றது.

இந்த அனைத்து மாநிலங்களிலும் கர்நாடகாவில் மட்டுமே குறைவான விலையில் எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இப்போது டெலிவரி பணிகளும் பெங்களூருவிலேயே தொடங்கி இருக்கின்றது. விரைவிலேயே நாட்டின் மற்ற நகரங்களிலும் இதன் டெலிவரி பணிகள் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நடப்பாண்டின் முதல் காலாண்டிற்குள் அது தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிவிஎஸ்-இன் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையில் மட்டுமல்ல சிறப்பம்சங்களைத் தாங்கி இருப்பதிலும் மிக சிறந்ததாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், கார்களில் வழங்கப்படுவதைப் போல பெரிய 10.25 அங்குல அளவிலான டிஎஃப்டி திரை, நேவிகேஷன் சிஸ்டம், வீடியோ மற்றும் கேமிங் வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.
சிறந்த பிரேக்கிங்கிற்காக இந்த ஸ்கூட்டரின் முன் வீலில் 220 மிமீ டிஸ்க்கும், பின் பக்க வீலில் 195 மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், ஏபிஎஸ்-ம் வழங்கப்பட்டிருக்கின்றது. பேட்டரி பேக்கை பொருத்த வரை 4.4 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 140 கிமீ வரை பயணிக்க முடியும். இதை சார்ஜ் செய்துக் கொள்ள ஏதுவாக ஸ்மார்ட் எக்ஸ் ஹோம் ரேபிட் சார்ஜர் வழங்கப்படுகின்றது. இதன் வாயிலாக சார்ஜ் செய்யும் பட்சத்தில் வெறும் 50 நிமிடங்களிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 50 சதவீத சார்ஜை அது பெற்றுவிடும்.
மின்சார மோட்டாரை பொருத்த வரை 11kW மற்றும் 40 என்எம் டார்க்கை வெளியேற்றும் பிஎம்எஸ்எம் (Permanent Magnet Synchronous Motor) மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 105 கிமீ ஆகும். இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தன்னுள் தாங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, டிவிஎஸ் ஐக்யூப்-க்கு அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் டெலிவரி பணிகளை டிவிஸ் நிறுவனம் தொடங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








