ஓலாவை எல்லாம் தூக்கி சாப்பிட போகுது! ஒரே நாளில் இந்தியாவையே அதிர வைத்த ஸ்டார்ட்-அப் நிறுவனம்

அல்ட்ராவொய்லெட் ஆட்டோமோட்டிவ் (Ultraviolette Automotive), இந்தியாவில் செயல்படும் எலக்ட்ரிக் 2-வீலர் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அல்ட்ராவொய்லெட் சமீபத்தில்தான் புதியதாக ஒரு எலக்ட்ரிக் பைக் (Electric Bike) மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)-ஐ அறிமுகம் மார்க்கெட்டை தெறிக்க விட்டது. இத்தோடு அல்ட்ராவொய்லெட் நிறுவனம் நிற்க போவது இல்லையாம். அடுத்த 3 வருஷத்துக்கு என்னென்ன திட்டங்களை வைத்துள்ளோம் என்பதை அல்ட்ராவொய்லெட் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

இந்தியாவின் மென்பொருள் தலைநகரமான பெங்களூரில் இருந்து பல்வேறு எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனங்கள் உருவாகி உள்ளன. தொழிற்நுட்பங்களுக்கும், எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் கொஞ்சம் நெருங்கிய பிணைப்பு உள்ளதால் பெங்களூரில் இருந்து உருவான நிறைய இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுள் ஒன்று, அல்ட்ராவொய்லெட் ஆகும். கடந்த சில வருடங்களாகவே எலக்ட்ரிக் பைக்குகளை மட்டுமே விற்பனை செய்து வந்தது.

ultraviolette plans for next years

அதுவும், எஃப்77 (F77) என்கிற விலைமிக்க, பவர்ஃபுல்லான எலக்ட்ரிக் பைக்குகள் ஆகும். இதனாலேயே, அல்ட்ராவொய்லெட் நிறுவனத்தை பெரியதாக மக்கள் பலருக்கு தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், இனி வரும் மாதங்களில் இந்த பெங்களூர் இவி 2-வீலர் நிறுவனம் இந்திய அளவில் கவனத்தை பெறும். வெளிநாடுகளுக்கு கூட இந்த நிறுவனத்தின் கவனம் சென்றுள்ளது என்பதெல்லாம் தனி கதை.

ஐரோப்பாவில் கால் பதிக்க துடிக்கும் அல்ட்ராவொய்லெட் நிறுவனம் அதில் வெற்றி பெறுமா என்பது தெரியவில்லை. ஆனால், கூடிய விரைவில் இந்தியாவில் நாடு தழுவிய அளவில் அல்ட்ராவொய்லெட்டின் பெயர் பிரபலமாகும் என எதிர்பார்க்கிறோம். ஏனெனில், அப்படிப்பட்ட இரு எலக்ட்ரிக் வாகனங்களை சமீபத்தில் அல்ட்ராவொய்லெட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஷாக்வேவ் (Shockwave), டெசராக்ட் (Tesseract) என்பன அந்த இரு புதிய அறிமுகங்கள் ஆகும்.

ultraviolette plans for next years

ஷாக்வேவ், பெயருக்கு ஏற்ப பெரிய அதிர்வலைகளை இந்தியா முழுவதும் இருக்கிற இளம் தலைமுறையினர் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முக்கிய காரணம், அதன் விலை. ரூ.1.50 லட்சம் என்கிற அதிக மக்கள் ஏற்கக்கூடிய விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இது எண்டூரோ அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிளாக உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.1.50 லட்சம் என்பது முதல் 1,000 முன்பதிவுகளுக்கு மட்டுமே; அதன்பின் விலை ரூ.1.75 லட்சம்.

ஷாக்வேவ் எலக்ட்ரிக் பைக் உடன் டெசராக்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளும் துவங்கப்பட்டுள்ளன. இந்த இ-ஸ்கூட்டரின் விலை ரூ.1.20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றை தொடர்ந்து, அடுத்த 3 வருடங்களில் மேலும் 10 எலக்ட்ரிக் 2-வீலர்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய உள்ளதாக அல்ட்ராவொய்லெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் எலக்ட்ரிக் பைக்குகள் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என இரண்டும் அடங்குகின்றன.

ultraviolette plans for next years

இதற்காக, எஃப் சீரிஸ், எஸ் சீரிஸ், எல் சீரிஸ், எக்ஸ் சீரிஸ் மற்றும் பி சீரிஸ் என 5 விதமான பிரிவுகளை அல்ட்ராவொய்லெட் நிறுவனம் உருவாக்கி உள்ளது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எஃப்77 எலக்ட்ரிக் பைக்குகள் எல்லாம் எஃப் சீரிஸில் வரும். தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஷாக்வேவ் எலக்ட்ரிக் பைக் ஆனது எல் சீரிஸில் இடம்பெறுகிறது. ஷாக்வேவ் போன்று எல் சீரிஸில் அடுத்த 3 வருடங்களில் மேலும் இரு எலக்ட்ரிக் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

டெசராக்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது எஸ் சீரிஸின் கீழ் வருகிறது. இந்த பிரிவிலும் அடுத்த 3 வருடங்களில் 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அல்ட்ராவொய்லெட் பிளான் போட்டுள்ளது. எக்ஸ் சீரிஸில் இருந்து 3 நேக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் ரக எலக்ட்ரிக் பைக்குகளையும், பி சீரிஸில் இருந்து 2 எலக்ட்ரிக் பைக்குகளையும் இந்த நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவர உள்ளது. இதில், பி சீரிஸ் ஆனது விலைமிக்க எலக்ட்ரிக் பைக்குகளை கொண்டதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அல்ட்ராவொய்லெட் நிறுவனத்தின் இந்த எதிர்கால திட்டத்தில் இருந்து ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது, இந்த நிறுவனம் எலக்ட்ரிக் பைக்குகளை தான் அதிகமாக உருவாக்க உள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் பைக்குகளை போன்று நன்கு பெரிய உருவத்தில் உருவாக்கவே அல்ட்ராவொய்லெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது. இதனால், இந்தியாவின் எதிர்கால ஆட்டோமொபைல் துறையில் மிக பெரிய சக்தியாக அல்ட்ராவொய்லெட் உருவெடுப்பதற்கு நிறைய வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 6, 2025, 16:55 [IST]
English summary
Ultraviolette automotive plans for next 3 years new electric vehicles to be launch
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X