வெறும் ரூ15 செலவில் 106 கி.மீ போகலாமா? இந்த வண்டி ரேட்டும் கம்மியா தான் வரும்!
யமஹா நிறுவனம் சமீபத்தில் தனது ப4 புதிய தயாரிப்புகளை வெளியிட்டது. அதன்படி எக்ஸ்எஸ் ஆர் 155, எஃப் இசட் ரெவ், ஏராக்ஸ் எலெக்ட்ரிக், இசி-06 ஆகியவாகன்ஙளை வெளியிட்டது. இதில் ஏராக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜில் 106 கி.மீ பயணிக்கும் என்றும், இசி06 160 கி.மீ பயணிக்கும் என கூறப்பட்டது. குறைந்த விலையில் ஏராக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் வரும் என கணிக்கப்படுவதால் அதன் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
இந்நிறுவனம் வெளியிட்ட யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் ரூ1.50 லட்சம் என்ற விலையிலும், எஃப் இசட் ரெவ் ரூ1.17 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது. யமஹா ஏராக்ஸ், மற்றும் இசி06 ஆகிய வாகனங்களின் விலை விபரங்கள் வெளியிடப்பட்டவில்லை. இந்த வாகனங்கள் 2026ம் ஆண்டு முதல் காலாண்டில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்படடுள்ளது.

யமஹா ஏராக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாகனம் முழு சார்ஜில் 106 கி.மீ பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வாகனத்தில் யமஹா நிறுவனம் 1.5Kwh ரிமூவபிள் டுயல் பேட்டரியை பயன்படுத்துகிறது. மேலும் இதில் 9.5kW பவர் மற்றும் 48 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் மோட்டாரையும் பொருத்தியுள்ளது.
இதில் உள்ள ரிமூவபிள் பேட்டரியில் ஹை எனர்ஜி டைப் செல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இதன் பெர்ஃபார்மென்றா் சிறப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் எக்கோ, ஸ்டாண்டர்டு, பவர், பூஸ்ட் ஆகிய 4 விதமான ரைடு மோடுகளும் உள்ளன. மேலும் பிரேக்கிங்கிற்காக பின்பக்க வீலில் டிஸ்க் பிரேக் ஏபிஎஸ் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்ட 1.5 Kwh பேட்டரியை சார்ஜ் செய்ய எவ்வளவு செலவாகும் என்ற சந்தேகம் இருக்கிறது. பொதுவாக 1Kwh பேட்டரியை சார்ஜ் செய்ய 1-1.2 யூனிட் மின்சாரம் தேவைப்படும். அப்படி என்றால் 1.5Kwh பேட்டரியை சார்ஜ் செய்ய அதிகபட்சம் 1.75-2 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும்.
நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மின்சார கட்டணத்திற்கு ஏற்ப இதன் செலவு மாறுபடும் சில இடங்களில் யூனிட்டிற்கு வெறும் ரூ5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சிலஇடங்களில் ரூ7, சில இடங்களில் ரூ10 என வசூலிக்கப்படுகிறது. இதில் ரூ7 சராசரியாக நாம் எடுத்துக்கொண்டாலும் ஒரு முறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய ரூ14-15 மட்டுமே செலவாகும்.

மேலும் யமஹா நிறுவனம் இந்த வாகனத்திற்கு டுயல் பேட்டரி செட்டப்பை வழங்குகிறது. இதை ரிமூவ் செய்யும் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு பேட்டரியை சார்ஜ் போட்டுவிட்டு மற்றொரு பேட்டியில் இயங்கலாம். இந்நிறுவனம் தெரிவித்துள்ள 106 கி.மீ ரேஞ்ச் என்பது இரண்டு பேட்டரி சார்ஜிற்கான ரேஞ்சா அல்லது ஒரு பேட்டரி சார்ஜிற்கான ரேஞ்சா என்ற தெளிவான தகவல்களை தெரிவிக்கவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு பேட்டரிக்கான சார்ஜ் என்றால் ஒரு கி.மீ பயணிக்க வெறும் ரூ0.15 தான் செலவாகும். இரண்டு பேட்டரிக்குமான ரேஞ்ச் என்றால் ஒரு கி.மீ பயணிக்க ரூ0.30 வரை செலவாகும். இது வெறும் உத்தேச கணக்கு தான். இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும் வாய்ப்பு உள்ளது. இதனால் உங்கள் சரியான கணக்கீட்டை நீங்கள் உங்களுக்கு செலவாகும் மின்சார செலவு மற்றும் உங்கள் பகுதியில் உள்ள மின்சார கட்டணத்தை கணக்கிட்டு தெரிந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications









