ஒருவழியா இந்தியாவில் ஆரம்பிச்சுட்டாங்க... ஸ்கூட்டரின் விலை இதுக்கு அப்புறம் ஆவது குறையுமா?

வி.எல்.எஃப் (VLF) நிறுவனம், தனது முதல் பெட்ரோல் ஸ்கூட்டரான 'மொப்ஸ்டர் 135' (Mobster 135)-இன் உற்பத்தி பணிகளை இந்தியாவின் மஹாராஷ்டிராவில் கோலாப்பூர் (Kolhapur) பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தொடங்கியுள்ளது. இதனை உறுதி செய்யும் படங்களை விஎல்எஃப் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மொப்ஸ்டர் 135 ஸ்கூட்டர், 2025 செப்டம்பரில் ரூ.1.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டு, முன்பதிவுகளும் (Bookings) துவங்கப்பட்டன. முதல் 48 மணி நேரத்திலேயே 1,000 மொப்ஸ்டர் 135 ஸ்கூட்டர்கள் முன்பதிவாகிய நிலையில், முதல் மாதத்திலேயே 2,500-க்கும் அதிகமான முன்பதிவுகள் இந்த ஸ்கூட்டருக்கு கிடைத்தன.

vlf mobster 135 scooter assembly

மேலே குறிப்பிடப்பட்ட ரூ.1.30 லட்சம் விலை ஆனது முதல் 2,500 யூனிட்களுக்கு மட்டுமே என்றும், அதன்பின் விலை உயர்த்தப்படும் என்றும் தெரிவித்த போதிலும், அக்டோபரில் மேலும் 500 யூனிட்களை இந்த எண்ணிக்கையில் விஎல்எஃப் சேர்த்தது. இதன்மூலம் ஆரம்ப கால முன்பதிவு ஒதுக்கீடு 3,000 ஆக உயர்ந்தது. 3,000 யூனிட்கள் முன்பதிவாகிய பின் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.1.38 லட்சம் ஆகும்.

அடுத்த டிசம்பர் மாதத்தில் இருந்து ஸ்கூட்டருக்கான டெலிவிரிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மொப்ஸ்டர் 135 ஸ்கூட்டர்கள் சி.கே.டி (CKD) முறையில் வெளிநாடுகளில் இருந்து பாகங்களாக கொண்டு வரப்பட்டு, கோலாப்பூரில் உள்நாட்டிலேயே முழு ஸ்கூட்டராக அசெம்பிள் (Assemble) செய்யப்பட துவங்கப்பட்டுள்ளன.

vlf mobster 135 scooter assembly

இத்தாலிய வடிவமைப்பாளர் அலெஸாண்ட்ரோ டார்டாரினி வடிவமைத்துள்ள இந்த ஸ்கூட்டர், கூர்மையான உடல் வடிவமைப்பு, இரட்டை புரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் முழு எல்.இ.டி லைட்டிங் அமைப்பைக் கொண்டுள்ளது. 5-இன்ச் டி.எஃப்.டி டிஸ்ப்ளே (புளூடூத் உடன்), கீலெஸ் இக்னிஷன், ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப், ஒளிரும் சுவிட்ச்கியர் மற்றும் ஸ்விட்சபிள் டிராக்‌ஷன் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் இதில் உள்ளன.

வி.எல்.எஃப் நிறுவனம் ஒரு விருப்பமான டாஷ் கேமிராவையும் இந்த ஸ்கூட்டரில் வழங்குகிறது. மொப்ஸ்டர் 135 ஸ்கூட்டர் 122 கிலோ எடையும், 1,341 மி.மீ வீல்பேஸ் (முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம்), தரையில் இருந்து 797 மி.மீ உயரத்தில் ரைடர் இருக்கை மற்றும் 155 மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ் (தரையில் இருந்து ஸ்கூட்டரின் அடிப்பகுதியின் உயரம்) கொண்டுள்ளது.

vlf mobster 135 scooter assembly

இதன் 125சிசி லிக்யூடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் 12.1 பி.ஹெச்.பி ஆற்றலையும், 11.7 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. இதன் உச்சப்பட்ச வேகம் மணிக்கு 105 கி.மீ. ஆகும். இந்த ஸ்கூட்டரின் முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் கேஸ்-சார்ஜ் செய்யப்பட்ட இரட்டை ஷாக்குகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பிரேக்கிங் பயணியை கவனிக்க 230 மி.மீ முன்புற டிஸ்க் பிரேக்கும், 220 மி.மீ பின்புற டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றுடன், டூயல்-சேனல் ஏபிஎஸ் (Dual-channel ABS) வசதியும் இந்த ஸ்கூட்டரில் உள்ளது. இந்த ஸ்கூட்டரின் 12-இன்ச் அலாய் சக்கரங்கள், டூயல்-பர்பஸ் டயர்களுடன் (முன்புறம் 120/70, பின்புறம் 130/70) வருகிறது.

vlf mobster 135 scooter assembly

வி.எல்.எஃப் நிறுவனம் மொப்ஸ்டர் 135 ஸ்கூட்டரில் 46 கி.மீ/லிட்டர் மைலேஜை உறுதிப்படுத்துகிறது. இந்த ஸ்கூட்டரில் 8 லிட்டர் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க் உள்ளது. ஹீரோ ஜூம் 160, டி.வி.எஸ் என்டார்க் 150, அப்ரில்லா எஸ்.ஆர் 175 மற்றும் யமஹா ஏராக்ஸ் 155 போன்ற ஸ்கூட்டர்களுடன் இது விற்பனையில் போட்டியிட உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விஎல்எஃப் மொப்ஸ்டர் 135 அதன் வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் பிரீமியம் ஸ்கூட்டர் பிரிவில் நுழைகிறது. இந்தியாவில் ஸ்விட்சபிள் டூயல்-சேனல் ஏபிஎஸ் வசதியை வழங்கும் ஒரே 125சிசி ஸ்கூட்டர் இதுதான். இத்தகைய ஸ்கூட்டரின் அசெம்பிள் பணிகள் இந்தியாவிலேயே துவங்கப்பட்டுள்ளதால், எதிர்பார்த்தப்படி வருகிற டிசம்பர் மாதத்தில் இருந்து புக் செய்தவர்களுக்கு ஸ்கூட்டரை டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 29, 2025, 10:45 [IST]
English summary
Vlf mobster 135 scooter assembly has been start in kolhapur india check all details here
மேலும்... #scooter #bike production #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X