ஓலாவின் இடத்தை பிடிக்க ஒரே அடியா ரூ. 13,000த்தை குறைத்த நிறுவனம்.. ஒருத்தரை முந்துவதற்காக இப்படியா!!

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் நோக்கில் பிரபல மின்சார இரண்டு வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று மாபெரும் விலை குறைப்பை அறிவித்திருக்கின்றது. வதோதராவை மையமாகக் கொண்டு இயங்கும் ஜாய் இ-பைக் (Joy e-Bike), இதுவே விலை குறைப்பைச் செய்திருக்கும் அந்த நிறுவனம் ஆகும். தன்னுடைய, குறிப்பிட்ட சில மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் விலையையே அது குறைத்திருக்கின்றது.

ரூ. 13 ஆயிரம் வரை அது விலை குறைப்பைச் செய்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த விலை குறைப்பு நிறுவனத்தின் மாடல்களைப் பொருத்து மாறுபடும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஜென் நெக்ஸ்ட் மற்றும் உல்ஃப் சீரிஸ்-இல் விற்பனைக்குக் கிடைக்கும் சில மாடல்களின் விலை மாடல்களின் விலையையே நிறுவனம் குறைத்திருக்கின்றது.

Joy e-bikes cuts prices on select models

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. விரிவாக சொல்ல வேண்டும் என்றால், உல்ஃப் 31ஏஎச் (WOLF 31AH), உல்ஃப் ஈகோ (WOLF ECO), உல்ஃப் பிளஸ் (WOLF PLUS), ஜென் நெக்ஸ்ட் 31 ஏஎச் (GEN NEXT 31AH), ஜென் நெக்ஸ்ட் நானு பிளஸ் (GEN NEXT NANU PLUS) மற்றும் ஜென் நெக்ஸ் நானு ஈகோ (GEN NEXT NANU ECO) ஆகிய மாடல்களின் விலையையே ஜாய் இ-பைக் குறைத்திருக்கின்றது.

சந்தையில் தன்னுடைய இருப்பை விரிவுப்படுத்தும் நோக்கிலேயே இந்த விலை குறைப்பை ஜாய் இ-பைக் மேற்கொண்டிருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர பிரிவை பஜாஜ், டிவிஎஸ், ஏத்தர் மற்றும் ஓலா எலெக்ட்ரிக் ஆகியோரே மிகப் பெரிய ஆதிக்கத்தைச் செய்து வருகின்றனர்.

இவர்களின் வரிசையில் இணையும் பொருட்டே தற்போது விலை குறைப்பை ஜாய் இ-பைக் செய்திருக்கின்றது. குறிப்பாக, விற்பனையில் இவர்களுக்கு டஃப் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே இந்த விலை குறைப்பை அது செய்திருக்கின்றது. மேலும், இந்த விலைக் குறைப்பால் தற்போது மீண்டும் இந்தியர்கள் மத்தியில் ஜாய் இ-பைக் நிறுவனம் பிரபலமடையத் தொடங்கி இருக்கின்றது என்றே கூறலாம்.

அந்த அளவிலேயே மிகப் பெரிய தொகையை அது குறைத்திருக்கின்றது. நிறுவனத்தின் இந்த விலைக் குறைப்பு நடவடிக்கையால் இன்னும் பலரால் நுகரக் கூடியதாக ஜாய் இ-பைக் நிறுவனத்தின் தயாரிப்புகள் மாறியிருக்கின்றன. ஆகையால், நிறுவனம் வரும் நாட்களில் இரட்டிப்பான விற்பனை வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டும் சக்கர வாகனங்களுக்கு இரட்டிப்பான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இந்த சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கிலேயே ஜாய் இ-பைக் நிறுவனம் இந்தியாவில் தற்போது விலை குறைப்பை அறிவித்து இருக்கின்றது. இது நிறுவனத்தின் விற்பனையில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கும் என நாங்கள் நம்புகின்றோம். குறிப்பாக, சமீப காலமாக ஓலா விற்பனையில் பின் தங்கிக் காணப்படுகின்றது.

இதன் இடத்தைப் பிடிக்கும் நோக்கிலும் இந்த விலை குறைப்பைச் செய்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. மேலும், நிறுவனம் விலை குறைப்பை அறிவித்திருக்கும் இந்த மாடலில் சிலவற்றை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்பது கவனிக்கத்தகுந்தது. ஆமாங்க, குறைந்த வேகத்தில் இயங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சிலவற்றின் விலையையும் ஜாய் இ-பைக் தற்போது குறைந்திருக்கின்றது. அவற்றை பதிவு செய்ய மட்டுமல்ல, இயக்குவதற்கு லைசென்ஸும் தேவைப்படாது. ஆகையால், சிறுவர்களும் அதை ஓட்டிக் கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Monday, April 21, 2025, 9:26 [IST]
English summary
Wardwizard reduces prices on select joy e bike models to enhance accessibility
மேலும்... #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+