ஃபெர்ராரி காரின் எஞ்சினை கொண்டு உருவாக்கப்பட்ட பைக்.. இவ்ளோ வேகமாக போகுமா?.. புல்லட் ரயிலே தோத்து போகும்போல!!

விநோத உருவம் கொண்ட மற்றும் யாராலும் உருவாக்க முடியாத தனித்துவமான மோட்டார்சைக்கிள்களை உருவாக்கும் திறன் கொண்டவர் மேக்ஸ்வெல் ஹசன். இதற்காக அவர் கடந்த காலங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த நிலையிலேயே, அவர் ஃபெர்ராரி ஸ்போர்ட்ஸ் காரின் எஞ்சினைக் கொண்டு விநோத பைக் ஒன்றை தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பைக்கும் டூ-வீலர் பிரியர்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம் அதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதிக ஆற்றலை உருவாக்கும் எஞ்சினே ஆகும்.

3.5 லிட்டர் வி8 எஞ்சினையே இந்த பைக்கில் அவர் பொருத்தி இருக்கின்றார். 1990 இத்தாலிய ஸ்போர்ட்ஸ் காரில் இருந்து பெறப்பட்ட ஓர் மோட்டாரே இதுவாகும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் ஃபெர்ராரி எஃப்355 (Ferrari F355) மாடலின் எஞ்சினையே தான் பிரத்யேகமாக வடிவமைத்த பைக்கில் மேக்ஸ்வெல் பயன்படுத்தி இருக்கின்றார்.

Maxwell hazan s unique ferrari motorcycle creation

இதனால்தான் தான் இந்த பைக்கிற்கு தன்னுடைய பெயரின் முதல் எழுத்தான 'எச்' மற்றும் கார் மாடலின் எஃப்355 ஆகிய இரண்டையும் சேர்த்து எச்எஃப் 355 என்கிற பெயரை அவர் சூட்டி இருக்கின்றார். மேலும், உலக அளவில் இந்த ஃபெர்ராரி எச்355 வெறும் 11 ஆயிரம் யூனிட்டுகள் வரை மட்டுமே விற்பனைச் செய்யப்பட்டு இருக்கின்றன.

இதனாலேயே அந்த கார் மாடல் சற்றே அரிய வகை வாகனமாக பார்க்கப்படுகின்றது. அதேபோல், அதன் எஞ்சினும் ஓர் ரேர் பீஸ் ஆகும். இதையே கொஞ்சமும் தயங்காமல் மேக்ஸ்வெல் ஹாசன் தன்னுடைய பைக்கில் பயன்படுத்தி இருக்கின்றார். இந்த மோட்டார் அதிகபட்சமாக 375 குதிரை திறனை வெளியேற்றும் திறன் கொண்டதே இந்த மோட்டார் ஆகும்.

இதுமட்டுமல்ல இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 300 கிமீ ஆகும். புல்லட் ரயிலுக்கே டஃப் கொடுக்கும் அதிக வேகமாக இது இருக்கின்றது. இத்தகைய அதீத ஆற்றலை உருவாக்கும் ஃபெர்ராரி ஸ்போர்ட்ஸ் காரின் எஞ்சினையே மேக்ஸ்வெல் ஹசன் தான் தயாரித்திருக்கும் பைக்கில் பயன்படுத்தி உள்ளார். ஸ்போர்ட்ஸ் காரின் எஞ்சினைக் கொண்டு இந்த பைக் தயார் செய்யப்பட்டு இருந்தாலும், அது பைக்கைப் போன்று காட்சியளிக்கத் தவறவில்லை.

ஓர் புதுமுக ஸ்போர்ட்ஸ் பைக்கைப் போலவே அது காட்சியளிக்கின்றது. இந்த உருவம் அவருக்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை என கூறப்படுகின்றது. இந்த உருவத்தைக் கொண்டு வர அவர் கடினமாக உழைத்திருக்கின்றார். குறிப்பாக இதற்காக பல நாட்களை அவர் செலவிட்டிருக்கின்றார். இத்தகைய தீவிர முயற்சிக்கு பின்னரே இந்த பைக்கை அவர் வெற்றிகரமாக தயார் செய்திருக்கின்றார்.

இதனால்தான் பலர் மேக்ஸ்வெல்-க்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த பைக்கை முழுக்க முழுக்க வேறு வாகன பகாங்களைக் கொண்டே மேக்ஸ்வெல் தயார் செய்திருக்கின்றார். குறிப்பாக, பைக்கின் முன் பக்கத்தில் ஒஹ்லின்ஸ் ஃபோர்க்குகளையும், பிரெம்போ பிரேக்குகளையும் அவர் பயன்படுத்தி இருக்கின்றார். ஆகையால், சௌகரியமான டிராவல் அனுபவம் இந்த பைக்கில் சற்றும் குறைச்சலின்றி கிடைக்கும்.

இதுமட்டுமல்ல தானே உருவாக்கிய ஸ்விங்கார்ம்மைக் கொண்டே இந்த பைக்கை அவர் தயார் செய்திருக்கின்றார். இதுமட்டுமல்ல அதிக பவர்ஃபுல்லான எஞ்சினை குளிர்ச்சியாக வைத்திருக்க ரேடியேட்டரை அவர் பிரத்யேகமாக வடிவமைத்திருக்கின்றார். இதுமட்டுமல்ல ஆயில் டேங்கும் இந்த பைக்கிற்கென்றே பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டிருக்கின்றது. இதுபோன்று பல்வேறு வேலைப்பாடுகளுக்கு பின்னரே எச்எஃப் 355 பைக் தயாராகி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்று வாகனங்களை கலப்பினம் செய்து தயாரிப்பதற்கு தடை செய்யப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, இந்த மாதிரியான வாகனங்கள் அனுமதியின்றி சாலையில் நடமாடினால் அதன்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அந்தவகையில், பல வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 12, 2025, 20:57 [IST]
English summary
Unleashing the hf355 the ferrari powered motorcycle redefining engineering and artistry
மேலும்... #bike modification
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+