பாக்குறவங்க எல்லாம் வெளிநாட்டு தயாரிப்புனு நினைக்க போறாங்க! இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கட்டுமஸ்தான இ-ஸ்கூட்டர்

இந்தியாவைச் சேர்ந்த மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் அல்ட்ராவைலட் (Ultraviolette). இந்த நிறுவனம் புதிதாக ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. டெஸ்ஸரக்ட் (Ultraviolette Tesseract), இதுவே நிறுவனம் புதிதாக விற்பனைக்குக் களமிறக்கி இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தைக் கொண்டதாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இருக்கின்றது. இது வெளிநாட்டு நிறுவனத்தின் தயாரிப்பாக இருக்கக் கூடும் என நினைக்கும் அளவிற்கே அதன் அசத்தலான ஸ்டைல் உள்ளது.

குறிப்பாக, இது இந்திய நிறுவனத்தின் தயாரிப்புதான பார்த்து வாயடைத்துப் போகும் வகையிலேயே அதன் லுக் இருக்கின்றது. இந்த ஸ்கூட்டருக்கு ரூ. 1.45 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆனால், அறிமுகமாக ரூ. 1.2 லட்சத்திற்கே டெஸ்ஸரக்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைச் செய்ய இருப்பதாக அல்ட்ராவைலட் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

Ultraviolette tesseract images

ஆனால், இந்த விலையில் முதல் 10 ஆயிரம் பேரால் மட்டுமே வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். டெஸ்ஸரக்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஓர் முழு சார்ஜில் 261 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

ரேஞ்சை தருவதில் மட்டுமல்ல அதிக வேகத்தில் செல்வதிலும் சிறந்த வாகனமாக இது காட்சியளிக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 125 கிமீ ஆகும். இதில் பொருத்தப்பட்டு இருக்கும் மோட்டார் அதிகபட்சமாக 20 எச்பி ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.

இதுமட்டுமல்ல இதற்கு பூஜ்ஜியத்தில் இருந்து 80 கிமீ வேகத்தை எட்ட வெறும் 2.9 செகண்டுகளே போதுமானது. சிறப்பம்சங்களையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மிக தாராளமாக வழங்கி இருக்கின்றது அல்ட்ராவைலட். அந்தவகையில், 7 அங்குல டிஎஃப்டி திரை, ஆன்-போர்டு நேவிகேஷன் சிஸ்டம், எல்இடி லைட்டுகள் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, முன் மற்றும் பின் பக்கத்தில் ரேடார் தொழில்நுட்பமும் இந்த இ-ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அட்வான்ஸ்டு அம்சத்தின் வாயிலாக ரைடரால் பிளைண்டு ஸ்பாட் மானிட்டரிங், லேன் மாற்றுவதற்கான அசிஸ்ட், பின் பக்க மோதலை தவிர்ப்பதற்கான அம்சம் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த அம்சத்தை இந்தியாவில் வேறு எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனால்தான் இது இந்திய தயாரிப்பு-தானா என்கிற சந்தேகம் உங்களுக்கு எழும்பும். இதுமட்டுமல்ல இருக்கைக்கு அடியில் பெரிய ஸ்டோரேஜ் வசதி மற்றும் 14அங்குல அளவுள்ள வீல்கள் உள்ளிட்டவற்றையும் இது கொண்டிருக்கும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் அடுத்த ஆண்டே தொடங்கப்படும் என கூறப்பட்டு உள்ளது. 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இதந் டெலிவரியை எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே கம்மி விலையில் இந்தியர்களைக் கவர வந்திருக்கின்றது அல்ட்ராவைலட் டெஸ்ஸரேக்ட். இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நாங்கள் நம்புகின்றோம். இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 5, 2025, 13:40 [IST]
English summary
Ultraviolette launches tesseract electric scooter in india at rs 1 20 lakh for initial customers
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+