எத்தனை பேரு இது பெட்ரோல் பைக்குனு நினைச்சு ஏமாற போறாங்களோ.. பெங்களூரு நிறுவனம் அறிமுகம் செய்த தரமான இ-பைக்!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் அல்ட்ராவைலட் (Ultraviolette). இந்த நிறுவனம் இன்று ஒரே நாளில் தன்னுடைய இரண்டு மின்சாரத்தில் இயங்கம் இரண்டு சக்கர வாகன மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஒன்று டெஸ்ஸரேக்ட் (Tesseract) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். மற்றொன்று, ஷாக்வேவ் (Shockwave) எலெக்ட்ரிக் பைக் மாடல் ஆகும். இந்த பதிவில் நாம் ஷாக்வேவ் எலெக்ட்ரிக் பைக் மாடல் பற்றிய விபரங்களையே பார்க்க இருக்கின்றோம்.

பார்க்க பெட்ரோலில் இயங்கும் மோட்டார்சைக்கிளைப் போல இருக்கும் இது மின்சாரத்தில் மட்டுமே இயங்கும். இதற்கு புக்கிங் பணிகள் நாட்டிகள் தொடங்கிவிட்டன. ரூ. 999 இருந்தாலே போதும் இதை புக் செய்துக் கொள்ள முடியும். ஆனால், இந்த பைக்கின் டெலிவரி பணிகள் அடுத்த ஆண்டிற்கே திட்டமிடப்பட்டு உள்ளது.

Shockwave ultraviolette s latest ev

இதற்கு அறிமுக விலையாக ரூ. 1.49 லட்சம் நிர்ணயம் செய்யப்பபட்டு உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆனால், இந்த விலையில் ரொம்ப நாளைக்கு இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்காது என்பது கவனிக்கத்தகுந்தது. முதல் ஆயிரம் வாடிக்கையாளர்களால் மட்டுமே இந்த விலையில் ஷாக்வேவ் எலெக்ட்ரிக் பைக்கை வாங்கிக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு பின்னர் இந்த பைக்கை ரூ. 1.75 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைச் செய்ய நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. இந்த பைக்கில் ஓர் முழு சார்ஜில் 165 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதற்காக 3.5 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, 14.5 பிஎச்பி ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே இதில் வழங்கப்பட்டு உள்ளது. இது வெறும் 2.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ வேகத்தை எட்டிவிடும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.

அதேவேளையில், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 120 கிமீ ஆகும். வேகத்தில் மட்டுமல்ல நவீன கால அம்சங்கள் மிக தாரளமாக இது தன்னுள் தாங்கியிருக்கின்றது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் சர்வதேச சந்தைக்கான மின்சார பைக்காக இதனை அல்ட்ராவைலட் தயார் செய்திருக்கின்றது.

இதற்கேற்ப இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் இதை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றோம் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இதன்படி, இந்தியாவிற்கு அடுத்தபடியாக இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் ஃபிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலேயே இந்த பைக்கை விற்பனைக்கு வழங்க அல்ட்ராவைலட் திட்டமிட்டு இருக்கின்றது.

2026 ஆம் ஆண்டு இந்திய அறிமுகத்திற்கு பின்னரே இது உலக சந்தையில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் வருகை ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 போன்ற பெட்ரோல் பைக் மாடல்களுக்கும் போட்டியாக அமைந்திருக்கின்றது. குறிப்பாக விலை விஷயத்தில் இது மிகப் பெரிய சவாலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஒரே ஒரு எலெக்ட்ரிக் பைக் மாடலை விற்பனைக்கு வழங்கி வந்தநிலையில் தற்போது ஓர் புதிய இ-பைக்கையும், இ-ஸ்கூட்டரையும் அல்ட்ராவைலட் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 5, 2025, 18:57 [IST]
English summary
Ultraviolette shockwave an electric enduro bike with 165 km range and 120 kmph speed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+