2 நாளில் 1000 பேர் இந்த ஸ்கூட்டரை புக் பண்ணிட்டாங்க! போட்டி போட்டு வாங்குற அளவுக்கு இதுல என்ன இருக்குது?
விஎல்எஃப் மாப்ஸ்டர் 135 ஸ்கூட்டர் ஒரு பிரிமியம் பெர்ஃபார்மென்ஸ் ஸ்கூட்டராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் புக்கிங் துவங்கப்பட்ட 48 மணி நேரத்தில் 1000 பேர் புக் செய்துள்ளனர். மிகப்பெரிய அளவிற்கு இந்த ஸ்கூட்டருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. சிலர் இந்த ஸ்கூட்டரின் பெயரையே இப்பொழுது தான் கேள்விபடுகிறேன். எப்படி விற்பனை நடக்கிறது என கேட்பார்கள். இந்த ஸ்கூட்டர் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கூட்டர் தான் விஎல்எஃப் 135 ஸ்கூட்டர். இந்த ஸ்கூட்டருக்க கடந்த 2 நாட்களுக்கு முன்னர் புக்கிங் துவங்கியது. புக்கிங் துவங்கிய 48 மணி நேரத்தில் 1000 பேர் இந்த ஸ்கூட்டரை புக்கிங் செய்ய துவங்கிவிட்டனர். இந்த ஸ்கூட்டர் ரூ1.30 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் டிசைன் மற்றும் பவர் அம்சங்கள் தான் இந்த ஸ்கூட்டரை தனித்துவபடுத்தி காட்டுகிறது.

தற்போது இந்த ரூ1.30 லட்சம் என்பது அறிமுக விலை தான். அறிமுக விலைக்கான கால அளவு முடிந்ததும். இந்த ஸ்கூட்டர் ரூ1.38 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் தனித்தனி உதிரிபாகங்களாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்ப்டடு அந்நிறுவனத்திற்கு சொந்தமாக மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் பகுதியில் உள்ள ஆலையில் வைத்து கட்டமைக்கப்படுகிறது.
இந்த ஸ்கூட்டரை இத்தாலி நாட்டைச் சேர்ந்த அலஸ்டிரான்டோ டார்டார்ரினி என்பவர் வடிவமைத்தார். இது அட்வெஞ்ச்ர், ஸ்டிரீட் ஃபைட்டர் ஆகிய இரண்டிற்கும் நடுவே இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 125 சிசி ஸ்கூட்டர்களை விட அதிக ஃபெர்பார்மென்ஸை வெளிப்படுத்தும்.

இந்த ஸ்கூட்டரின் இன்ஜினை பொருத்தவரை 125 சிசி லிக்யூட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர், இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 12.1 பிஎச்பி பவரையும், 11.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சம் 105 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டரில் முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க், மற்றும் பின்பக்கம் கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சர்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த ஸ்கூட்டரின் பிரேக்குகளை பொருத்தவரை பொருத்தவரை இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக் பொரத்தப்பட்டுள்ளுது. இது போக ஸ்விட்சபிள் ஏபிஎஸ் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் ஆகிய அம்சள் உள்ளன. இந்த பைக்கில் 12 இன்ச் அலாய் வீல்கள் டுயல் பயன்பாட்டு டயர்களும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் 5 இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளே ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன், இலுமினேட் செய்யக்கூடிய ஸ்விட்ச் கியர்களுடன் கூடியதாக வழங்கப்பட்டுள்ளது. ஆட்டோ/ ஸ்டார்ட்/ ஸ்டாப், கீலெஸ் இக்னீஷியன் ஆகிய அம்சங்கள் உள்ளது. இந்த ஸ்கூட்டர் 46 கி.மீ மைலேஜ் தரும் என்றும் 8லிட்டர் வரை பெட்ரோல் கொள்ளவு கொண்டதாக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தஸ்கூட்டரின் டெலிவரி வரும் நவம்பர் மாதம் முதல் துவங்குகிறது. இந்த ஸ்கூட்டர் மார்கெட்டில் உள்ள ஹீரோ ஸூம் 160, டிவிஎஸ் என்டார்க், ஆப்ரிலியா எஸ்ஆர் 175, யமஹா ஏராக்ஸ் 155, ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறது. இந்த ஸ்கூட்டர் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









