இந்தியர்கள் மனச புரிஞ்சு இந்த ஸ்கூட்டர ரெடி பண்ணிருக்காங்க! இதோட மிகுந்த பின்னழகிற்கே எல்லாரும் குவியபோறாங்க!
இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களில் விஎல்எஃப் இந்தியா-வும் ஒன்றாகும். இந்த நிறுவனமே இந்தியாவில் ஓர் புதுமுக இ-ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அது ஓர் டீசர் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றது. இந்த புதிய தயாரிப்பு பற்றிய எந்தவொரு முக்கிய விபரங்களையும் அது வெளியிடவில்லை. ஆனால், அது வெளியாக ரொம்ப நாட்கள் இல்லை என்பதை நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி அன்றே அதுபற்றிய அனைத்து முக்கிய விபரங்களையும் அது வெளியிட இருக்கின்றது. சொல்லப்போனால், அந்த நாளிலேயே தன்னுடைய புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய விஎல்எஃப் இந்தியா திட்டமிட்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே புதிய தயாரிப்பு பற்றிய அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சில வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

மிக முக்கியமாக நிறுவனம் வெளியிட்டு இருக்கும் டீசர் வீடியோ விஎல்எஃப் டென்னிஸ் 1500 W மாடலின் மலிவு விலை வேரியண்டாக இருக்கும் என்கிற தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இந்த ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை மட்டுமே இப்போதைய நிலவரப்படி விஎல்எஃப் நிறுவனம் நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே 1,29,999 ரூபாய் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த அளவு அதிக விலையைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இதைவிட குறைவான விலைக் கொண்ட வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் விஎல்எஃப் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுமட்டுமல்ல, டென்னிஸ் 1500 W மாடலைக் காட்டிலும் அதிக ஆற்றல் திறன் கொண்ட வாகனமாகவும் இது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய எந்தவொரு உறுதியான தகவலும் புதிய இ-ஸ்கூட்டர் பற்றிய விபரங்களை விஎல்எஃப் வெளியிடவில்லை. குறிப்பாக, இப்போது புதிய டூ-வீலரின் ரியர் பகுதியை வெளிக்காட்டக் கூடிய டீசர் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கின்றது.
ஆகையால், இதன் ஸ்டைல் எப்படி இருக்கும் என்பது பற்றிய விபரங்களையும் எங்களால் முழுமையாக கூற முடியவில்லை. அதேவேளையில், இது பற்றிய எதிர்பார்ப்புகள் மற்றும் கேள்விகள் அனைத்திற்குமான விடை நாளை மறுநாள் கிடைத்துவிடும் என்பது கவனிக்கத்தகுந்தது. இப்போது விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்நோபிளேக் ஒயிட், ஃபையர் ஃப்யூரி டார்க் ரெட் மற்றும் ஸ்லேட் கிரே ஆகிய நிற தேர்வுகளிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 65 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஓர் முழு சார்ஜில் 130 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதைவிட அதிக பவர்ஃபுல் அல்லது இதைவிட திறன் குறைவான வேரியண்ட்டே இதில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே விஎல்எஃப் நிறுவனம் புதிய மாடல் ஒன்றை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. இதுவே நாளை மறு நாள் விற்பனைக்கு வர இருக்கின்றது.
இது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, இந்த வாகனத்தின் பின் பக்கமே மிகுந்த அழகாக தெரிகின்றது. எனவே இந்த வாகனத்தை இந்திய இரண்டு சக்கர வாகன காதலர்களின் மனதை புரிந்து மிகவும் கவர்ச்சியானதாக அவர்கள் தயாரித்து இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








