காரை தயாரிக்கிறோம்னு சொல்லிட்டு தானே தமிழ்நாட்டுல நுழைஞ்சாங்க.. இப்போ என்ன இந்த வேலையை பாத்துட்டு இருக்காங்க..
வியட்நாமைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட் (Vinfast), தன்னுடைய மிகப் பெரிய மின்சார வாகன உற்பத்தி ஆலையை தமிழகத்தில் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. வெகுவிரைவில் இந்த ஆலையில் வாகன உற்பத்தி பணிகள் தொடங்கிவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே சமீபத்தில் தொடங்கி பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025)-இல் தன்னுடைய தயாரிப்புகள் சிலவற்றை அது காட்சிப்படுத்தியது.
முதலில் கார்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவற்றைக் காட்சிப்படுத்திய வின்ஃபாஸ்ட், பின்னர் எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனங்களையும் மிகப் பெரிய அளவில் அங்கு வைத்துக் காட்சிப்படுத்தியது. இது பார்வையாளர்களை மிகப் பெரிய அளவில் கவரும் வகையில் அமைந்தது. குறிப்பாக, இரண்டு சக்கர வாகன காதலர்களை மிகப் பெரிய அளவில் ஈர்க்கும் வகையில் அமைந்தது.

மேலும், நிறுவனத்தின் இந்த செயலின் வாயிலாக இந்தியாவில் கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு மட்டுமல்ல டூ-வீலர் உற்பத்தியாளர்களுக்கும் சவால் விடக் கூடிய பிராண்டாக வின்ஃபாஸ்ட் இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. முன்னதாக இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் மட்டுமே கார் மற்றும் டூ-வீலர் என இரண்டின் உற்பத்தியிலும் ஈடுபட்டு வந்தது.
ஆனால், இப்போது அது டூ-வீலர் உற்பத்தியை கை விட்டுவிட்டது. ஆகையால், இந்தியாவின் ஒரே கார் மற்றும் டூ-வீலர் உற்பத்தி நிறுவனமாக வின்ஃபாஸ்ட் மாற இருப்பது தற்போது உறுதியாகி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஐந்துக்கும் மேற்பட்ட டூ-வீலர் மாடல்களை அது காட்சிப்படுத்தி இருக்கின்றது.

அனைத்துமே மின்சாரத்தில் இயங்கும் இரண்டு சக்கர வாகன மாடல்கள் ஆகும். ஈவோ 200 (Evo200), கிளாரா எஸ் (Klara S), தியோன் எஸ் (Theon S), ஃபெலிஸ் எஸ் (Feliz S), வென்டோ எஸ் (Vento S) மற்றும் விஎஃப் டிராகன் ஃப்ளை (VF DrgnFly) ஆகிய மாடல்களையே டூ-வீலர் மாடல்களையே அது பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ வாயிலாக காட்சிப்படுத்தி இருக்கின்றது.
காட்சிப்படுத்தப்பட்ட இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அனைத்தும் பிரீமியம் அம்சங்கள் நிறைந்தவை ஆகும். இதில் பெரும்பாலான மாடல்களில் 3.5 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 200 கிமீ வரையில் ரேஞ்ச் தரும். இதுதவிர, குறைவான ரேஞ்ச் தரும் எலெக்ட்ரிக் டூ-வீலர் மாடல்களையும் இந்த நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருந்தது.

நிறுவனம் காட்சிப்படுத்தியதிலேயே மாறுபட்ட தோற்றத்தைக் கொண்ட டிராகன் ஃப்ளை இ-மொபட் மாடலே பலரின் கவனத்தை கவரும் விதமாக இருந்தது. இது விற்பனைக்கு வரும் எனில் ரூ. 30 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இது எப்போது விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்கிற விபரங்கள் வெளியாகவில்லை.
இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மார்க்கெட்டில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே இந்த நிறுவனம் மிகப் பெரிய அடியை சந்தையில் வாங்கிக் கொண்டிருக்கின்றது. பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வியட்நாம் நிறுவனத்தின் மின்சார இரண்டு சக்கர வாகனங்களின் வருகை பஜாஜ் சேத்தக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் பெரிய தலைவலியை ஏற்படுத்தக் கூடியதாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மின்சார கார்கள் டாடா மோட்டார்ஸ், எம்ஜி மற்றும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் மாருதி சுஸுகி இ விட்டாரா உள்ளிட்டவற்றிற்கு போட்டியாக அமைய இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









