ஜனவரி மாசம் இத்தனை 2 வீலர் வருதா? எல்லாமே சூப்பர் தான்!
2026ம் புத்தாண்டின் முதல் மாதமே பிஎம்டபிள்யூ, பிரிக்ஸ்டன், கேடிஎம், ராயல் என்ஃபீல்டு உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் புதிய டூவீலர்களை களம் இறக்குகிறார்கள். இந்த டூவீலர்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாகனங்கள் ஆகும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 ட்வின்
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது 650 சிசி லைன் அப்களை மீண்டும் வடிவமைப்பு செய்துள்ளது புதிய வாகனத்தை களம் இறக்குகிறது. இதன்படி பிரபலமான 648 சிசி பெரலெல்ட்வின் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்ட பைக் விற்பனைக்கு வருகிறது. இது 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது பார்க்க புல்லட் பைக்கின் சில்லவுட்டிலேயே இருக்கிறது. இது 650 கிளாசிக் பைக்கை விட சற்று கீழ் உள்ள பொசிஷனிலேயே விற்பனைக்கு வருகிறது.

கேடிஎம் 390 அட்வெஞ்சர் ஆர்
கேடிஎம் நிறுவனம் தனது 390 அட்வெஞ்சர் ஆர் பைக்கை 2026ம் ஆண்டு முதல் மாதமே விற்பனைக்கு கொண்டு வருகிறது. இது ஒரு ஹார்ட்கோர் ஆஃப்ரோடர் பைக் ஆகும். ஸ்டாண்டர்டான 390 அட்வெஞ்சர் பைக்கை விட இதில் ஆஃப்ரோடு அம்சங்கள் அதிகமாக இடம் பெறப்போகிறது. இந்த பைக்கிில் நீண்ட தூர பயணத்திற்காக டபிள்யூ பி அப்பெக்ஸ் சஸ்பென்சன் வழங்கப்பட்டுள்ளது. இது 230 மிமி அளவில் வழங்கப்படுகிறது. இந்த பைக்கில் 272 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 870 மிமீ சீட் உயரம் ஆகிய அம்சங்கள் உள்ளன.
இந்த பைக்கில் 398.7 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளுது. இது 398.7 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் உடன் 44 பிஎச்பி பவர் மற்றும் 39 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இது 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் முன்பக்கம் 21 இன்ச் வயர் ஸ்போக் வீல் மறஅறம் பின்பக்கம் 18 இன்ச் வீல் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 320 மிமீ டிஸ்டிக் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இஐது போக பைபிரே டிவின் பிஸ்டன் கேலிபர் 240 மிமீ அளவில் டிஸ்க் பிரேக் ஆகியன வழங்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ்
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது எஃப் 850 ஜிஎஸ் பைக்கிற்கு சிறிய வெர்ஷனாக எஃப் 450 ஜிஎஸ் பைக்கை கொண்டு வருகிறது. இது ஓசூரில் உள்ள டிவிஎஸ் நிறுவனத்தின் ஆலையில் கட்டமைக்கப்படுகிறது. இந்த பைக் பெரலல் ட்வின் இன்ஜின் உடன் 48 பிஎச்பி பவர் மற்றும் 43 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் இன்ஜினாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் குறைந்த எடை கொண்ட பிரேம், நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ற சஸ்பென்சன், ஸ்போக் வீல்கள், சிக்னேச்சர் ஜிஎஸ் ஸ்டைலிங், டிஎஃப்டி டிஎஸ்பிளே, மல்டிபிள் ரைடிங் மோடுகள், டிராக்ஷன் கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், டைனமிக் பிரேக் கண்ட்ரோல், இன்ஜின் பிரேக் மேனேஜ்மென்ட் ஆகிய அம்சங்கள் உள்ளது.
பிரிக்ஸ்டன் கிராஸ் ஃபயர் 500 ஸ்டூர்
பிரிக்ஸ்டன் நிறுவனம் மிடில் வெயிட் செக்மெண்டில் கிராஸ்ஃபயர் 500 ஸ்டூர் என்ற பைக்கை கொண்டு வருகிறது. இந்த பைக்கில் 486 சிசி பெரலல் ட்வின் லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 47.6 எச்பி பவரையும், 43 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதே இன்ஜின் தான் கிராஸ் பயர் 500எக்ஸ் மற்றும் 500 எக்ஸ் ஸி ஆகிய பைக்குகளில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் கேஒய்பி யூஎஸ்டி ஃபோர்க் மற்றும் மோனோ ஷாக் சஸ்பென்சன் செட்டப் பொருத்தப்பட்டுள்ளது. இது போக ஜே ஜூன் டிஸ்க் பிரேக்குகள், டுயல் சேனல் ஏபிஎஸ், பின்பக்கம் மட்டும் டிஆக்டிவேட் செய்யும் வசதி, வயர்லெஸ் ஸ்போக் வீல்கள், பைரேலி ஸ்கார்பியன் ரேலி எஸ்டிஆர் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 ஸ்கிரீன் டிஎஃப்டி டிஸ்பிளே, டிராக்ஷன் கண்ட்ரோல், யூஎஸ்பி சார்ஜிங், எல்இடி லைட்டிங், உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த பைக் ரூ5.75 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
கேடிஎம் ஆர்சி 160
கேடிஎம் நிறுவனம் தனது ஆர்சி 160 பைக்கை ஜனவரி மாதம் அறிமுகப்படுத்துகிறது. இந்த பைக் அதன் பெரிய பைக்கிலிருந்து இன்ஸ்பயர் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக் ஆர்சி 125 பைக்கிற்கு மாற்றாக வழங்கப்பட்டுள்ளுது. இதில் அதே இன்ஜின்தான் பொரத்தப்பட்டுகிறது. இந்த பைக் மார்கெட்டில் யமஹா ஆர்15 வி4.0 மற்றும் பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 பைக்கிற்கு போட்டியாக வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அடுத்தடுத்து 5 புதிய டூவீலர்கள் இந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு வந்துள்ளது. இது நிச்சயம் மிகப்பெரிய அளவில் விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய டூவீலர் விரும்பிகள் நிச்சயம் இப்படியான பைக்கை அதிகம் விரும்புவார்கள் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








