மணிக்கு 155கிமீ வேகத்தில் போகும் இ-பைக் லான்சானது! இந்த விலைக்கு இப்படி ஒரு பைக்கானு வாய பிளக்கும் இந்தியர்கள்

அல்ட்ராவைலட் (Ultraviolette) நிறுவனம் அதிக வேகத்தில் பயணிக்கும் எலெக்ட்ரிக் பைக் (Electric Bike)-கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தி இருக்கின்றது. எஃப்77 சூப்பர் ஸ்ட்ரீட் (F77 Super Street) இ-பைக்கையே அது விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 155 கிமீ ஆகும். இதுமட்டுமல்ல இதன் பிக்-அப் திறனும் நம்ப முடியாததாகவே உள்ளது. இந்த வாகனத்திற்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ எனும் வேகத்தை எட்ட வெறும் 2.8 செகண்டுகளே போதுமானதாக இருக்கின்றது.

இத்தகைய அதீத ஆற்றலை உருவாக்கும் வசதிக் கொண்ட மின்சார பைக்காகவே அல்ட்ராவைலட் நிறுவனம் எஃப்77 சூப்பர் ஸ்ட்ரீட்-டை தயார் செய்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 2 லட்சத்து 99 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Ultraviolette f77 superstreet launched

விற்பனைக்கு இப்போது அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும், இதன் டெலிவரி பணிகள் தொடங்க இன்னும் சில காலங்கள் ஆகும் என அல்ட்ராவைலட் நிறுவனம் தெரிவித்து உள்ளது. நடப்பு ஆண்டு மார்ச் மாதத்திலேயே இதன் டெலிவரி பணிகளை தொடங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்து உள்ளது.

ஆனால், துள்ளியமான நாள் பற்றிய விபரம் வெளியாகவில்லை. இருப்பினும், மார்ச் மாத இறுதிக்குள் இது தொடங்கிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த இ-பைக் அதிக வேக திறனை வெளியேற்றக் கூடியது மட்டுமல்ல அதிக ரேஞ்சைத் தரக் கூடியதும் ஆகும். இதில் 10.3 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே பொருத்தப்பட்டு இருக்கின்றது.

இது அதிகபட்சமாக ஓர் முழு சார்ஜில் 323 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். எலெக்ட்ரிக் மோட்டாரை பொருத்த வரை 30 kW திறனை வெளியற்றக் கூடியதே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது 40.2 எச்பி இணையான ஆற்றல் ஆகும். 100 என்எம் டார்க் வரை இது வெளியேற்றும்.

இந்த பைக்கை கார்களுக்கான சார்ஜிங் மையங்களில் வைத்தும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை தேடி செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இதைத்தொடர்ந்து, 3 லெவல்கள் கொண்ட டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுபோன்று இன்னும் பல அட்வான்ஸ்டு அம்சங்களை இந்த இ-பைக்கில் காண முடிகின்றது. அந்தவகையில், ஏபிஎஸ், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவற்றையும் இதில் வழங்கி இருக்கின்றனர். மேலும், பைக்கை எப்போதும் கண்கானிப்பு வளையில் வைத்திருக்கும் விதமாக நிறுவனம் டெல்டா வாட்சை அறிமுகம் செய்திருக்கின்றது. இது சிறிய நகர்வையும் உரிமையாளர்களுக்கு எடுத்துக் காட்டிவிடும்.

இதன் வாயிலாக வாகன திருட்டை முற்றிலும் தவிர்த்துவிட முடியும். இதுமட்டுமில்லைங்க, ஹில் ஹோல்டு அம்சமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. தொடர்ந்து, ஏரோ டிஸ்க், டேங்க் கிரிப், லிவர் குவார்டு, டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் உள்ளிட்டவற்றை பிரத்யேக ஆக்ஸசரீஸ்களாக வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அதிக ஆற்றலை உருவாக்கும் வசதிக் கொண்ட இ-பைக்கை அல்ட்ராவைலட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, January 31, 2025, 17:57 [IST]
English summary
Ultraviolette f77 superstreet launched price features and performance details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+