முதலில் புக் பண்ணும் 2,500 பேருக்கு மட்டும் கம்மியான விலை... இத்தாலியன்-ஸ்டைல் ஸ்கூட்டரை உடனே வாங்கி போடுங்க!!

இந்தியாவின் ஸ்கூட்டர் சந்தையில் VLF எனப்படும் வெலோசிஃபெரோ (Velocifero) என்கிற இத்தாலியன் ஸ்கூட்டர் நிறுவனம் இன்று (செப்டம்பர் 25) 'மொப்ஸ்டர்' (Mobster) என்கிற தனது புதிய அட்வென்ச்சர் ரக ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய இத்தாலியன்-ஸ்டைல் ஸ்கூட்டரை பற்றிய விரிவான விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

புதிய வி.எல்.எஃப் மொப்ஸ்டர் ஸ்கூட்டரின் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.1.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விலை முதல் 2,500 யூனிட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும், அதன்பிறகு வழக்கமான விலை அறிவிக்கப்படும். அதாவது, ஸ்கூட்டரின் விலை அதிகரிக்கப்படும்.

vlf mobster adv launched in india

விஎல்எஃப் மொப்ஸ்டர் ஸ்கூட்டர் 125சிசி லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜினுடன் வருகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8250 ஆர்பிஎம்-இல் 12.1 ஹெச்பி பவரையும், 6500 ஆர்பிஎம்-இல் 11.7 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த ஸ்கூட்டரின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 100கிமீ ஆகும்.

இதன் டிசைன் 'இடால்ஜெட்' (Italjet) வடிவமைப்பால் ஈர்க்கப்பட்டு, கீழ்நோக்கிய ஹெட்லைட் உடன் தனித்துவமாக காட்சியளிக்கிறது. மேலும், இதில் 12 இன்ச் அலாய் சக்கரங்கள், 120/70 முன்பக்க டயர் மற்றும் 130/70 பின்பக்க டயர் பொருத்தப்படுகிறது. விஎல்எஃப் மொப்ஸ்டரின் எடை 122 கிலோ ஆகும்.

தரையில் இருந்து இந்த ஸ்கூட்டரின் இருக்கை உயரம் 797 மிமீ மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் எனப்படும் தரையில் இருந்து ஸ்கூட்டரின் அடிப்பகுதியின் உயரம் 155 மிமீ ஆகும். சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறம் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறம் இரட்டை கேஸ்-சார்ஜ் ஷாக் அப்சார்பர்கள் உள்ளன. பாதுகாப்பிற்காக, 230மிமீ முன்பக்க டிஸ்க் பிரேக் மற்றும் 220 மிமீ பின்பக்க டிஸ்க் பிரேக்குடன் டூயல்-சேனல் ஏபிஎஸ் (ABS) கொடுக்கப்பட்டுள்ளது.

மொப்ஸ்டர் ஸ்கூட்டரில் ஸ்விட்ச் செய்யக்கூடிய டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் ப்ளூடூத் வசதியுடன் கூடிய 5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே (TFT Display) இடம்பெற்றுள்ளது. சாவியில்லாமல் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும் வசதி மற்றும் விருப்பமான முன்பக்க டாஷ்கேம் (Dashcam) போன்ற கூடுதல் அம்சங்களும் இந்த ஸ்கூட்டரில் உள்ளன.

அறிமுக விலையில், விஎல்எஃப் மொப்ஸ்டர் ஆனது யமஹா ஏரோக்ஸ் 155 (ரூ.1.38 லட்சம்) மற்றும் ஹீரோ ஜூம் 160 (ரூ.1.37 லட்சம்) போன்ற பிரிமியம் தரத்திலான ஸ்கூட்டர்களுடன் போட்டியிடுகிறது. இதில் 125சிசி லிக்யுடு-கூல்டு என்ஜின் இருப்பது இந்தியாவில் உள்ள ஸ்கூட்டர்களில் மிகச்சிறிய கொள்ளளவு கொண்ட லிக்யுடு-கூல்டு என்ஜினாக விளங்குகிறது.

இந்தியாவில் விஎல்எஃப் மொப்ஸ்டர் ஸ்கூட்டருக்கான சேல்ஸ் & சர்வீஸை மோட்டோஹாஸ் நிறுவனம் மேற்கொள்கிறது. இதே மோட்டோஹாஸ் நிறுவனம் தான் விஎல்எஃப் டென்னிஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும் விற்பனை செய்கிறது. மோட்டோஹாஸ் தற்போது நாடு முழுவதும் 12 டீலர்ஷிப்களைக் கொண்டுள்ளது, மேலும் விரைவில் 10 கூடுதல் அவுட்லெட்களைத் திறக்க திட்டமிட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விஎல்எஃப் மொப்ஸ்டர் ஸ்கூட்டர் கவர்ச்சிகரமான வடிவமைப்பு, சக்திவாய்ந்த என்ஜின் மற்றும் பல அம்சங்களை ஒருங்கிணைத்து ஒரு சிறந்த தேர்வாக தோன்றுகிறது. இருப்பினும், ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), டி.வி.எஸ் (TVS), யமஹா (Yamaha) போன்ற பெரிய நிறுவனங்கள் ஏற்கெனவே சந்தையில் வலுவான போட்டியாளர்களாக அவற்றின் 125சிசி ஸ்கூட்டர்களின் போட்டியை எவ்வாறு சமாளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 25, 2025, 20:05 [IST]
English summary
Vlf introduced mobster adv scooter in india price features all details here
மேலும்... #scooter #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+