24 மணி நேரத்தில் 3000 பேர் இந்த பைக்கை புக் பண்ணிட்டாங்க! கம்மி விலைக்க இன்னும் நிறைய பேருக்கு கிடைக்கும்?
அல்ட்ரா வைலட் நிறுவனம் தனது எக்ஸ்-47 எலெக்ட்ரிக் கிராஸ் ஓவர் பைக்கை நேற்று அறிமுகப்படுத்திய நிலையில் 24 மணி நேரத்திலேயே 3000 பேர் இந்த பைக்கை புக் செய்துள்ளனர். இந்த பைக்கிற்கு எதிர்பாராத வகையில் அமோக வரவேற்பு கிடைத்ததால் இந்த பைக்கிற்கான அறிமுக விலையை நீட்டிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
அல்ட்ரா வைலட் நிறுவனம் நேற்று தனது நேக்கட் பைக்காக எக்ஸ்-47 என்ற பைக்கை அறிமுகப்படுத்தியது. இந்த பைக் அறிமுகமாகும் போது முதலில் புக் செய்யும் 1000 நபர்களுக்கு மட்டும் ரூ2.49 லட்சம் என்ற விலையிலும் பின்னர் இந்த பைக் ரூ2.74 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த பைக் அறிமுகமான 24 மணி நேரத்தில் இந்த பைக்கை 3000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இவ்வளவு புக்கிங்கை அந்நிறுவனமே எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் இந்நிறுவனம் இந்த பைக்கிற்கான ஆரம்ப விலை எண்ணிக்கையை மாற்றியுள்ளது. இதன்படி முதலில் அறிவிக்கப்பட்ட 1000 பேருக்கு பதிலாக 5000 பேருக்கு ஆரம்ப விலையிலேயே பைக்கை விற்கவும், அதன்பின் புக் செய்பவர்களுக்கு ரூ2.74 லட்சம் என்ற விலையில் பைக்கை விற்கவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அல்ட்ரா வைலட் எக்ஸ் 47 பைக்கை பொருத்தவரை ஒரு ஸ்டிரீட் ஃபைட்டர் மற்றும் அட்வெஞ்சர் ஆகிய பைக்குகளுக்கு இடையேயான கிராஸ் ஓவர் பைக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் முதல் முறையாக ரேடார் பொருத்தப்பட்ட பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிஸ்டம் அனைத்து வேரியன்ட்களிலும் ஸ்டாண்டர்டாக உள்ளது.

இந்த அம்சம் மூலம் பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன், லேன் சேஞ்ச் அலர்ட், ரியர் கொலிஷன் டிடெக்ஷன் கேபபிளிட்டி, உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன. இந்த பைக் பவர்ஃபுல்லான பைக்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 40 பிஎச்பி பவரையும் 100என்எம் டார்க் திறனையும் வெளியிடும் மோட்டார் இதில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 10.3kwH பேட்டரி பேக் உள்ளது.
இதன் மூலம் இந்த பைக் ஒரு முறை சார்ஜ் போட்டால் 323 கி.மீ வரை பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் முன்பக்கம் 41 மிமீ யூஎஸ்டி ஃபோர்க் மற்றும் பின்பக்கம் 170 மிமி மோனோ ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 200 மிமி கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளன. மேலும் பிரேக்கிங் அம்சங்களுக்காக போஷ் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட டுயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது. மற்றும் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக செயல்படும் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பைக்கிற்கான புக்கிங் நேற்றே துவங்கிவிட்டது. தற்போதும் இந்த பைக்கிற்கான புக்கிங்குவிந்து வருகிறது. இந்த பைக்கை தற்போது புக் செய்தாலும் வெறும் ரூ2.49 லட்சத்திற்கு புக் செய்ய முடியும். 5000 பேருக்கு மேல் தாண்டிவிட்டால் விலை ரூ2.74 லட்சமாக மாறும். இந்த பைக்கின் டெலிவரிகள் வரும் அக்டோபர் மாதம் முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அல்ட்ராவைலட் நிறுவனம் இந்த பைக்கை நேக்கட் பைக்காக உருவாக்கியுள்ளது. இந்த பைக் மீதான வரவேற்பு அதிகமாக இருக்கிறது. இந்த பைக்கிற்கு புக்கிங் எதிர்பாராத வகையில் குவிந்துள்ளது. இந்த பைக்கை வாங்க மக்கள் இனியும் தொடர்ந்து ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








