கம்மி விலைக்கு விற்பனைக்கு வரும் இவி ஸ்கூட்டர்! ஜூலை 1ம் தேதிய குறிச்சு வச்சிக்கோங்க!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வரும் குறைந்த விலையில் உள்ள விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய வேரியன்டான விஎக்ஸ் 2 வேரியன்டை வரும் ஜூலை மாதம் 1ம் தேதி அறிமுகப்படுத்தப்போவதாக அந்நிறுவனம் தெரியவந்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் புதிய டீசர் மற்றும் டிரைலரை வெளியிட்டுள்ளது. இந்த வாகனம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விடா என்ற பிராண்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய வேரியண்டான குறைந்த விலை வேரியன்டை வரும் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. விடா நிறுவனத்தின் வி2 லைன் அப்களில் இல்லாத வகையில் இந்த ஸ்கூட்டரின் இல்லாத வகையில் புதிய ஸ்டைல் மற்று் சுங்கள் கொண்ட வாகனமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

Vida VX2

ஆனால் முக்கிய பாகங்கள் வி2 வேரியன்டில் உள்ளது மாதிரியே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஏற்கனவே டீலர் ஷிப்களுக்கு அனுப்பபட்டுள்ளன. இந்த புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. இந்நிலையில் இந்த ஸ்கூட்டர்களின் விற்பனை வரும் ஜூலை 1ம்தேதி முதல் துவங்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

தற்போது உள்ள ஹீரோ விடா லைன் அப் ஸ்கூட்டர்கள். ரூ74 ஆயிரம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது வெறும் ஆரம்ப விலைதான் தற்போது அறிமுகமாகவுள்ள விடா விஎக்ஸ் 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதை விட குறைவா விலையில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிதறது. விடா வி2 லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொருத்தவரை 2.2 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்கை கொண்டுள்ளது.

இதன் டாப் வேரியன்டான வி2 ப்ரோ வேரியன்ட் ரூ 1.20 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்நிலையில் இந்த வாகனத்தின் குறைந்த விலை வேரியன்டை வரும் ஜூலை 1ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துகிறத. பலர் இந்த வாகனத்திற்காக காத்திருக்கும் நிலையில் இ்நத வேரியன்ட் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டீலர் ஷிப்க்கு வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புகைப்படங்கள் வெளியான நிலையில் அதன் உள்ள சில அம்சங்கள் நமக்கு தெளிவாக தெரிகிறது. அதில் வி2 லைன்போல இந்த ஸ்கூட்டர் ஆங்குலர் மற்றும் எட்ஜியான லைன் அப்பில் இல்லாமல் சாதாரணமாக காட்சியளிக்கிறது. அந்த ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றபடி இந்த ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் டிஸ்பிளேவும் சிறிய டிஎஃப்டி டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. ஃபிசிக்கல் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. சிங்கிள் பீஸ் சீட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. ஃபிளாட்டர், வித்தியாசமான ஸ்விட்ச் கியர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரம் விடா வகி2 ஸ்கூட்டரில் உள்ள பேட்டரி, மோட்டார், சேஸிஸ் மற்றும் எலெக்ட்ரானிக் அம்சங்கள் இப்படியே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குறைந்த எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். இதனால் ஹீரோ விடா விஎக்ஸ்2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல விற்பனையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயம் இந்த ஸ்கூட்டரை மக்கள் அதிகம் விரும்புவார்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, June 13, 2025, 20:00 [IST]
English summary
Vida vx2 launch on july 1 teaser released
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+