இந்தியராய் நாம் பெருமைப்படனும்... பெங்களூருவில் உற்பத்தியாகும் பைக்குகள் ஐரோப்பியர்கள் கையில்!!

இந்தியாவில் இருந்து உலக நாடுகளின் எலெக்ட்ரிக் வாகனத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடன், அல்ட்ரா வயலட் (Ultraviolette) நிறுவனம் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய ஐரோப்பிய சந்தைகளில் அதிகாரப்பூர்வமாக கால் பதித்துள்ளது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த இந்திய இவி நிறுவனத்தின் உலகளாவிய விரிவாக்கப் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

எலெக்ட்ரிக் வாகனத் துறையை மறுவரையறை செய்து, இந்தியப் பொறியியல் திறனை உலக அரங்கில் வெளிக்கொணர்வதே அல்ட்ரா வயலட் நிறுவனத்தின் முக்கிய இலக்காகும். ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் சந்தைகளில் நுழைவதன் மூலம், ஐரோப்பாவின் வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகனத் துறையில் அல்ட்ரா வயலட் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.

ultraviolette f77 electric bikes in portugal and spain

செயல்திறன்மிக்க எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் உற்பத்தியில் முன்னோடி நிறுவனமாக, அல்ட்ரா வயலட் தனது உலகளாவிய இருப்பை வலுப்படுத்துகிறது. இந்த விரிவாக்கத்தின் மூலம், நவீன கண்டுபிடிப்புகள், உயர்தர பாதுகாப்புத் தரங்கள், எதிர்கால வடிவமைப்பு மற்றும் பல வருட ஆய்வுகளின் விளைவாக உருவான தொழில்நுட்பம் கொண்ட எலெக்ட்ரிக் பைக்குகளை அல்ட்ரா வயலட் நிறுவனம் ஐரோப்பிய சந்தைக்குக் கொண்டுவருகிறது.

ரைனோ எலெக்ட்ரிக் மோட்டார் (Rhino Electric Motor) என்ற அதன் பிரத்யேக இறக்குமதியாளர் மற்றும் விநியோக கூட்டணி நிறுவனத்துடன் இணைந்து இந்த விரிவாக்க பணிகளை அல்ட்ரா வயலட் மேற்கொள்ள துவங்கியுள்ளது. இந்த நிலையில், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் தனது பிரபலமான எஃப்77 மேக் 2 (F77 MACH 2) மற்றும் எஃப்77 சூப்பர்ஸ்ட்ரீட் (SuperStreet) எலெக்ட்ரிக் பைக்குகளை ரைனோ எலெக்ட்ரிக் மோட்டாரின் நெட்வொர்க் மூலம் அல்ட்ரா வயலட் அறிமுகப்படுத்தி உள்ளது.

ultraviolette f77 electric bikes in portugal and spain

அல்ட்ரா வயலட்டின் எஃப்77 மேக் 2 ஆனது பந்தய பைக்குகளைப் போன்ற ஆக்ரோஷமான வடிவமைப்புடன், வேகமான பயணத்தை வழங்குகிறது. எஃப்77 சூப்பர்ஸ்ட்ரீட் ஆனது வசதியான இருக்கை அமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட பணிச்சூழலியல் மூலம், சாகச பயண அனுபவத்துடன் கூடிய சவுகரியமான பயணத்தை உறுதி செய்கிறது.

அல்ட்ரா வயலட் நிறுவனத்தின் எஃப்77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகளாக விளங்குகின்றன. வெறும் 2.8 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 60 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்ட இவை, 10.3 kWh பேட்டரி பேக் மற்றும் 30 kW வரையிலான இயக்க ஆற்றலில் இயங்க கூடியவை ஆக உள்ளன.

இந்த எஃப்77 எலெக்ட்ரிக் பைக்குகளின் எலெக்ட்ரிக் மோட்டார் ஆனது அதிகப்பட்சமாக 100 Nm டார்க் திறனை உருவாக்குகிறது. இதன் விளைவாக, விரைவான முடுக்கம், சுறுசுறுப்பான ஹேண்ட்லிங் மற்றும் 155 கிமீ/மணி உச்ச வேகத்தை இந்த அல்ட்ரா வயலட் எலெக்ட்ரிக் பைக்குகள் எட்டக் கூடியவைகளாக உள்ளன.

ultraviolette f77 electric bikes in portugal and spain

அல்ட்ரா வயலட் நிறுவனத்தின் பிரத்யேக செயற்கை நுண்ணறிவு அமைப்பான வயலட் ஏஐ மற்றும் போஸ்ச் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட தொழில்துறையின் முன்னணி சுவிட்சபிள் டூயல்-சேனல் ஏபிஎஸ் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இந்த எலெக்ட்ரிக் பைக்குகள் உருவாக்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி, 10 நிலைகளில் ரீ-ஜெனெரேட்டிவ் பிரேக்கிங், 4 நிலைகளில் டிராக்‌ஷன் கண்ட்ரோல், டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் உள்ளிட்டவையும் அல்ட்ரா வயலட்டின் எஃப்77 எலெக்ட்ரிக் பைக்குகளில் இடம்பெறுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அசத்தலான தோற்றம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பாக அல்ட்ரா வயலட் எஃப்77 எலெக்ட்ரிக் பைக்குகள் விளங்குகின்றன. இவற்றின் மூலமாக, இவை உற்சாகமான பயண அனுபவத்தை உறுதி செய்கின்றன. பெங்களூருவில் உற்பத்தி செய்யப்படும் இந்த சூப்பர் எலெக்ட்ரிக் பைக்குகள் உண்மையில் நம் இந்தியாவை காட்டிலும் போர்ச்சுகல், ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாட்டு சந்தைகளுக்கு மிகவும் ஏற்றவையாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 18, 2025, 23:45 [IST]
English summary
Ultraviolette launched f77 electric bikes in spain and portugal check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X