லவ்வர்ஸ் டே -க்கு கொடுக்க சரியான கிஃப்ட்! பெண்கள் ஓட்டுவதற்கு என்றே பார்த்து பார்த்து உருவாக்கிய ஸ்கூட்டர்கள்

காதலர் தினம் (Valentine's Day) பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. காதலர்கள், திருமணமான தம்பதியர்கள் காதலர் தினத்தை பரிசு பொருட்களுடன் கொண்டாடுவது வழக்கம். அவ்வாறான கொண்டாட்டத்திற்கு தான் எதிர்பார்த்துள்ளீர்களா? அப்படியென்றால், இப்போதே உங்களது காதலி/ மனைவிக்கு ஸ்கூட்டர் (Scooter)-ஐ பரிசாக வழங்கி காதலர் தினத்தை கொண்டாடுங்கள். பெண்கள் ஓட்டுவதற்காகவே மார்க்கெட்டில் சில எடை குறைவான ஸ்கூட்டர்கள் உள்ளன. அவற்றுள் பிரபலமான சிலவற்றை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் (TVS Scooty Zest): பெண்களுக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஸ்கூட்டர் இது எனலாம். அந்த அளவிற்கு, வெறும் 99 கிலோவில், எடை குறைவானதாக இந்த டிவிஎஸ் ஸ்கூட்டர் விளங்குகிறது. மேலும், இந்த ஸ்கூட்டரின் தோற்றமும் ஒல்லியானதாக பெண்களால் எளிதாக கண்ட்ரோல் செய்யக்கூடியதாக வடிவமைக்கப்படுகிறது.

light weight scooters for women

யமஹா ஃபேஸினோ 125 (Yamaha Fascino 125): இந்த யமஹா ஸ்கூட்டரின் எடையும் 99 கிலோ மட்டுமே ஆகும். மாடர்ன் தோற்றத்திலான இந்த ஸ்கூட்டர் சற்று பருத்த உடலமைப்பில் உருவாக்கப்படுகிறது. இருப்பினும், ஸ்கூட்டரின் எடை குறைவு என்பதால் பெண்களுக்கு இதனை ஹேண்ட்லிங் செய்வதில் பெரியதாக எந்த பிரச்சனையும் இருக்காது.

light weight scooters for women

சுஸுகி ஆக்ஸஸ் 125 (Suzuki Access 125): மேலே கண்ட ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடுகையில் இதன் எடை சற்று அதிகம் (102 கிலோ) ஆகும். மார்க்கெட்டில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகக் கூடிய ஸ்கூட்டர்களுள் ஒன்றாக விளங்கும் ஆக்ஸஸ் 125 ஆனது அதன் சவுகரியமான இருக்கை அமைப்பிற்காக பெயர் பெற்றது ஆகும்.

light weight scooters for women

ஹீரோ பிளஷர் பிளஸ் (Hero Pleasure Plus): 104 கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்படும் இந்த ஹீரோ ஸ்கூட்டர் பெண்களுக்கு பிடித்தமான டிசைனில் உருவாக்கப்படுவது அதன் பிளஸ் பாயிண்ட் ஆகும். அதேகேற்ப பெப்பியான என்ஜினை கொண்ட பிளஷர் பிளஸ் ஸ்கூட்டரை நெரிசல் மிகுந்த சாலைகளிலும் கண்ட்ரோல் செய்வது எளியது ஆகும்.

light weight scooters for women

ஹோண்டா ஆக்டிவா 6ஜி (Honda Activa 6G): இந்தியவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர், ஹோண்டா ஆக்டிவா என்பதை நான் கூற வேண்டியதில்லை. நம்பர் ஒன் ஸ்கூட்டராக இருப்பதற்கு முக்கிய காரணம், ஆக்டிவா ஸ்கூட்டர்களின் மென்மையான பயணம், நம்பகத்தன்மை ஆகும். அதேநேரம், ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் எடை ஆனது 107 கிலோவாக உள்ளது.

light weight scooters for women

டிவிஎஸ் ஜூபிட்டர் (TVS Jupiter): இந்த ஸ்கூட்டரின் முக்கிய சிறப்பம்சமே அதன் அழகான பெட்ரோல் டேங்க் டிசைன் ஆகும். அது நிச்சயமாக பெண்களை கவரும். இருக்கைக்கு அடியில் அதிக இடவசதி மற்றும் வலிமையான என்ஜினை கொண்ட ஜூபிட்டரின் எடை 109 கிலோ ஆகும்.

light weight scooters for women

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெண்களுக்கு எடைமிக்க ஸ்கூட்டர்களை காட்டிலும் எடை குறைவான ஸ்கூட்டரை பரிசாக வாங்கிக் கொடுப்பதுதான் சிறந்ததாக இருக்கும். இந்த தொகுப்பில் நாம் பெட்ரோல் ஸ்கூட்டர்களை மட்டுமே பார்த்துள்ளோம். எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றி வேறொரு தொகுப்பில் பார்க்கலாம். எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இன்னும் எடை குறைவானவை ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 13, 2025, 8:00 [IST]
English summary
Valentines day special light weight scooters for women
மேலும்... #scooters #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X