இந்தியர்களுக்காக இத்தாலி பிராண்டுடன் இணைந்து உருவாக்கிய ஸ்கூட்டர்.. இவ்ளோ அழகா இருக்கு விலை 1லட்சம்கூட இல்லையா

விஎல்எஃப் இந்தியா (VLF India) நிறுவனமும், வெலேசிஃபெரோ இத்தாலி (Velocifero Italy) நிறுவனமும் இணைந்து இந்தியாவிற்காக ஓர் அசத்தலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடலை உருவாக்கி இருக்கின்றன. விஎல்எஃப் டென்னிஸ் மிலானோ எடிசன் (VLF Tennis Milano Edition) எனும் பெயரிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும். இது ஓர் சிறப்பு பதிப்பு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். அதாவது குறைவான எண்ணிக்கையில் மட்டுமே அது விற்பனைக்குக் கிடைக்கும். சிறப்பு பதிப்பு என்றாலும் இதற்கு மிகவும் குறைவான விலையையே விஎல்எஃப் நிறுவனம் நிர்ணயம் செய்திருக்கின்றது.

ரூ. 99,999 விலையே அதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 1.20 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. தினசரி மற்றும் நகர்புற பயன்பாட்டிற்கு ஏற்ற வாகனமாகவே இதனை விஎல்எஃப் மற்றும் வெலேசிஃபெரோ இத்தாலி நிறுவனங்கள் தயார் செய்திருக்கின்றன.

Vlf india launches milano edition scooter

அதேவேளையில், இது ஓர் சிறப்பு பதிப்பு என்பதால் மிகுந்த அட்டகாசமான தோற்றத்தையும் அதற்கு அவர்கள் வழங்கி இருக்கின்றனர். குறிப்பாக அதன் பின்னழகு பலரையும் கவரும் வகையில் உள்ளது. முற்றிலும் தனித்துவமான லுக் கொண்ட லைட்டையே விஎல்எஃப் டென்னிஸ் மிலானோ எடிசன் கொண்டிருக்கின்றது.

ஸ்கூட்டரின் பின் பக்கம் மட்டுமல்ல முன் பக்கமும் மிகுந்த அழகானதாகக் காட்சியளிக்கின்றது. ஆனால், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 200 பேரால் மட்டுமே வாங்க முடியும். விஎல்எஃப் இந்தியா நிறுவனம் இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவை அலங்கரிக்கும் விதமாக ஒரே ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

விஎல்எஃப் டென்னிஸ் 1500 டபிள்யூ எனும் மாடலை மட்டுமே அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த இ-ஸ்கூட்டருடன் சேர்த்தே தற்போது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும் சிறப்பு பதிப்பு டென்னிஸ் மிலானோ எடிசனை அறிமுகம் செய்திருக்கின்றனர். இந்த சிறப்பு பதிப்பு இ-ஸ்கூட்டரில் ஓற் முழு சார்ஜிலேயே 130 கிமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிக்க முடியும்.

இதற்காக 2.6 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே அந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் ரிமூவபிள் பேட்டரி பேக் ஆகும். அதாவது, கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட பேட்டரி பேக் ஆகும். ஆகையால், தேவைக்கேற்ப வீடு அல்லது அலுவலகம் எங்கு எடுத்துச் சென்வேண்டுமானாலும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இதேபோல், இதை முழுமையாக சார்ஜ் செய்ய வெறும் 3 மணி நேரங்களே போதும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. அதாவது, ஒரு படம் முடிவடைவதற்குள் இந்த இ-ஸ்கூட்டரை ஃபுல்லாக சார்ஜ் செய்துவிடும். இதுமட்டுமல்ல இன்னும் பல்வேறு பிரீமியம் மற்றும் அட்வான்ஸ்டு தொழில்நுட்ப வசதிகளையும் டென்னிஸ் மிலானோ எடிசனில் வழங்கி இருக்கின்றனர்.

அந்தவகையில், 5 அங்குல டிஎஃப்டி திரை வழங்கப்பட்டு இருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இது ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட திரை ஆகும். இதன் வாயிலாகவே ஸ்மார்ட் இணைப்பு இணைப்பு என ஏகப்பட்ட வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இத்துடன், மூன்று விதமான ரைடிங் மோட்களை இந்த ஸ்கூட்டரில் வழங்கி இருக்கின்றன. கூடுதல் சிறப்பு என்னவென்ரால் இந்த வாகனத்தில் அலுமினியம் ஸ்விங்கார்ம்மே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. நீடித்து உழைக்க வேண்டும் என்கிற நோக்கிலும், இதன் எடை குறைவாக இருக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே இதனை பயன்படுத்தி இருக்கின்றனர்.

இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளை டென்னிஸ் மிலானோ எடிசன் தன்னுள் தாங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இருப்பினும் வழக்கமான டென்னிஸ் 1500 டபிள்யூ மாடலைக் காட்டிலும் குறைவான விலை இதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. வழக்கமான டென்னிஸ் 1500 டபிள்யூ மாடல் இந்தியாவில் ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 999-க்கு விற்கப்படுகின்றது.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த வாகனத்தில் 1500 வாட் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது 157 என்எம் டார்க் திறனை வெளியேற்றும். அதேவேளையில், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 65 கிமீ ஆகும்.

பேட்டரி பேக்கைப் பொருத்த வரை இதில் 2.5 kWh திறன் கொண்டதே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரங்களே போதும். இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கிமீ தூரம் வரை நம்மால் பயணிக்க முடியும். இத்துடன், சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக இந்த இ-ஸ்கூட்டரில் முன் மற்றும் பின் பக்க வீலில் ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்துடன், சிறந்த ரைடிங் அனுபவத்திற்காக டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், ஹைட்ராகில் மோனோஷாக் அப்சார்பர் பின் வீலிலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், எல்இடி லைட்டுகள், 5 அங்குல டிஎஃப்டி திரை, முன் பக்கத்தில் ஹேண்ட் பேக்கை மாற்றி வைப்பதற்கான ஹூக் வசதி உள்ளிட்டவற்றையும் இது தாங்கியிருக்கின்றது. நிறத் தேர்வை பொருத்த வரை மூன்று விதமான ஆப்ஷன்களே இதில் வழங்கப்படுகின்றன. வெள்ளை, சாம்பல் மற்றும் அடர் சிவப்பு ஆகியவையே அவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே விஎல்எஃப் இந்தியா, இத்தாலியைச் சேர்ந்த நிறுவனத்துடன் சேர்ந்து புதிய சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இது 200 யூனிட்டுகளுக்கு பின்னர் மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வரப்படாது என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்பை அது பெறும் என நம்பப்படுகின்றது.

குறிப்பாக, அதன் தனித்துவமான லுக் மற்றும் பிரீமியம் அம்சங்களுக்காக மிக அமோகமான வரவேற்பைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வருகை டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக், ஏத்தர் 450 மற்றும் ஓலா எலெக்ட்ரிக் எஸ்1 ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு போட்டி அளிக்கும் விதமாக அமைந்திருக்கின்றது. ஆனால், டென்னிஸ் மிலானோ எடிசன் இ-ஸ்கூட்டருக்கு என்ன மாதிரியான வரவேற்புக் கிடைக்கும் என்பதை நாம் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 2, 2025, 23:59 [IST]
English summary
Vlf india launches the stylish tennis milano edition scooter at inr 99 999 for urban mobility
மேலும்... #electric bike #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+