10 வருஷத்துக்கு மெக்கானிக் ஷாப் போகுற வேலையே இருக்காது! யமஹாவின் புது திட்டத்தை பார்த்து படையெடுக்கும் மக்கள்!
யமஹா (Yamaha), உலகளவில் பிரபலமான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம். குறிப்பாக, இந்தியாவில் நீண்ட வருடங்களாக 'இந்தியா யமஹா மோட்டார்ஸ்' (India Yamaha Motors) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எத்தனை வருடங்கள் என்றால், இந்தியாவில் சுமார் 40 வருடங்களை யமஹா நிறுவனம் கடந்துள்ளது. இதனை கொண்டாடிவரும் இந்தியா யமஹா மோட்டார்ஸ் நிறுவனம், இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அதன் இருசக்கர வாகனங்களுக்கு கூடுதல் உத்தரவாத காலத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ஜப்பானில் இருந்து பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன. சுஸுகி, டொயோட்டா, ஹோண்டா என இந்த லிஸ்ட்டை சொல்லிக் கொண்டே போகலாம். 2-வீலர்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக யமஹா ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் நுழைந்தது. ராயல் என்ஃபீல்டு, பஜாஜ் ஆட்டோ போன்ற இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே செயல்பட்டு வந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்த முதல் 2-வீலர் நிறுவனங்களுள் யமஹாவும் ஒன்றாகும்.

சுமார் 40 வருடங்களாக, இந்தியாவில் பல நல்லது, கெட்டதுகளை பார்த்துள்ள யமஹா நிறுவனம் இந்த 40-வருட மைல்கல்லை கடந்திருப்பதை பல வழிகளில் கொண்டாடி வருகிறது. அவற்றுள் ஒரு வழிதான், யமஹா 2-வீலர்களுக்கு சுமார் 10-வருட உத்தரவாதம் ஆகும். அதாவது, தங்களது இருசக்கர வாகனங்களை குறைந்தது 10 வருடங்கள் ஆவது பயன்படுத்தலாம் என யமஹா உறுதியளிக்கிறது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து யமஹா ஸ்கூட்டர்கள் (Scooters) மற்றும் பைக்குகளுக்கு (Bikes) அறிவிக்கப்பட்டுள்ள யமஹாவின் இந்த கூடுதல் உத்தரவாதம் ஆனது 'புதிய 10-வருட மொத்த உத்தரவாதம்' என அழைக்கப்படுகிறது. இதில், 'மொத்த' என்கிற வார்த்தை எதை குறிக்கிறது என்றால், யமஹா 2-வீலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த உத்தரவாதத்தை குறிக்கிறது.

இதில், 2 வருட நிலையான உத்தரவாதம் மற்றும் 8 வருட நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் அடங்குகின்றன. அதாவது, யமஹா 2-வீலர் உடன் 2-வருட நிலையான உத்தரவாதத்தை பெறலாம். இதனுடன் கூடுதல் கட்டணத்தை செலுத்துவதன் மூலம் கூடுதலான 8 வருட உத்தரவாதத்தை பெறலாம். 10 வருட காலத்திற்கு யமஹா ஸ்கூட்டர்களுக்கு அதிகப்பட்சமாக 1 லட்ச கிமீ-க்கு உத்தரவாதம் அளிக்கப்படும்.
அதாவது, 10 வருடங்களுக்கு உள்ளாகவே 1 லட்ச கிமீ தொலைவிற்கு யமஹா ஸ்கூட்டரை ஓட்டிவிட்டால், அப்போதே உத்தரவாத காலம் முடிவுக்கு வந்துவிடும். ஸ்கூட்டர்களுக்கு 1 லட்ச கிமீ உத்தரவாதம் என்றால், யமஹா பைக்குகளுக்கு 125கிமீ உத்தரவாதம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 2-வீலர்களுக்கு மட்டுமே என யமஹா தெரிவித்துள்ளது.
அதாவது, யமஹா நிறுவனத்தால் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் ஆர்3 (R3) மற்றும் எம்டி-03 (MT-03) போன்ற விலையுயர்ந்த பைக்குகள் இந்த கூடுதல் உத்தரவாத சலுகையின் கீழ் வரவில்லை. மேலும், 8-வருட நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை பெறும் யமஹா 2-வீலர்களிலும் அனைத்தும் வாரண்டியில் கவர் ஆகவில்லை. அதாவது, வாகனத்தின் என்ஜின், எலக்ட்ரானிக் ஃப்யுல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் போன்ற எலக்ட்ரிக்கல் பாகங்களை பொறுத்து வாரண்டி கவரேஜ்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள யமஹா டீலர்ஷிப் ஷோரூமை அணுகவும். இந்த கூடுதல் உத்தரவாத சலுகை ஆனது குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதாக யமஹா தெரிவித்துள்ளது. ஏற்கனவே, யமஹா 2-வீலரை பயன்படுத்தி வருபவர்களும் இந்த சலுகை காலத்தை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தி கூடுதல் 8-வருட உத்தரவாதத்தை பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கஸ்டமர்களுக்கு முடிந்தவரையில் நம்பகமான தயாரிப்புகளை வழங்க வேண்டும் என்கிற யமஹாவின் கொள்கையில் இவ்வாறான கூடுதல் உத்தரவாத கால அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதன் மூலமாக, இந்திய கஸ்டமர்கள் உடன் இன்னும் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள யமஹா முயற்சிக்கிறது. வாகனத்தின் விலையில் தள்ளுபடிகளை வழங்குவதை காட்டிலும், இவ்வாறு வாகனத்திற்கான உத்தரவாதத்தை அதிகரித்தால் எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் மக்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துவிடும்.


Click it and Unblock the Notifications








