இந்த காதலர் தினத்தில் உங்க மனைவி மொத்தமா ஷாக் ஆயிடனும்! பெண்களுக்கு ஏற்ற 5 ஸ்கூட்டர்கள்
காதலர் தினம் (Valentine's Day) ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்படுவதை நான் கூற வேண்டியதில்லை. உலகம் முழுக்க கொண்டாடப்படும் சில பண்டிகைகளும் காதலர் தினமும் ஒன்றாகும். அன்றைய தினத்தில் காதலர்கள் இருவரும் மாறி மாறி பரிசு பொருட்கள் உடன் தங்களது அன்பை பரிமாறி கொள்வர். அந்த வகையில், இந்த முறை காதலர் தினத்திற்கு உங்களது காதலி/ மனைவிக்கு ஏதேனும் பெரிய பரிசு பொருளை கொடுக்க திட்டமிட்டு வருகிறீர்களா?
அப்படியென்றால், அவர்களுக்கு பரிசாக வழங்க ஸ்கூட்டர் ஏற்றதாக இருக்கும். பெண்களின் பயன்பாட்டிற்காகவே மார்க்கெட்டில் சில ஸ்கூட்டர்கள் குறைவான இருக்கை உயரத்துடன் விற்பனை செய்யப்படுகின்றன. அதாவது, தரையில் இருந்து இருக்கையின் உயரமானது குறைவாக இருக்கும். அத்தகைய ஸ்கூட்டர்களுள் சிறந்த 5 ஸ்கூட்டர்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

டிவிஎஸ் ஜூபிட்டர் (TVS Jupiter): மார்க்கெட்டில் மிக பிரபலமான டிவிஎஸ் ஸ்கூட்டர் இதுவாகும். இந்த ஸ்கூட்டரில் தரையில் இருந்து ரைடர் இருக்கையின் உயரமானது 765மிமீ ஆக உள்ளது. ரூ.75 ஆயிரத்தில் இருந்து கிடைக்கும் ஜூபிட்டர் ஸ்கூட்டர் ஆனது ஆண், பெண் என இருவரும் பயன்படுத்தக்கூடியது ஆகும். குறிப்பாக, பெண்களுக்கு இந்த ஸ்கூட்டர் மிகவும் ஏற்றதாக இருக்கும்.

ஹீரோ ஸூம் 110 (Hero Xoom 110): இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்பின் லேட்டஸ்ட் அறிமுகமாக ஸூம் விளங்குகிறது. இந்த ஸ்கூட்டரில் ரைடர் இருக்கை ஆனது 770மிமீ உயரத்தில் வழங்கப்படுகிறது. மாடர்ன் ஹீரோ ஸ்கூட்டர் என்பதால், பல மாடர்ன் வசதிகளுடன் விற்பனை செய்யப்படும் ஸூம் 110 ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.72 ஆயிரத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.

பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak): பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு பதிலாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க விரும்பினால் சேத்தக் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த ஸ்கூட்டரில் ரைடர் இருக்கை ஆனது மிகவும் தாழ்வாக 760மிமீ உயரத்தில் வழங்கப்படுகிறது. சேத்தக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.15 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.

டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் (TVS Scooty Zest): முழுக்க முழுக்க பெண்களுக்கு என்றே உருவாக்கப்பட்ட ஸ்கூட்டர் இது எனலாம். அந்த அளவிற்கு குறைவான எடையில் உருவாக்கப்படும் இந்த ஸ்கூட்டரில் ரைடர் இருக்கையும் மிகவும் தாழ்வாக தரையில் இருந்து வெறும் 760மிமீ உயரத்தில் வழங்கப்படுகிறது.

ஹோண்டா டியோ 110 (Honda Dio 110): ஹோண்டாவில் இருந்து மிகவும் ஸ்டைலிஷான தோற்றம் கொண்ட ஸ்கூட்டர் இது ஆகும். அந்த அளவிற்கு அதிகளவில் ஷார்ப்பான பேனல்களை கொண்ட இந்த ஸ்கூட்டரில் ரைடர் இருக்கை தரையில் இருந்து 765மிமீ உயரத்தில் வழங்கப்படுகிறது. டியோவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.75 ஆயிரத்தில் இருந்து துவங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாங்கள் குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் ஸ்கூட்டர்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த விலைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுப்பட கூடும். இவ்வாறான தாழ்வான இருக்கையை கொண்ட ஸ்கூட்டர்களை கண்ட்ரோல் செய்வதும், ஹேண்ட்லிங் செய்வதும் எளியதாக இருக்கும் என்பதால், பெண்களுக்கு சரியான சாய்ஸாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









