80 கிமீ மைலேஜ்! ஆனா விலை வெறும் 43 ஆயிரம்தானா! இதுக்காக டிவிஎஸ் நிறுவனத்திற்கு கோயிலே கட்டி கும்பிடலாம்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் மொபட்களில் (Mopeds) ஒன்று டிவிஎஸ் எக்ஸ்எல் 100 (TVS XL 100). இந்த மொபட்டின் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், 44,971 டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம், 45,923 டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 952 டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் காரணமாக டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட் விற்பனையில் 2.07 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அத்துடன் இந்த வீழ்ச்சி காரணமாக, நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 டூவீலர்களின் பட்டியலில் (Top 10 Two Wheelers November 2025), டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்டிற்கு, 9வது இடம் மட்டுமே கிடைத்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் 8 இடங்களில் முறையே ஹீரோ ஸ்பிளெண்டர், ஹோண்டா ஆக்டிவா, ஹோண்டா ஷைன், டிவிஎஸ் ஜூபிடர், பஜாஜ் பல்சர், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ், சுஸுகி ஆக்ஸஸ் மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆகிய டூவீலர்கள் உள்ளன. இந்த வரிசையில் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட், 9வது இடத்தை பிடித்துள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்டின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 43,150 ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 60,250 ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை அனைத்துமே டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் (Chennai Ex-showroom Price) விலை ஆகும்.
டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட் ஒரு லிட்டருக்கு 80 கிலோ மீட்டர் வரை மைலேஜ் (Mileage) வழங்குவதாக டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஓட்டும் விதம், மொபட் மற்றும் சாலைகளின் கண்டிஷன் போன்ற காரணிகளை பொறுத்து, மைலேஜ் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: குறைவான விலை, நிறைவான மைலேஜ் மற்றும் சரக்குகளை எளிதாக கொண்டு செல்லும் வசதி போன்ற காரணங்களால்தான், டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்டை, வாடிக்கையாளர்கள் பலரும் வாங்குகின்றனர். குறிப்பாக இந்தியாவின் கிராமப்புறங்களில் இன்னமும் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்டிற்கான 'டிமாண்ட்' பெரிய அளவில் இருக்கிறது.
நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள குறைவான விலை, நிறைவான மைலேஜ் மற்றும் சரக்குகளை எளிதாக கொண்டு செல்ல கூடிய வசதி ஆகிய சிறப்பம்சங்கள் உடன், நீடித்து உழைக்க கூடிய, அதே நேரத்தில் ஓட்டுவதற்கு மிகவும் எளிமையாக ஒரு மொபட்டை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








