டெலிவரி இந்த வருஷத்துல இல்லனு தெரிஞ்சும் புக்கிங் குவியுது! உலக தரத்திற்கு ரெடி பண்ணா யாருதான் வாங்காம இருப்பா
உலக தரத்திற்கு தயார் செய்யப்பட்டு இருக்கும் இந்திய தயாரிப்பு இ-ஸ்கூட்டருக்கு நாட்டு மக்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் அல்ட்ராவைலட் (Ultraviolette). இந்த நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடாக டெஸ்ஸேரேக்ட் (Tesseract) உள்ளது. இந்த மின்சாரத்தில் இயங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கே இந்தியர்கள் தங்களின் பேராதரவை வழங்கத் தொடங்கி இருக்கின்றனர்.
இதை உறுதிப்படுத்தும் விதமாக இ-ஸ்கூட்டருக்கு இப்போதே சுமார் 50 ஆயிரம் புக்கிங்குகள் கிடைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவை அனைத்தும் இரண்டே வாரங்களில் கிடைத்தவை ஆகும். ஆமாங்க, கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னரே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அல்ட்ராவைலட் நிறுவனம் நாட்டில் வெளியீடு செய்தது.

துள்ளியமான சொல்ல வேண்டும் என்றால் கடந்த 5 ஆம் அன்றே இந்த ஸ்கூட்டரை நாட்டில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார்கள். அப்போதே ஸ்கூட்டருக்கான புக்கிங் பணிகளையும் தொடங்கிவிட்டனர். இந்த நிலையிலேயே இரண்டே வாரங்களில் அது 50 புக்கிங்குகளை கவர்ந்திருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல் 50 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்கூட்டரை ரூ. 1.20 லட்சத்திற்கு விற்பனைக்கு வழங்க இருப்பதாக அல்ட்ராவைலட் நிறுவனம் விற்பனைக்கு வழங்கி இருப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. முதலில் 20 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த விலையில் விற்பனைச் செய்யப்படும் என அது அறிவித்திருந்தது.

ஆனால், அவர்கள் எதிர்பார்த்திராத வகையில் வெறும் 48 மணி நேரங்களிலேயே 20 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் கிடைத்தன. இதைத்தொடர்ந்து, தங்களின் அறிமுக சிறப்பு சலுகை விலை 50 ஆயிரம் பேருக்கு என விரிவாக்கம் செய்தனர். இப்போது அந்த 50 ஆயிரம் வாடிக்கையாளர்களையும் அவர்கள் பெற்றுவிட்டனர்.
ஆகையால், இனி வரும் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்கூட்டர் ரூ. 1.45 லட்சத்திற்கு விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ப்ரீ புக்கிங் பணிகள் ரூ. 999 கட்டணத்திலேயே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதேவேளையில் இப்போது புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்திலேயே இந்த இ-ஸ்கூட்டர் டெலிவரி செய்யப்பட இருக்கின்றது.
இதை அறிந்தும் இந்தியர்கள் இப்போதே புக்கிங்கை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே கூறியதைப் போல உலக தரத்திற்கு ஏற்ற வாகனமாகவே இதனை அல்ட்ராவைலட் நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. உதாரணமாக வேறு எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் இல்லாத வசதியாக டேஷ்கேம் மற்றும் ரேடார் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட கண்ணாடியை இந்த ஸ்கூட்டர் பெற இருக்கின்றது.
இதன் வாயிலாக, பிளைண்டு ஸ்பாட்டைக் கண்டறிவது மிகவும் சுலபம். அத்துடன், லேன் சேஞ்ச், ஓவர் டேக்கிங் அசிஸ்ட் மற்றும் நிகழ்நேர மோதல் அலர்ட் உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும். இதுமட்டுமல்ல, டிராக்சன் கன்ட்ரோல் போன்ற வசதியையும் இந்த ஸ்கூட்டரில் அல்ட்ராவைலட் வழங்கி இருக்கின்றது.
இத்துடன், கூடுதல் சிறப்பாக 7 அங்குல தொடுதிரை வசதிக் கொண்ட டிஎஃப்டி திரை ஒன்றும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் பன்முக வண்ணங்கள் அடங்கிய எல்இடி திரை ஆகும். இதனுடனேயே ஓஆர்விஎம் இணைக்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமாதிரியான வசதியை இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் வேறு எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் பார்க்க முடியாது.
இதில் ஓர் முழு சார்ஜில் 261 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதில் பொருத்தப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 14.7 kW திறன் வெளியேற்றும். தினசரி மற்றும் ரெகுலர் பயன்பாட்டிற்கு உகந்த ஓர் ஸ்கூட்டரே இதுவாகும். இதற்கே இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே புதிய புரட்சியாளரைப் போல அல்ட்ராவைலட் டெஸ்ஸரேக்ட் சந்தையில் தன்னுடைய கால் தடத்தைப் பதித்து இருக்கின்றது. இது மற்ற எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கு மிகப் பெரிய அளவில் சவால்விடுக்கக் கூடியதாக மாறும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.


Click it and Unblock the Notifications








