ஹீரோ ஸ்கூட்டருக்கு ரூ. 40 ஆயிரம் வரை சலுகையா! பிளிப்கார்ட், அமேசான்ல வாங்கும்போது இரட்டிப்பான பலனை பெறலாம்!
இந்திய இரண்டு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), மின்சார இரண்டுசக்கர வாகனங்களையும் நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. விடா (Vida) எனும் பிராண்டின்கீழேயே அது எலெக்ட்ரிக் டூ-வீலர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த பிராண்டின்கீழ் விற்பனைக்குக் கிடைக்கும் இ-ஸ்கூட்டர்களுக்கே தற்போது சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. ரூ. 40 ஆயிரம் வரை பலன்களைப் பெற்றுக் கொள்ள முடியுமாம். அமேசான், ஃபிளிப்கார்ட் தளத்தின் வாயிலாக வாங்கும்போதே இந்த சலுகைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.
பேங்க்குகள் வழங்கும் தள்ளுபடி, இஎம்ஐ சலுகை, கேஷ்பேக் மற்றும் ஜிஎஸ்டி சலுகை உள்ளிட்டவற்றின் வாயிலாகவே இவ்வளவு மிகப் பெரிய சலுகையை ஆன்லைன் ஷாப்பிங் ஆப்புகள் விடா வி2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு வழங்கிக் கொண்டுள்ளது. குறிப்பாக, பேங்க் ஆஃப் பரோட கிரெடிட் கார்டைக் கொண்டு ஃபிளிப்கார்ட் தளத்தில் விடா வி2 லைட் மாடலை வாங்கும் போது ரூ. 6 ஆயிரம் வரை சேமிக்க முடியும்.

இத்துடனேயே, இஎம்ஐ சலுகை, சிறப்பு கேஷ்பேக் மற்றும் ஜிஎஸ்டி சலுகைகளையும் ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் வழங்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே ஆன்லைன் வாயிலாக விடா வி2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும்போது இரட்டிப்பான லாபம் கிடைக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.
விடா வி2, இந்தியாவில் மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. லைட், பிளஸ் மற்றும் ப்ரோ ஆகியவையே அவை ஆகும். இதில் லைட் இதுவே விலை குறைவான தேர்வு ஆகும். 2.2 kWh பேட்டரி பேக்கே இந்த தேர்வில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இது அதிகபட்சமாக ஓர் முழு சார்ஜில் 94 கிமீ தூரம் வரை பயணிக்கும். சமீபத்திலேயே இந்த வெர்ஷன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது கவனிக்கத்தகுந்தது. முன்னதாக பிளஸ் மற்றும் ப்ரோ ஆகிய வேரியண்டுகளில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்தது என்பது கவனிக்கத்தகுந்தது.
இதில் விடா வி2 பிளஸ் தேர்வில் 3.44 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கும், விடா வி2 ப்ரோ தேர்வில் 3.94 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. முதல் ஒன்று ஓர் முழு சார்ஜில் 143 கிமீ ரேஞ்சையும், இரண்டாவது ஒன்றில் 165 கிமீ ரேஞ்சையும் பெற்றுக் கொள்ள முடியும்.

இரண்டிலும் கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. எலெக்ட்ரிக் மோட்டாரை பொருத்த வரை வி2 பிளஸ் மற்றும் வி2 ப்ரோ ஆகிய இரண்டிலும் 6 kW திறன் கொண்ட பிஎம்எஸ் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 26 என்எம் டார்க்கை உருவாக்கும்.
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 85 கிமீ ஆகும். இதைவிட குறைவான ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட மோட்டாரே வி2 லைட் தேர்வில் பயன்படுத்தி இருக்கின்றனர். அதன் டாப் ஸ்பீடு மணிக்கு வெறும் 69 கிமீ மட்டுமே ஆகும். இதேபோல் சிறப்பம்சங்கள் விஷயத்திலும் இவை மூன்றிற்கு இடையில் சற்றே வேறுபாடு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

குறிப்பாக, இதன் உயர் நிலை தேர்வில் அதிக ஆடம்பர அம்சங்களைத் தாங்கியதாக காட்சியளிக்கின்றது. க்ரூஸ் கன்ட்ரோல், சாவியில்லாமல் வாகனத்தை இயக்கும் வசதி, ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களையே அது தன்னுள் தங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமில்லைங்க இன்னும் பல பிரீமியம் அம்சங்களை விடா வி2 இ-ஸ்கூட்டரில் நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே தற்போது சிறப்பு சலுகைள் விடா வி2 இ-ஸ்கூட்டருக்கு அறிவிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமேசான், ஃபிளிப்கார்ட் தளத்தில் நாங்கள் ஆராய்ந்ததில் பேங்க் சலுகைகளை மட்டுமே எங்களால் காண முடிந்தது. மற்ற சலுகைகளை எங்களால் காண முடியவில்லை.


Click it and Unblock the Notifications









