60 ஆயிரம் பேர் இந்த வண்டிய புக் பண்ணிட்டாங்க! அப்படி இதுல என்னதான் இருக்குது?

அல்ட்ராவைலட் நிறுவனம் அடுத்தாண்டு மாஸ்மார்கெட் எலெக்ட்ரிக் டூவீலர் மார்கெட்டில் நுழைகிறது இந்த நிறுவனத்திற்கு தற்போதே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிறுவனத்தின் டெஸ்ஸர்ஆக்ட் ஸ்கூட்டருக்கு புக்கிங் குவிந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

அல்ட்ராவைலட் ஆட்டோமெட்டார் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் ஏற்கனவே எலெக்ட்ரிக் பைக்குகளை தயாரித்து வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க களம் இறங்கியுள்ளது.

Ultraviolette Tesseract Booking

இந்நிறுவனம் டெஸ்ஸர்ஆக்ட் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும், ஷாக் வேவ் என்ற எலெக்ட்ரிக் ஆஃப்ரோடு அம்சம் கொண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது இந்த ஸ்கூட்டர்கள் ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் வரும் 2026ம் ஆண்டு முதல் காலாண்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

இதில் டெஸ்ஸர்ஆக்ட் ஸ்கூட்டரை இதுவரை 60 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அதே போல ஷாக்வேவ் எலெக்ட்ரிக் ஸ்கட்டரை 7000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது .இந்த ஸ்கூட்டருக்கான டெலிவரி துவங்கியதும் மேலும் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Ultraviolette Tesseract Booking

அல்ட்ராவைலட் டெஸ்சர்ஆக்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பல்வேறு அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது. அதில் செக்மெண்டிலேயே முதன் முறையாக உள்ள பல்வேறு அம்சங்கள் இடம் பெற வுள்ளன. இந்த வாகனம் ரூ1.20 லட்சம் என்ற அறிமுக விலையில் விற்பனையக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. இது முதல் 50 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக புக்கிங் குவிந்ததால் இந்த ஆஃபரை நீடித்துள்ளது.

இந்த ஸ்கூட்டருக்கு கடந்த மார்ச் மாதமே 50 ஆயிரம் புக்கிங் குவிந்துவிட்டது. அடுத்த 10 ஆயிரம் புக்கிங் கடந்த 3 மாதத்தில் வந்துள்ளது. தற்போது இந்த ஸ்கூட்டரை புக் செய்பவர்கள் ரூ1.45 லட்சம் என்ற விலையில் தான் இதை வாங்க முடியும். இந்த ஸ்கூட்டரில் உள்ள முழுமையான் அம்சங்கள் குறித்த விபரங்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை.

Ultraviolette Tesseract Booking

இந்நிறுவனம் பேஸ் வேரியன்டில் 3.5 கிலோ வாட் ஹவர் பேட்டரிபேக் பொருத்தப்பட்டுள்ளது. இதுவே டாப் வேரியன்டில் 5 கிலோ வாட் ஹவர் மற்றும் 6 கிலோ வாட் என என இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்கூட்டரில் வயர்லெஸ் சார்ஜிங், ரேடார் சிஸ்டம், பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன் உடன் ரியவர் வீயூ மிரர், டேஷ்கேம், உள்ளிட்ட அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்கூட்டர் 125 கி.மீ வேகத்தில பயணிக்கும் திறன் கொண்டது. அதே நேரம் இதில் டிராக்ஷன் கண்ட்ரோல், டுயல் சேனல் ஏபிஎஸ், 4 லெவல் ரீஜென், ஹில் ஹோல்டு உள்ளிட்ட அம்சங்களும் இடம் பெறுகிறது.

ஷாக் வேவ் எலெக்ட்ரிக் எண்டிரோ வாகனம் ரூ1.50 லட்சம் என்ற அறிமுகக விலையில் முதல் 1000 வாடிக்கையாளர்களுக்கு முன்பதிவு செய்ப்பட்ட. தற்போது ரூ1.75 லட்சம் என்ற விலையில் முன்பதிவு செய்யப்படுகிறது. இதில் ஏகப்பட்ட ஆஃப்ரோடு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வாகனம் நிச்சயம் எலெக்ட்ரிக் வாகன உலகில் புரட்சியை செய்யலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அல்ட்ராவைலட் நிறுவனம் இந்தியாவில் நல்ல மதிப்பை பெற்றுள்ள நிலையில் இந்த நிறுவத்தின் வாகனம் நிச்சயம் மிகப்பெரிய அளவில் மக்களை ஈர்க்கும் வகையில் இருக்கிறது. இந்த வாகனங்களுக்கான புக்கிங்கே இந்த வாகனத்தின் வெற்றியை காட்டுகிறது. இதன் டெலிவரிதுவங்கும் போது இந்த வாகனசெக்மெண்டில் ஒரு புரட்சியே ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 21, 2025, 22:59 [IST]
English summary
Ultraviolette tesseract booking crosses 60000 shockwave 7000
மேலும்... #ultraviolette #india #electric vehicles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X