அலாய் வீலுடன் டிவிஎஸ் எக்ஸ் எல்! விலையும் ரொம்ப கம்மி தான்!
டிவிஎஸ் நிறுவனம் தனது எக்ஸ்எல் மொபட்டில் எக்ஸ்எக்ஸ் 100 எச் அலாய் என்ற புதிய வேரயின்டை அறிமகப்படுத்தியுள்ளது. இதில் நவீன அம்சங்கள், அதிகமான மைலேஜ், மேம்படுத்தப்பட்ட பிராக்கடிக்கல் அம்சங்கள், என தினந்தோறும் பயன்பாட்டிற்கு ஏற்ற விஷயங்கள், கமர்ஷியல் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி புதிய எக்ஸ்எல் 100 எச்டி அலாய் என்ற வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை வெறும் ரூ65,047 தான். இந்த வாகனம் இந்தியாவின் நம்பதன்மையை பெற்ற நீண்ட கால மொபட்டாக இருக்கிறது. இந்த மேம்படுத்தப்பட்ட டிசைன் நீடித்த உழைப்பு, மார்டனான டிசைன் மற்றும் தொழிற்நுட்பம், அதிக பிராக்கடிக்கல் தன்மை, ஸ்டைலிஷ், தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற வாகனமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தில் 16 இனச் அலாய் வீல்கள் டியூப்லெஸ் டயர்களுட்ன வழங்கப்பட்டுள்ளது. இது நீடித்த உழைப்பு மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது. இதில் எல்இடி லைட்டிங் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் போதுமான விசிபிளிட்டி கிடைக்கிறது. இது போக புதிய கிராஃபிக்ஸ், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டெயில்லைட், கருப்பு நிற மஃப்ளர் என எல்லாம் சேர்ந்து இந்த மொபட்டிற்கு ரக்கட் லுக்கை கொடுக்கிறது.
வழக்கம்போல பிராக்டிக்காலிட்டி அம்சம் தான் இந்த வாகனத்தின் முக்கியமான விஷயமாக இருக்கிறது. பின்பக்கம் எக்ஸ்ட்ரா லக்கேஜை ஏற்ற வசதியாக பின்பக்க சீட்டை கழட்டி மாட்டும் வசதி வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் பெரிய ஃபிளோர் போர்டு வழங்கப்பட்டுள்ளது. இது போக சார்ஜ்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இது போக அதிக கிரிப் மற்றும் டெக்ஷர் கொண்ட சீட்டுகள் ஸ்டெபிளிட்டி மற்றும் சொகுசு அம்சத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.

இந்த மொபட்டில் முன்பக்கம் டெலஸ்கோபிக் சஸ்பென்சன், மற்றும் பின்பகக்கம் ஸ்விங் ஆர்ம் சஸ்பென்சன் வழங்கப்பட்டுள்ளது. இதில் வேரியபிள் ரேட்டட் ஸ்பிரிங் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கரடு முரடான பாதையில் பயணித்தாலும் ஸ்மூத்தான பயணம் கிடைக்கும். தொழிற்நுட்பத்தில் முக்கியமாக இதில் எக்கோ திரஸ்ட் ஃப்யூயலல் இன்ஜெக்ஷன் தொழிற்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இது இந்த வாகனத்தின் மைலேஜை 15 சதவீதம் அதிகரிக்கிறது.
இந்த வாகனம் கீழே விழுந்தால் 3 நொடியில் இன்ஜின் ஆஃப் ஆகும் வகையில் டில்ட் சென்சார் வழங்கப்ட்டுள்ளது. இது கூடுதலான ஒரு பாதுகாப்பு அம்சமாக இருக்கிறது. இந்த வாகனத்தில் 99.7 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு 4 ஸ்டோக் ப்யூயல் இன்ஜெக்டட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 4.3 பிஎச்பி பவரை 6000 ஆர்பிஎம்மிலும், 6.5 என்எம் டார்க் திறனை 3500 ஆர்பிஎம்மிலும் வழங்குகிறது. இந்த வாகனம் அதிகபட்சமாக 58 கி.மீ வரை ரேஞ்சை தருகிறது.

இந்த இன்ஜின் சென்ட்ரிஃப்யூகல் வெட் கிளட்ச் மற்றும் செயின் டிரைவ் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இது நீடித்த உழைப்பையும் சுலபமான பயன்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மொபட்டின் மொத்த எடையே 89 கிலோ தான். ஆனால் இது சுமார் 150 கிலோ எடையை கூட அசால்டாக எடுத்து செல்லும். இது சொந்த பயன்பாடு மற்றும் கமர்ஷியல் பயன்பாட்டிற்கு ஏற்றது. இதில் 4 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது.
இந்த வாகனம், சிவப்பு, நீலம், கிரே ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட் ஹெவி டூட்டி, ஹெவி டூட்டி ஐ-டச் ஸ்டார்ட், ஹெவி டூட்டி ஐ-டச் ஸ்டார்ட் வின் எடிசன், கம்ஃபோர்ட் ஐடச் ஸ்டார்ட், ஆகிய வேரியன்ட்களில் விற்பனைசயாகி வருகிறது. இந்த எச்டி அலாய் தற்போது புதிய வேரியன்டாக வழங்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்கு இந்த டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனம் மிக முக்கியமான வாகனமாக இருந்து வருகிறது. விவசாய மக்கள் முதல் தெரு வியாபாரிகள் வரை இதை பயன்படுத்துகின்றனர். இதில் நவீன அம்சங்களுடன் வந்திருப்பது வரவேற்றப்பை பெறுகிறது. இதனால் மக்கள் அதிக பலன் பெறுவார்கள்.


Click it and Unblock the Notifications









