விஜய்யின் ஜனநாயகன் படத்தை விடுங்க... 2026 பொங்கலை மறக்க முடியாதப்படி செய்ய போகும் புது பைக்குகள்!!

2026 பொங்கல் சீசனை (ஜனவரி-பிப்ரவரி 2026) ஒட்டி, இந்திய சந்தையில் பல புதிய இருசக்கர வாகனங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. ராயல் என்ஃபீல்டு புல்லட் 650, கேடிஎம் 390 அட்வென்ச்சர் ஆர் மற்றும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 421 உள்ளிட்டவை அவற்றில் முக்கியமான அறிமுகங்களாகும். பொங்கலில் அதிக வாடிக்கையாளர்களை டார்க்கெட் செய்து கொண்டுவரப்படும் இந்த இருசக்கர வாகனங்கள் பற்றிய விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

top two-wheelers launching this pongal

ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 (Royal Enfield Bullet 650): அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த ராயல் என்ஃபீல்டு பைக்கின் வெளியீடு வருகிற 2026 ஜனவரியில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ராயல் என்ஃபீல்டின் 650சிசி ட்வின்-சிலிண்டர் வரிசையில் வரும் மற்றொரு புதிய மோட்டார்சைக்கிள் ஆகும். கிளாசிக் புல்லட் அழகியலுடன், நிரூபிக்கப்பட்ட 648சிசி இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின், ரெட்ரோ ஸ்டைல் தோற்றம், நிமிர்ந்தப்படி பைக்கை ஓட்டும் பொசிஷன் மற்றும் டூயல்-சேனல் ஏபிஎஸ் ஆகிய சிறப்பு அம்சங்களுடன் இந்த பைக் வருகிறது.

top two-wheelers launching this pongal

கேடிஎம் 390 அட்வென்ச்சர் ஆர் (KTM 390 Adventure R): இந்த புதிய கேடிஎம் அட்வென்ச்சர் பைக் 2026 ஜனவரியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது வழக்கமான 390 அட்வென்ச்சர் பைக்கை விட சிறந்த ஆஃப்-ரோடு சாகசங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 230மிமீ நீண்ட சஸ்பென்ஷன் டிராவல், 272மிமீ அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், 21-இன்ச் முன் சக்கரம் மற்றும் 18-இன்ச் பின் சக்கர அமைப்பு போன்ற அம்சங்களை இது கொண்டுள்ளது.

top two-wheelers launching this pongal

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 421 (Hero Xpulse 421): ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 210 பைக் ஏற்கனவே மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், அதனை காட்டிலும் பெரிய அளவிலான மோட்டார்சைக்கிளாக எக்ஸ்பல்ஸ் 421 பைக், 2026 ஜனவரியில் பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ் பைக்குகள் பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

top two-wheelers launching this pongal

யமஹா எம்டி-07 (Yamaha MT-07): யமஹா நிறுவனத்தின் புதிய நேக்கட்-ஸ்ட்ரீட்ஃபைட்டர் (Naked-Streetfighter) பைக் இது ஆகும். இந்தியாவில் யமஹா எம்டி-15 பைக்கிற்கு கடந்த பல வருடங்களாகவே நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், அந்த தைரியத்தில் எம்டி-03 பைக்கை இந்தியாவில் யமஹா அறிமுகம் செய்தது. ஆனால், போதிய விற்பனை இல்லாததால் சமீபத்தில் எம்டி-03 பைக்கின் விற்பனை நிறுத்தப்பட்ட நிலையில், அதற்கு மாற்றாக எம்டி-07 அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

top two-wheelers launching this pongal

ஹோண்டா சிபிஆர்300ஆர் (Honda CBR300R): இந்தியாவில் சிபிஆர் பைக்குகளுக்கு ஒரு சிறந்த மார்க்கெட்டை உருவாக்க ஹோண்டா நிறுவனம் நீண்ட வருடங்களாக முயற்சித்து வரும் நிலையில், அந்த முயற்சியின் ஒரு பகுதியாக சிபிஆர்300ஆர் ஸ்போர்ட் பைக்கை 2026 ஜனவரியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

top two-wheelers launching this pongal

கேடிஎம் 650 டியூக் & 890 டியூக் (KTM 650 Duke & 890 Duke): பஜாஜ் ஆட்டோவின் கீழ் செயல்படும் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் தனது டியூக் பைக்குகள் வரிசையை வருகிற 2026ஆம் ஆண்டில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி, உயர் திறன் கொண்ட கேடிஎம் 650 டியூக் மற்றும் 890 டியூக் பைக்குகள் 2026 ஜனவரியில் இந்தியாவில் வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை மட்டுமன்றி, ஹோண்டா ஆக்டிவா 7ஜி போன்ற பிரபலமான 2-வீலர்களும் வருகிற 2026 பொங்கல் சமயத்தில் இந்திய 2-வீலர் சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ளவை அனைத்தும் பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ் பிரிவை இலக்காகக் கொண்ட மோட்டார்சைக்கிள்கள் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 23, 2025, 20:32 [IST]
English summary
Upcoming bikes for this 2026 pongal season royal enfield bullet 650 and ktm 390 adventure r
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X