விலையை கம்மியா சொன்னதும் புக்கிங் குவியுது! உள்ளூரில் ரெடியான வேர்ல்டு கிளாஸ் இ-ஸ்கூட்டர்.. டேஷ் கேம்கூட உண்டு

பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் பிரபல மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் அல்ட்ராவைலட் (Ultraviolette). இந்த நிறுவனம் தன்னுடைய இரண்டு புதுமுக எலெக்ட்ரிக் டூ-வீலர் மாடல்களை நேற்று முன்தினம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த இரண்டிற்கும் இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, டெஸ்ஸரேக்ட் (Tesseract), எனும் பெயரில் வந்திருக்கும் மாடலுக்கு பேராதரவு இந்தியர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

இது ஓர் ஸ்கூட்டர் வகை மின்சார வாகனம் ஆகும். இதற்கு டிமாண்ட் மிக சிறப்பாகக் கிடைத்துக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக அல்ட்ராவைலட் தற்போது ஓர் அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றது. டெஸ்ஸரேக்ட் கிடைத்திருக்கும் புக்கிங் நிலவரத்தை விபரிக்கக் கூடிய ஓர் அறிக்கையே அது ஆகும்.

Tesseract garners over 20 000 pre-bookings in less than 48 hrs

வெறும் 48 மணி நேரங்களில் டெஸ்ஸரேக்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 20 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் கிடைத்திருப்பது இந்த அறிக்கையின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. இந்த அமோகமான வரவேற்பிற்கு முக்கிய காரணமாக அதன் மலிவு விலை உள்ளது. ரூ. 1.2 லட்சம் என்கிற விலையிலேயே இது விற்பனைக்கு வந்திருக்கின்றது.

இது அறிமுக சிறப்பு விலை ஆகும். முதல் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த குறைவான விலையில் டெஸ்ஸரேக்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு வழங்க இருப்பதாக நிறுவனம் அறிவித்திருக்கின்றது. ஆனால், இப்போது அதையும் அதிகரித்திருக்கின்றது. எதிர்பார்த்திராத அளவிற்கு டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருப்பதன் விளைவாகவே இந்த அறிமுக விலையை தற்போது கூட்டியிருக்கின்றது.

10 ஆயிரம் வாடிக்கையாளர்களில் இருந்து 50 ஆயிரமாக அது அதிகரிக்கப்பட்டு உள்ளது. எனவே முதல் 50 ஆயிரம் பேரால் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 1.2 லட்சத்திற்கே வாங்கிக் கொள்ள முடியும். இதற்கு பின்னர் ரூ. 1.45 லட்சம் என்கிற விலையில் இ-ஸ்கூட்டர் விற்பனைச் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெஸ்ஸரேக்ட்டிற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் அமோக வரவேற்பிற்கு பின்னால் அதன் மலிவு விலை மட்டுமே காரணம் அல்ல. உலக தரத்திற்கு ஏற்ப இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அல்ட்ராவைலைட் நிறுவனம் தயாரித்து இருக்கின்றது. லுக்கில் மட்டுமல்ல சிறப்பம்சங்களைத் தாங்கியிருப்பதிலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் தலை சிறந்த ஒன்றாகக் காட்சியளிக்கின்றது.

குறிப்பாக, யாரும் எதிர்பார்த்திராத மற்றும் பார்த்திராத சிறப்பம்சங்களை இதில் வழங்கி இருக்கின்றனர். அந்தவகையில், ரேடார் மற்றும் டேஷ் கேம் போன்ற அம்சங்களை எல்லாம் டெஸ்ஸரேக்ட் இ-ஸ்கூட்டரில் கொடுத்திருக்கின்றனர். இதுதவிர, ஓர் முழு சார்ஜில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 261 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இத்துடன், 20 பிஎச்பி ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. டெஸ்ஸரேக்ட் இ-ஸ்கூட்டருக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பால் மகிழ்ச்சியின் உச்சிக்கே ஜோஹோ மற்றும் டிவிஎஸ் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் சென்றிருக்கின்றன. இவர்கள் ஏன் இதற்காக மகிழ்ச்சியடைய வேண்டும் என நீங்கள் கேட்கலாம்.

இவர்களின் பின்னணியிலேயே அல்ட்ராவைலட் நிறுவனம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதாவது, பெரும் தொகையை அல்ட்ராவைலட்டில் முதலீடு செய்தவர்களில் டிவிஎஸ் மற்றும் ஜோஹோவும் ஒன்றாகும். டெஸ்ஸரேக்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு மட்டுமல்ல ஷாக்வேவ் எலெக்ட்ரிக் பைக்கிற்கும் மிக சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டெஸ்ஸரேக்ட் இ-ஸ்கூட்டரின் வருகையால் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு மேலும் தலை வலி அதிகரித்து இருக்கின்றது. இதற்கு மட்டுமல்ல டிவிஎஸ், பஜாஜ் மற்றும் ஏத்தர் எலெக்ட்ரிக் உள்ளிட்ட பிராண்டுகளும் இதன் வருகையால் தற்போது பேரதிர்ச்சியில் உறைந்திருக்கும் என நாங்கள் கருதுகின்றோம்.

More from DriveSpark

Article Published On: Friday, March 7, 2025, 20:05 [IST]
English summary
Ultraviolette tesseract electric scooter achieves unprecedented demand with over 20000 pre bookings
மேலும்... #ultraviolette #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+