300கிமீ-க்கு சார்ஜ் கவலையே இல்ல... 100% சார்ஜ் நிரப்பிவிட்டால் அதுபாட்டுக்கு ஓடும்! புது அல்ட்ராவொய்லெட் பைக்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், அல்ட்ராவொய்லெட் (Ultraviolette) நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'எக்ஸ்47 கிராஸ்ஓவர்' (X47 Crossover) என்கிற பெயரில் அதன் புதிய நாக்டு-ரக எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு கொண்டுவந்து உள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

புதிய அல்ட்ராவொய்லட் எக்ஸ்47 கிராஸ்ஓவர் பைக்கின் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.2.49 லட்சம் ஆகும். இந்த விலை பின்னர் ரூ.2.74 லட்சமாக உயரும் என அல்ட்ராவொய்லட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கான புக்கிங்குகள் (Bookings) ஏற்றுக்கொள்ளப்பட துவங்கியுள்ளன. அக்டோபர் 25 முதல் டெலிவிரிகள் (Deliveries) துவங்கப்பட உள்ளன.

ultraviolette x47 crossover launch

எக்ஸ்47 ஆனது சாகசப் பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு எலக்ட்ரிக் இருசக்கர வாகனமாக வெளிவந்துள்ளது. அதற்கேற்ப இதில் ஆஃப்-ரோட் அம்சங்கள், மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகள் (ADAS) மற்றும் சாலை & ஆஃப்-ரோட் பயன்பாட்டிற்கு ஏற்ற வடிவமைப்பு ஆகியவை உள்ளன. இது பல அட்வென்ச்சர் பைக்களுக்குப் போட்டியாக களமிறங்கப்பட்டு உள்ளது.

இந்த எக்ஸ்47 அட்வென்ச்சர் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 40 குதிரைத்திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் ஆனது 610 என்.எம் வரையிலான டார்க் திறனை சக்கரத்திற்கு வழங்கும் திறன் கொண்டதாக உள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டாருக்கு ஆற்றலை வழங்குவதற்காக வழங்கப்பட்டுள்ள 10.7kWh பேட்டரி பேக்கை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 323கிமீ தூரம் வரை செல்லலாம்.

ultraviolette x47 crossover launch

இந்த எலக்ட்ரிக் பைக்கின் உச்சப்பட்ச வேகம் 145கிமீ/மணி ஆகும். 0 முதல் 100 கிமீ/மணி வேகத்தை வெறும் 8.1 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய எக்ஸ்47 பைக்கில் 1.6kW ஆன்-போர்டு சார்ஜர் (Charger) வழங்கப்பட்டுள்ளது. பேட்டரி சிஸ்டத்தில் சார்ஜ் பாதுகாப்பு மற்றும் எர்த் லீக்கேஜ் பாதுகாப்பு போன்ற அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த எலக்ட்ரிக் பைக்கின் டிசைனைப் பொறுத்தவரை, எக்ஸ்47 மாடலானது அல்ட்ராவொய்லட் எஃப்77 (F77) எலக்ட்ரிக் பைக்கின் வடிவமைப்பை ஒத்திருக்கிறது. குறிப்பாக, ஹெட்லைட் டிசைன் மற்றும் கோண வடிவமைப்பு ஆகியவை இரு பைக்கிலும் ஒரே மாதிரியாக உள்ளன. இவற்றுடன் இந்த எலக்ட்ரிக் பைக் சிங்கிள்-பீஸ் இருக்கை, வார்ப்பு அலுமினிய கட்டுமானம், விண்ட்ஸ்கிரீன், உயரமான ஹேண்டில்பார்ஸ் மற்றும் நக்கிள் கார்ட்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ultraviolette x47 crossover launch

இந்த எக்ஸ்47 எலக்ட்ரிக் பைக்கில் "டெசர்ட் விங்" எடிஷனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அல்ட்ராவொய்லட் ஹைப்பர்சென்ஸ் (UV Hypersense) என அழைக்கப்படும் அடாஸ் (ADAS) மூலம் ரேடார் உதவியுடன் பின்பக்கத்தில் ஏதேனும் வாகனம் மோத வந்தால் அதுகுறித்த எச்சரிக்கை, சாலையில் பாதையை மாற்ற உதவி, முன்னால் செல்லும் வாகனங்களை முந்திச் செல்ல எச்சரிக்கை போன்ற பல அம்சங்களை பெறலாம்.

இவற்றுடன், கூடுதல் தொழில்நுட்ப அம்சங்களாக டூயல்-சேனல் ஏபிஎஸ் (ABS), நான்கு நிலைகளில் டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஒன்பது-நிலை ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் கனெக்டிவிட்டி உடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை வழங்கப்பட்டு உள்ளன. அடாஸ் தொடர்பான துணை திரையும் இந்த எலக்ட்ரிக் பைக்கில் உள்ளது.

ultraviolette x47 crossover launch

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய அல்ட்ராவொய்லட் எக்ஸ்47 ஆனது சாலைப் பயணங்களுக்கு ஏற்ற மின்சார செயல்திறன் மற்றும் சாகச ஸ்டைலிங் ஆகியவற்றுடன் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வழங்குகிறது. இதன் விலை, பல பிரீமியம் பெட்ரோல் பைக்குகள் மற்றும் சில எலக்ட்ரிக் பைக்குகளை விட குறைவாக உள்ளது. ஆரம்ப விலையில் இந்த பைக்கை வாங்குபவர்கள் பலன் பெறலாம்.

புதிய அல்ட்ராவொய்லட் எக்ஸ்47 எலக்ட்ரிக் பைக்கின் விலை உயர வாய்ப்புள்ளதால் வாங்க விரும்புபவர்கள் உடனே புக் செய்வது நல்லது. ஓட்டுநர் சௌகரியம், அம்சங்கள் மற்றும் ரேஞ்ச் ஆகியவை எக்ஸ்47 பைக்கை மற்ற எலக்ட்ரிக் பைக்குகள் மற்றும் பெட்ரோல் கிராஸ்-செக்மென்ட் மோட்டார்சைக்கிள்கள் உடன் போட்டியிட வைக்கிறது. இதனால், இந்த புதிய எலக்ட்ரிக் பைக் மார்க்கெட்டில் கவனிக்கத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 23, 2025, 17:11 [IST]
English summary
Ultraviolette launches new x47 crossover electric bike price features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X