2 லட்ச ரூபாயில் விற்கும் அளவுக்கு இந்த ஸ்கூட்டரில் என்ன இருக்கு? இவங்களது ஸ்கூட்டர்கள் மட்டும் தனி ரகம்

இத்தாலி (Italy) நாட்டில் இருந்து பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உருவாகி உள்ளன. அவற்றுள் ஒரு பிரபலமான ஸ்கூட்டர் நிறுவனம் தான், வெஸ்பா (Vespa) ஆகும். இந்த நிலையில், 2025ஆம் ஆண்டை முன்னிட்டு வெஸ்பா நிறுவனத்தில் புதிய ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 10 வருடத்திற்கு ஒருமுறை வெஸ்பா நிறுவனம் தனது ஸ்கூட்டர்களில் கொண்டுவரும் அப்டேட் இதுவாகும். புதிய வெஸ்பா ஸ்கூட்டர்களை பற்றியும், அவற்றில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் காஸ்ட்லீயான ஸ்கூட்டர்களாக வெஸ்பா ஸ்கூட்டர்களை சொல்லலாம். அந்த அளவிற்கு நுணுக்கமான வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2025 வெஸ்பா ஸ்கூட்டர்களிலும் காணலாம். அத்துடன், புதிய தொழிற்நுட்பங்களும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன், ஸ்பெஷல் எடிசன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

vespa Launches new 2025 scooters

2025 வெஸ்பா ஸ்கூட்டர்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.32 லட்சத்தில் இருந்து ரூ.1.96 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. முதலில் விலை குறைவான வெஸ்பா ஸ்கூட்டர்களில் இருந்து ஆரம்பிப்போம். வெஸ்பா மற்றும் வெஸ்பா எஸ் ஸ்கூட்டர்கள் புதிய கிராஃபிக்ஸ் மற்றும் புதிய என்ஜின்களை பெற்றுள்ளன. இதில், புதிய என்ஜின்கள் மென்மையான ஆக்ஸலரேஷனை வழங்கக்கூடியவைகளாக உள்ளன.

வெஸ்பா மற்றும் வெஸ்பா எஸ் ஸ்கூட்டர்கள் 125சிசி மற்றும் 150சிசி என்ஜின்களுடன் கிடைக்கும். கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரையில், இந்த வெஸ்பா ஸ்கூட்டர்களுக்கு வெர்டே அமாபைலே, ரோஸ்ஸோ சிவப்பு, பேர்ல் வெள்ளை, நீரோ கருப்பு, அசூர்ரோ புரோவென்ஸா என்கிற சிங்கிள்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்களும், நீலம் & பேர்ல் வெள்ளை மற்றும் ஆரஞ்சு & பேர்ல் வெள்ளை என்கிற ட்யூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன.

vespa Launches new 2025 scooters

வெஸ்பா எஸ் ஸ்கூட்டர் மட்டுமே புதிய ஓரோ ஸ்பெஷல் எடிசனில் தங்க நிறத்திலான டிண்ட் உடன் கிடைக்கும். அதேபோல், வெஸ்பா எஸ் ஸ்கூட்டர்களுக்கு பிரத்யேகமான சில கூடுதலான கலர் ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன. வெஸ்பா மற்றும் வெஸ்பா எஸ் ஸ்கூட்டர்களில் புதியதாக டெக் (Tech) வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த வெஸ்பா டெக் ஸ்கூட்டர்களில் காலா எடிசன் என்கிற பெயரில் பாரம்பரியமான மெஹந்தி டிசைன்களில் நுணுக்கமான கலை வேலைபாடுகள் செய்து கொடுக்கப்படும். தொழிற்நுட்ப அம்சங்களாக, புதிய டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை புதிய வெஸ்பா ஸ்கூட்டர்களில் வழங்கப்பட்டுள்ளது. இந்த திரை ஆனது ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டியை ஏற்கக்கூடியதாக உள்ளது.

vespa Launches new 2025 scooters

வெஸ்பா டெக் ஸ்கூட்டருக்கு காலா, எனர்ஜிகோ ப்ளூ மற்றும் க்ரிஜியோ கிரே என்கிற கலர் ஆப்ஷன்களும், வெஸ்பா டெக் எஸ் ஸ்கூட்டருக்கு நீரோ கருப்பு, பேர்ல் வெள்ளை என இரு கலர் ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன. வெஸ்பா நிறுவனத்தின் இந்த 2025ஆம் ஆண்டிற்கான ஸ்கூட்டர்களை இந்தியாவில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் ஷோரூம்களிலும் வருகிற பிப்ரவரி 25 முதல் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இப்போதும் வெஸ்பா நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் விலைமிக்கவை ஆக பார்க்கப் படுகின்றன. 10 வருடத்திற்கு ஒருமுறை தான் வெஸ்பா ஸ்கூட்டர்கள் இந்த அளவிற்கு அதிகளவில் அப்டேட் செய்யப்படும் என்பதால், வெஸ்பா ஸ்கூட்டர்களை வாங்குவதற்கு இது சரியான நேரமே ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 11, 2025, 11:54 [IST]
English summary
Vespa launches new 2025 scooters line up in india
மேலும்... #vespa #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X