இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்க போகும் தமிழ்நாடு! இந்த நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களமிறக்க போகுதா!

வியட்நாம் நாட்டை சேர்ந்த மிகவும் பிரபலமான எலெக்ட்ரிக் வாகன நிறுவனங்களில் ஒன்று வின்ஃபாஸ்ட் (VinFast). இந்நிறுவனம் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் நுழைந்தது. வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன தொழிற்சாலை, தமிழ்நாட்டின் தூத்துக்குடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போதைய நிலையில் 2 எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தியாகி வருகின்றன.

அவை வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 (VinFast VF 6) மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 (VinFast VF 7) ஆகியவை ஆகும். இவை இரண்டுமே எலெக்ட்ரிக் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தவை ஆகும். இந்த 2 எலெக்ட்ரிக் கார்களும் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

VinFast EV

இதை தொடர்ந்து இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு வின்ஃபாஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வின்ஃபாஸ்ட் நிறுவனம் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்திற்கே போட்டியாக கருதப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட நிறுவனத்திடம் இருந்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களா? என நீங்கள் கொஞ்சம் ஆச்சரியப்படுவது புரிகிறது.

ஆம், உண்மைதான். வின்ஃபாஸ்ட் நிறுவனம் வியட்நாம் உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில் எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் கூடவே சேர்த்து விற்பனை செய்து வருகிறது. அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்திய சந்தையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய வின்ஃபாஸ்ட் நிறுவனம் தற்போது திட்டமிட்டுள்ளது.

VinFast Electric Scooter

வின்ஃபாஸ்ட் நிறுவனம், வியட்நாமில் உள்ள அவர்களது தலைமையகத்திற்கு எங்களை சமீபத்தில் அழைத்திருந்தது. அப்போது 6 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வின்ஃபாஸ்ட் நிறுவனம் காட்சிப்படுத்தியது. அவை ஃபெலிஸ், கியாரோ நியோ, தியோன் எஸ், வீரோ எக்ஸ், வெண்டோ எஸ் மற்றும் எவோ க்ராண்ட் ஆகியவை ஆகும்.

இதில், ஒரு சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், நடப்பு 2025ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் நடைபெற்ற பாரத் மொபலிட்டி குளோபல் எக்ஸ்போ நிகழ்ச்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஆனால் இதில் எந்தெந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எல்லாம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்பதை வின்ஃபாஸ்ட் நிறுவனம் உறுதியாக தெரிவிக்கவில்லை.

எனினும் இதில் ஒரு சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை வின்ஃபாஸ்ட் நிறுவனம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. எனவே இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் டிவிஎஸ், பஜாஜ், ஏத்தர் மற்றும் ஓலா ஆகிய நிறுவனங்களுக்கு எல்லாம் வின்ஃபாஸ்ட் மிக முக்கியமான போட்டியாளராக மாற போகிறது என்பது உறுதி.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: உலகிலேயே மிகவும் வேகமாக வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. எனவே இங்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வது என வின்ஃபாஸ்ட் நிறுவனம் முடிவு செய்திருப்பது உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இது அந்த நிறுவனத்திற்கு லாபகரமான ஒரு முடிவாக இருக்கும் என கருதப்படுகிறது.

அனேகமாக வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு (2026) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் பஸ்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, December 1, 2025, 23:31 [IST]
English summary
Vinfast to launch electric two wheelers in india check all details here
மேலும்... #VinFast #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+