பைக்குன்னா இதான்டான்னு சொல்லுவீங்க அந்த அளவிற்கு இருக்கும் அல்ட்ராவைலட்டின் புதிய பைக்!
அல்ட்ராவைலட் நிறுவனம் ஏற்கனவே தான் விற்பனை செய்து வரும் f77 மேக்2 பைக்கின் ஸ்டிரீட் வெர்ஷனாக f77 சூப்பர் ஸ்டிரீட் என்ற பைக்கை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த பைgf பல்வேறு அம்சங்கள் மற்றும் அப்டேட்டுகளுடன் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்நிலையில் இந்த பைக்கை ஓட்டி பார்க்க நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு அழைப்பு வந்தது. அதன் பெயரில் எங்கள் குழுவினர் பெங்களூருவில் இந்த பைக்கை ஓட்டி பார்த்தனர்.
இந்த பைக்கை ஓட்டி பார்க்கும்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் மற்றும் பழைய எஃப்77 கேக் பைக்கிற்கும் இந்த புதிய அப்டேட்டில் வந்துள்ள பைக்கிற்கும் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கிறது? பெர்ஃபார்மன்ஸ் எப்படி மாறுபடுகிறது? முக்கியமாக இரண்டு பைக்குகளிலும் ஒரே மாதிரியான அம்சங்கள் எல்லாம் இருக்கின்றன. இந்த இரண்டு பைக்கிற்கும் என்ன வித்தியாசம் என்ற விவரங்களை தான் நாங்கள் விமர்சனமாக வீடியோவாக வெளியிட்டுள்ளோம். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்த f77 சூப்பர்ஸ்ட்ரீட் பைக்கை பொறுத்தவரை f77 மேக் 2 பைக்கில் இருக்கும் அதே அம்சங்கள் தான் பெரும்பாலும் இருக்கிறது. இதன் முன்பக்க பகுதி மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 15% கூடுதல் ஏரோடைனமிக்ஸ் உடன் இருக்கும் வகையில் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் உள்ள ஹெட் லைட் முதல் பல்வேறு அம்சங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

அதே நேரம் இந்த பைக்கில் உள்ள பேட்டரி மற்றும் மோட்டார் ஆப்ஷன்களில் எந்தவித அம்ச மாற்றங்களும் இல்லாமல் இருக்கிறது. அதை பேட்டரி மற்றும் மோட்டார் ஆப்ஷன் உடன் இந்த பைக் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்கை தெருக்களில் ஒட்டிச் செல்ல சிறப்பாக இருக்கிறது. இதனால் பலர் இந்த பைக்கை விரும்பி வாங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








