ஜஸ்ட் மிஸ்ல முதலிடத்தை பறிகொடுத்த ஹீரோ! ஹோண்டா இவ்வளவு வண்டிய வித்துட்டாங்களா?
கடந்த ஜூலை மாதம் ஹோண்டா நிறுவனம் மற்ற நிறுவனங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி 2 வீலர் விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. இதன்படி இந்தியாவில் அதிகம் டூவீலர்களை விற்பனை செய்த பிராண்டுகள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஆகஸ்ட் மாதம் துவங்கியுள்ள நிலையில் கடந்த ஜூலை மாத விற்பனை விபரங்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி 2 வீலர் விற்பனையில் அதிகம் விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியில் கிடைத்துள்ளது. இதில் ஹோண்டா நிறுவனம் ஹீரோ, டிவிஎஸ், பஜாஜ், சுஸூகி, ராயல் என்ஃபீல்டு ஆகிய நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.

ஹோண்டா நிறுவனம் கடந்த ஜூலை மாதம் மொத்தம் 4,6,331 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் வெறும் 4,39,118 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. தற்போது 6.20 சதவீதம் விற்பனை குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஹோண்டா நிறுவனம் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
இரண்டாவது இடத்தில் ஹீரோ நிறுவனம் இருக்கிறது இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் மொத்தம் 4,12,397 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 3,47,535 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. தற்போது 18.66 சதவீதம் அளுவிற்கு விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது. இந்நிறுவனம் இந்த பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது.

மூன்றாவது இடத்தில் டிவிஎஸ் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 3,08,720 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் 2,54,250 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. தற்போது 21.42 சதவீதம் அளவிற்கு விற்பனை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பட்டியலில் நான்காவது இடத்தில் பஜாஜ் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 1, 39,279 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 1,68,847 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 17.51 சதவீத விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அதிக விற்பனை வீழ்ச்சியை சந்தித்த நிறுவனம் இது தான்.

5வது இடத்தில் சுஸூகி நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் மொத்தம் 96,029 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் மொத்தம் 1,00,602 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 4.55 சதவீதம் விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
6வது இடத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 76,254 வாகனங்களை கடந்த ஜூலை மாதம் விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 61,208 வாகனங்களை விற்பவனை செய்திருந்தது தற்போது 24.58 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்த பட்டியலிலேயே அதிக வளர்ச்சியை பெற்ற நிறுவனம் இது தான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டூவீலர் விற்பனை மிக அதிகமாக இருந்து வருகிறது. இதில் ஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனங்களுக்கு இடையே போட்டி இருக்கிறது. கடந்த மாதம் ஹீரோவை பின்னுக்கு தள்ளி ஹோண்டா முதலிடத்தை பிடித்துள்ளது. பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் போட்டி மேலும் வலுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









