காரை தயாரிப்பதாக சொல்லிட்டு இந்தியா வந்த நிறுவனம்... இவங்களுக்கு தெரியாத வேலை என்ன தான் இருக்கு?

வின்ஃபாஸ்ட் (Vinfast), வியட்நாம் நாட்டை சேர்ந்த உலகளவில் பிரபலமான ஆட்டோமொபைல் நிறுவனம். கார்கள் மட்டுமின்றி, 2-சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் வின்ஃபாஸ்ட், இந்தியாவிலும் ஆதிக்கத்தை நிலைநாட்ட தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாகவே, டெல்லியில் நடைபெற்றுவரும் பாரத் மொபிலிட்டி குளோபல் ஆட்டோ எக்ஸ்போ (Bharat Mobility Global Auto Expo 2025) கண்காட்சியில் பங்கேற்றுள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனம், இந்த கண்காட்சியில் 6 விதமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters)-ஐ காட்சிக்கு நிறுத்தி உள்ளது.

அந்த 6 வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஒன்று, வின்ஃபாஸ்ட் க்ளாரா எஸ் (Klara S) ஆகும். வியட்நாம் நாட்டிலும் விற்பனையில் உள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான காப்புரிமையை இந்தியாவில் கடந்த 2024ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே வின்ஃபாஸ்ட் நிறுவனம் பெற்றுவிட்டது. இதனால், க்ளாரா எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் எப்போது வேண்டுமானாலும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தால் அறிமுகம் செய்ய முடியும்.

vinfast showcased klara s scooter

தோற்றத்தைப் பொறுத்தவரையில், வின்ஃபாஸ்ட் க்ளாரா எஸ் ஆனது பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) எலக்ட்ரிக் ஸ்கூட்டரை போன்று கிளாசிக்கான தோற்றம் கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். முன்பக்கத்தில் வட்ட வடிவில் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.5kWh திறன் கொண்ட லித்தியம் இரும்பு பாஸ்பேட் பேட்டரி பேக் பொருத்தப்பட்டு உள்ளது. இது 3 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டாருக்கு இயக்க ஆற்றலை வழங்குகிறது. இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 194கிமீ தொலைவிற்கு மீண்டும் சார்ஜ் செய்யாமல் பயணிக்க முடியும்.

vinfast showcased klara s scooter

இந்த 194கிமீ ரேஞ்சை பெற வேண்டும் எனில், 65கிமீ எடை கொண்ட ரைடர் மணிக்கு 30kmph வேகத்தில் ஓட்ட வேண்டும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு மணிக்கு 78கிமீ ஆகும். க்ளாரா எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் முன் சக்கரம் 14-இன்ச்சிலும், பின் சக்கரம் சற்று சிறியதாக 12 இன்ச்சிலும் பொருத்தப்படுகின்றன. சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க் வழங்கப்படுகிறது.

இந்த ஸ்கூட்டரின் இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்படுகின்றன. இதனால், வின்ஃபாஸ்ட் க்ளாரா எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்புற பயன்பாடுகளுக்கு மிகவும் ஏற்றது ஆகும். க்ளாரா எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உடன் மேலும் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சியில் காட்சிப்படுத்தி உள்ளது.

vinfast showcased klara s scooter

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக க்ளாரா எஸ் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். ஏனெனில், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான காப்புரிமையை தான் வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஏற்கனவே பதிவு செய்துவிட்டதே. இருப்பினும், இப்போதுவரையில் க்ளாரா எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் குறித்த எந்த தகவலையும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் வெளியிடவில்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 21, 2025, 16:20 [IST]
English summary
Vinfast showcased klara s electric scooter at auto expo 2025
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X