17சதவீத டிஸ்கவுண்டில் இ-சைக்கிள் அறிமுகம்! பைக் வாங்கறதுக்கு பதிலா இந்த இ-சைக்கிளை வாங்கிட்டு போயிரலாம் போல..

ஆல்ஃபா வெக்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் (AlphaVector India Pvt. Ltd)-இன் சைக்கிள் உற்பத்தி நிறுவனம் நைன்டி ஒன் (Ninety One). இந்த நிறுவனமே பைக்குகளுக்கு டஃப் கொடுக்கும் வசதிக் கொண்ட இ-சைக்கிளை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. வோல்வரின் எக்ஸ் 27.5டி (Wolverine X 27.5T) விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இது ஓர் சிங்கிள் ஸ்பீடு எலெக்ட்ரிக் சைக்கிள் (Single-Speed Electric Cycle) ஆகும். நவீன தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கிய ஓர் இ-சைக்கிள் மாடலே இதுவாகும். இதற்கு ரூ. 29,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

ஆனால், இது உண்மை விலையல்ல. இதில் இருந்து 17 சதவீதம் டிஸ்கவுண்ட் செய்தே இந்த இ-சைக்கிளை விற்பனைச் செய்ய இருக்கின்றது, நைன்டி ஒன் நிறுவனம். அதாவது, 24,999 ரூபாவே இதற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. அறிமுகத்தைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் இந்த சைக்கிளுக்கான விற்பனை பணிகள் தொடங்கி இருக்கின்றன.

Wolverine x 27 5t electric cycle

சைக்கிளின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு ஓராண்டு மோட்டாருக்கு வாரண்டியும், 2 ஆண்டுகள் பேட்டரி பேக்கிற்கு வாரண்டியும் மற்றும் ஐந்து ஆண்டுகள் சைக்கிளின் ஃப்ரேமுக்கு வாரண்டியும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, மற்ற முக்கிய எலெக்ட்ரிக் பாகங்களுக்கு ஆறு மாதங்கள் வாரண்டி அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

ஆகையால், வாடிக்கையாளர்கள் தயக்கமின்றி இந்த வாகனத்தை வாங்க முன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக மட்டுமல்ல சிறப்பு வசதிகளுக்காகவும் வாடிக்கையாளர்கள் இ-சைக்கிளை வாங்க முன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சைக்கிளில் 7.8 Ah திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி பக் இந்த இ-சைக்கிளில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இது பெடல் அசிஸ்ட் வசதி உடன் 40 கிலோ மீட்டருக்கும் அதிகமான ரேஞ்சையும், த்ரோட்டில் மோடில் 25 கிமீட்டருக்கும் அதிகமான ரேஞ்சையும் இந்த இ-சைக்கிள் வழங்கும். எலெக்ட்ரிக் மோட்டாரை பொருத்த வரை இந்த இ-சைக்கிளில் அதிகபட்சமாக 36V 250W எலெக்ட்ரிக் மோட்டாரே வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன், சிறந்த ரைடு அனுபவத்திற்காக முன் மற்றும் பின் பக்கங்களில் இந்த சைக்கிளில் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. இது பாதுகாப்பான ரைடு அனுபவத்திற்கு வழி வகுக்கும். இத்துடன், இ-பிரேக் சிஸ்டமும் இந்த எலெக்ட்ரிக் சைக்கிளில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது இ-சைக்கிளுக்கு ஆட்டோமேட்டிக் கட்-ஆஃப் வசதி வழங்கும்.

தொடர்ந்து, சௌகரியமான பயண அனுபவத்திற்காக 91 டஃப் ஷான்க்ஸ் சஸ்பென்ஷன் ஃபோர்க்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, சிறப்பான இயக்கத்திற்காக இந்த சைக்கிளில் 27.5" x 2.1" உயர் டிராக்சன் திறன் கொண்ட நைலான் டயர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், எல்சிடி திரை ஒன்றும் இந்த எலெக்ட்ரிக் சைக்கிளில் பன்முக தகவலை வழங்கும் பொருட்டு வழங்கி இருக்கின்றனர்.

மிக முக்கியமாக பேட்டரி சார்ஜ் அளவு, பெடல் அசிஸ்ட் லெவல்கள் உள்ளிட்ட தகவல்களை இதன் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும். இத்தகைய சூப்பரான வோல்வரின் எக்ஸ் 27.5டி எலெக்ட்ரிக் சைக்கிளையே 17 சதவீத தள்ளுபடி விலையில் நைன்டி ஒன் பிராண்டு விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

அலுவலகம் சென்று வருவோர், அடிக்கடி குறைந்த தூர பயணங்களை மேற்கொள்வோருக்கு இந்த சைக்கிள் பெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது. இதை இயக்க ஓட்டுநர் உரிமம் அல்லது பதிவு சான்று என எதுவும் தேவைப்படாது. ஆகையால், பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவர்களும் இதை தடையின்றி பயன்படுத்திக் கொள்ள முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே நைன்டி ஒன் நிறுவனம் வோல்வரின் எக்ஸ் 27.5டி எனும் புது மாடல் சைக்கிளை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 16, 2025, 16:23 [IST]
English summary
Wolverine x 27 5t single speed electric cycle revolutionises urban commuting in india
மேலும்... #auto news #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+