இந்தியாவே எதிர்பார்த்த பைக் நாளை வெளியாகிறது! இதுல அப்படி என்ன இருக்கும் தெரியுமா?

அல்ட்ராவைலட் நிறுவனம் இந்தியாவில் புதிய நேக்கட் பைக்கை அந்நிறுவனம் நாளை (செப் 23) வெளியிட தயாராக உள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே உலக தர தயாரிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வாகனம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மக்கள் பலர் இந்த வாகனத்தை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இது குறித்த சில முக்கியமான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் அல்ட்ராவைலட், இந்நிறுவனம் நாளை அதாவது செப் 23ம் தேதி தனது புதிய நேக்கட் பைக்கை வெளியிடப்பேவாதக தெரவித்துள்ளது. இது குறித்த டீசரையும் வெளியிட்டுள்ளது. இது குறித்த எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

Ultraviolette Naked Bike

இந்தடீசரில் "Let's Get Naked" என்ற வாசகம் இடம் பெற்றள்ளது. இதன் மூலம் இந்த பைக் Naked பைக்காக இருக்கும் என அறியப்படுகிறது. வழக்கமாக முழுமையாக மூடப்பட்ட பைக்கை தான் அந்நிறுவமன் தயாரித்து வந்த நிலையில் அதில் மாறுபட்டு நேக்கட் பைக்கை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த பைக் சிம்பிளாக பேர் டிசைனில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த பைக்கின் டிசைன் மொழி பெர்ஃபார்மென்ஸ் மற்றும் துடிப்பான பைக்காக இதை மாற்றம் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலையில் பயணிக்கும் போது மற்றவர்கள் திரும்பி பார்க்கும் வகையில் இந்த பைக் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்நிறுவனம் இதற்கு முன்னர் எஃப்77 மற்றும் எஃப் 77 மேக் 2 ஆகிய பைக்குகளை முழுமையாக மூடப்பட்ட பைக்காக உருவாக்கியது.

Ultraviolette Naked Bike

இந்நிறுவனத்தின் முதல் நேக்கட் பைக் இது கிடையாது. ஏற்கனவே இந்நிறுவனம் எஃப்77 சூப்பர் ஸ்டிரீட் என்ற பைக்கை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் தற்போது வரப்போகும் பைக் முற்றிலுமாக புதிய பைக்காக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே எஃப்77 ரேஞ்சில் தான் இந்த பைக்கும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இதற்கிடையில் கடந்தாண்டு இந்நிறுவனம் ஷாக்வேவ் மற்றும் டெஸ்ஸர்ஆக்ட் என்ற 2 தயாரிப்புகளை காட்சிப்படுத்தியது. இதில் டெஸ்ஸர்ஆக்ட் என்ட்ரிலெவல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகமானது. இதன் விலை ரூ1.45 லட்சம் தான். அது அல்ட்ராவைலட் நிறவனத்தின் புதிய ஃபிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட மாஸ் மார்கெட் தயாரிப்பாகும்.

Ultraviolette Naked Bike
இந்த வாகனத்தில் பிஎம்எஸ் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 20.1 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். அதே நேரத்தில் 3 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. அதன்படி பேஸ் வேரியன்ட் 3.5kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. மிட் வேரியன்டில் 5kWh பேட்டரி பேக் இருக்கிறது. டாப் வேரியன்டில் 6kWh பேட்டரி பேக் உள்ளது. இது 261 கி.மீ ரேஞ்சை வழங்கும். இந்த ஸ்கூட்டர் 0-60 கி.மீ வேகத்தை வெறும் 2.9 நொடியில் பிக்கப் செய்துவிடும்.

அல்ட்ரா வைலட் ஷாக்வேவ் பைக்கை பொருத்தவரை எண்டிரோ பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக் ரூ1.75 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பைக் புதிய லைட் மோட்டார் சைக்கிள் ஃபன்டிரோ என்ற பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக் 14.5 பிஎச்பி பவரையும், 505 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் திறன் கொண்டது.

இந்த வாகனம் 120 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த வாகனம் 0-60 கி.மீ வேகத்தை வெறும் 2.9 நொடியில் பிக்கப் செயஅதுவிடும். இந்த பைக் 190 கிலோ எடை கொண்டது. இதில் 4kWh பேட்டரி பேக் உள்ளது. இது 165 கி.மீ ரேஞ்சை வழங்கும். இந்த பைக் 20-80 சதவீத பேட்டரியை 30 நிமிடத்தில் சார்ஜ் ஏற்றிவிடும். இதற்கு சூப்பர் நோவா ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது.

இதன் சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்பக்கம் 37மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க், பின்பக்கம் 200 மிமீ டிராவல் மற்றும் மோனோ ஷாக் சஸ்பென்சன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதன் முன்பக்கம் 19 இன்ச் மற்றும் பின்பக்கம் 17 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங்கை பொருத்தவரை முன்பக்கம் 270மிமீ பின்பக்கம் 220 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அல்ட்ராவைலட் நிறுவனம் தனது எஃப்77 ரேஞ்சிலேயே மற்றொரு நேக்கட் பைக்கை நாளை களம் இறக்கும் என எதிர்பார்க்கலாம். இதுவும் வழக்கம் போல நல்ல வரவேற்ப்பை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை குறைந்த விலை பைக்காக இந்தால் விற்பனை அதிகமாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, September 22, 2025, 14:05 [IST]
English summary
Ultraviolette naked bike new model reveal tomorrow specs what to expect
மேலும்... #ultraviolette #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X