ஓசூரில் கம்பெனி வெச்சவங்க தோற்றதா வரலாறு இருக்கா? மேட்-இன்-தமிழ்நாடு பைக்கை டபுள் விலை கொடுத்து வாங்க போறாங்க!

அல்ட்ராவொய்லெட் (Ultraviolette), பெங்களூருவை சேர்ந்த எலக்ட்ரிக் பைக் (Electric Bike) உற்பத்தி நிறுவனம். குறிப்பாக, சூப்பர் பைக்குகளை எலக்ட்ரிக் தரத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக உருவாக்கிய நிறுவனமும் அல்ட்ராவொய்லெட் ஆகும். தற்போதைக்கு எஃப்77 (F77) என்கிற எலக்ட்ரிக் சூப்பர் பைக்குகளை மட்டுமே விற்பனை செய்கிறது.

சமீபத்தில்தான், ஷாக்வேவ் (Shockwave) என்கிற எலக்ட்ரிக் பைக்கையும், டெசராக்ட் (Tesseract) என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும் (Electric Scooter) அல்ட்ராவொய்லெட் நிறுவனம் அறிமுகம் செய்தது. ஆனால், இந்த புதிய அல்ட்ராவொய்லெட் எலக்ட்ரிக் 2-வீலர்களுக்கான முன்பதிவுகள் அடுத்த 2026ஆம் ஆண்டில் இருந்துதான் துவங்கப்படும் என கூறப்படுகிறது. அதுவரையில் எஃப்77 எலக்ட்ரிக் பைக்குகள் மட்டுமே விற்பனையில் இருக்கும்.

ultraviolette electric motorcycles in europe

அல்ட்ராவொய்லெட் நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவது மட்டுமின்றி, அல்ட்ராவொய்லெட் வாகனங்களை இந்தியாவை தாண்டி வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லவும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அல்ட்ராவொய்லெட் நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே சில வெளிநாடுகளிலும் தனது நெட்வொர்க்கை விரிவுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் எஃப்77 எலக்ட்ரிக் பைக் சற்று விலைமிக்கதாக இருப்பதால், ஐரோப்பிய, அமெரிக்க சந்தைகள் இந்த பைக்கிற்கு ஏற்றதாக இருக்கும் என அல்ட்ராவொய்லெட் நம்புகிறது.

இந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக, இங்கிலாந்திற்குள் அல்ட்ராவொய்லெட் நுழைகிறது. இதற்காக அங்கு செயல்படும் மோட்டோமோண்டோ (MotoMondo) நிறுவனத்துடன் அதிகாரப்பூர்வமாக அல்ட்ராவொய்லெட் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இங்கிலாந்து மட்டுமின்றி, ஐரோப்பிய கண்டத்தின் பெனெலக்ஸ் (Benelux) பகுதியிலும் அல்ட்ராவொய்லெட் தனது நெட்வொர்க்கை விரிவுப்படுத்தி வாகனங்களை விற்பனை செய்ய உள்ளது. இந்த பெனெலக்ஸ் என்பது சிறிய பகுதி என நினைத்துவிட வேண்டாம்.

பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்ஸம்பர்க் என்கிற 3 நாடுகளை உள்ளடக்கியது இந்த பெனெலக்ஸ் பகுதி ஆகும். இந்த 3 நாடுகளின் பெயர்களில் உள்ள முதல் எழுத்துகளின் சுருக்கமே பெனெலக்ஸ் ஆகும். மற்ற இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களை போன்று, அல்ட்ராவொய்லெட் நிறுவனமும் இந்திய வாகனங்களை உலக நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்கிற கொள்கை உடன் செயல்படுகிறது.

அந்த கொள்கையின் ஒரு பகுதியாகவே ஐரோப்பாவின் முக்கியமான நாடுகளில் அல்ட்ராவொய்லெட் நிறுவனம் நுழைகிறது. இந்த ஐரோப்பிய நாடுகளில் நேரடியாக தனது எலக்ட்ரிக் பைக்குகளை அல்ட்ராவொய்லெட் நிறுவனம் விற்பனை செய்ய போவதில்லை. இந்தியாவில் பைக்குகளை உற்பத்தி செய்து அந்த நாடுகளில் இறக்குமதி செய்து விற்பனை செய்ய உள்ளது. இதற்காகவே மோட்டோமோண்டோ நிறுவனத்துடன் அல்ட்ராவொய்லெட் கூட்டணி சேர்ந்துள்ளது.

இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் அல்ட்ராவொய்லெட் எலக்ட்ரிக் பைக்குகளை பத்திரமாக இறக்குமதி செய்து, மேற்கூறப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்வதுதான் மோட்டோமோண்டோ நிறுவனத்தின் பணி ஆகும். இவ்வாறு மோட்டார்சைக்கிள்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து அவற்றை விற்பனை செய்வதில் சுமார் 25 வருடங்கள் அனுபவம் வாய்ந்த நிறுவனமாக மோட்டோமோண்டோ விளங்குகிறது.

முதற்கட்டமாக, பவர்ஃபுல்லான மற்றும் விலைமிக்க எஃப்77 மேக் 2 ரெகான் (F77 MACH 2 RECON) எலக்ட்ரிக் பைக்கை ஐரோப்பிய சந்தையில் அல்ட்ராவொய்லெட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஐரோப்பாவில் அல்ட்ராவொய்லெட் எஃப்77 மேக் 2 ரெகான் பைக்கின் ஆரம்ப ஆன்-ரோடு விலை 8,499 யூரோக்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் தற்சமயம் இதன் மதிப்பு ரூ.8.24 லட்சத்திற்கும் அதிகமாகும். இந்தியாவில் உள்ள இந்த எலக்ட்ரிக் பைக்கின் விலையை காட்டிலும் இது டபுள் மடங்கு அதிகமாகும்.

ஆனால் உண்மையில், இது ஐரோப்பிய கஸ்டமர்களை கவர்வதற்காக தற்போதைக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு விலை ஆகும். 8,499 யூரோ விலை என்பது வருகிற ஜூன் 30ஆம் தேதி வரையில் மட்டுமே அமலில் இருக்கும் சிறப்பு விலை ஆகும். அதன்பின், அங்கு எஃப்77 மேக் 2 ரெகான் எலக்ட்ரிக் பைக்கின் ஆன்-ரோடு விலைகள் 9,399 யூரோக்களாக (ரூ.9.12 லட்சம்) அதிகரிக்கப்பட உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 25 வருடங்களில் வட ஐரோப்பாவில் பல்வேறு பகுதிகளில் வலுவான சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க்கை மோட்டோமோண்டோ உருவாக்கி வைத்துள்ளது. அவற்றில் நேரடியாக அல்ட்ராவொய்லெட் தனது எலக்ட்ரிக் பைக்குகளை கொண்டுப்போய் விற்பனை செய்ய வேண்டியதுதான். ரூ.8.24 லட்சத்தில் எலக்ட்ரிக் பைக் என்பது நமக்கு வேண்டுமாயின் விலைமிக்கதாக தெரியலாம், ஆனால் வட ஐரோப்பியர்களுக்கு இது ஏற்கக்கூடிய விலையே ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 17, 2025, 21:29 [IST]
English summary
Ultraviolette launching electric motorcycles in european countries
மேலும்... #ultraviolette #electric bike
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+