ஓலா எல்லாம் ஓரம்போ! 2026ல் கலக்கப்போவது இவங்க தான்!
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் ஸ்கூட்டர்கள் சிறப்பாக விற்பனையாகி வருகிறது.இந்த ஸ்கூட்டர்கள் மார்கெட்டில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறும் நிலையில் வரும் 2026ம் ஆண்டு சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வருவது உறுதியாகியுள்ளது. இது குறித்து இதுவரை வெளியான விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
யமஹா ஏராக்ஸ் -இ
யுமஹா நிறுவனம் தனது ஏராக்ஸ் ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்தியாவில் விரைவில் கொண்டு வருகிறது. இந்த ஸ்கூட்டார் 2026ம் ஆண்டுதுவக்கத்திலேயே விற்பவனைக்கு வர வாய்ப்புள்ளுது. இந்த ஸ்கூட்டரில் 3kwh பேட்டரி பேக் உள்ளது. இது 9.4KW எலெக்ட்ரிக் மோட்டாருடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வாகனம் 48 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. ஒரு முறை சார்ஜ் போட்டால் 106 கி.மீ பயணிக்கும் திறன் கொண்டது.

டிசைன் டிப்படையில் இந்த ஸ்கூட்டர் அதன்பெட்ரோல் வெர்ஷன் ஸ்கூட்டரின் தோற்றத்திலேயே இருக்கும். இதில் சில எலெக்ட்ரிக் டச்கள் இடம் பெறுகிறது. இந்த வாகனம் எக்கோ, ஸ்டாண்டர்டு, பவர் மற்றும் ரிவர்ஸ் ஆகிய மோடுகளுடன் விற்பனைக்கு வருகிறது. இதில் ஸ்மார்ட் கீ சிஸ்டம், 5 இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.
யமஹா இசி-06
ஏராக்ஸ் -இ ஸ்கூட்டரை தொடர்ந்து யமஹா நிறுவனம் இசி-06 என்ற வாகனத்தை வெளியிட்டுள்ளது. இது 2026ம் ஆண்டு முதல் பாதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இதன் தயாரிப்பு மாடல் ரிவர் நிறுவனத்தின் தயாரிப்பை ஒத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாகனத்தில் 4kWh பேட்டரி பேக் இடம் பெறுகிறது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டர் 4.5kW எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்ப்டடுளு்ளது. இது 6.7kW பவரை வெளிப்படுத்தும், இந்த ஸ்கூட்டர் மேக்ஸி ஸ்கூட்டராக எல்சிடி கிளஸ்டர், பில்டு இன் டெலிமேட்டிக்ஸ், 3 ரைடு மோடுகள், ரிவர்ஸ் மோடு, ஆகிய ஆப்ஷன்கள் உள்ளது.
பஜாஜ் சேத்தக்
பஜாஜ் நிறுவனத்தின் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்றாக இருக்கிறது. இதில் அடுத்த தலைமுறை ஸ்கூட்டர் தற்போது தயாராகி வருகிறது. இந்த ஸ்கூட்டரின் சோதனைகள் தற்போது நடந்து வருகிறது. இதன் ஸ்பை புகைப்படங்கள் தற்போது ெவளியாகியுள்ளன. இதில் புதிய பின்பக்க லைட், பின்பக்க வீல் ஹக்கர்கள் இடம் பெற்றள்ளது இந்த ஸ்கூட்டர் 2026ம் ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்கூட்டரில் 3.5kWh பேட்டரி பேக் இடம் பெறும் என்றும், இது முழு சார்ஜில் 150 கி.மீ பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பிள் எனர்ஜி
பெங்களூருவை தலைமயிடமாக கொண்ட சிம்பிள் எனர்ஜி நிறுவனம் குடும்பத்தினர் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் சமீபத்தில் காப்புரிமைக்காக விண்ணப்பிக்கப்பட்டபோது இதன் வடிவமைப்பு குறித்த புகைப்படம் வெளியானது. இதில் மினிமலான டிசைன் மொழி பின்பற்றப்பட்டுள்ளது.
இதில் எல்இடி ஹெட்லைட், சற்று பெரிய பாடி பேனல்கள், ஃபிளாட்டான ஃப்ளோர் போர்டுகள் உள்ளன. டெக்னிக்கல் விஷயங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. தற்போது அந்நிறுவனம் ஸ்போர்ட்டியான மாடல்களை மட்டுமே விற்பனை செய்து வரும் நிலையில் குடும்பத்தினர் பயன்படுத்தும் மாடல்கள் 2026ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
ஏத்தர் இஎல்
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் பல்வேறு புதிய ஸ்கூட்டர்களை இந்திய மார்கெட்டில் களம் இறக்க தயாராகி வருகுிறது. இந்நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய இஎல் என்ற பிளாட்ஃபார்மை அறிமுகப்படுத்தியது. இதில் அந்நிறுவனம் அடுத்த தலைமுறை இவிகளை தயாரிக்கிறது. இதில் அட்வான்ஸ்டு எலெக்ட்ரிக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. புதிய சார்ஜ் கண்ட்ரோலர் இதில் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

இந்த ஃபிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட இஎல் ரேஞ்ச் வாகனம் ஏற்கனவே காட்சிப்படுத்த நிலையில் வரும் 2026ம் ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த வாகனம் நிச்சயம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகப்பெரிய அளவில் விற்பனையாகும் நிலையில் 2026ம் ஆண்டு இந்த வாகனங்கள் நிச்சயம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்தடுத்து இந்த துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் வரப்போகிறது என்பது தெளிவாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications









