ரூ.999இல் பிராண்ட்-நியூ ஸ்கூட்டர் தரும் யமஹா... இந்த பணம் இருந்தால் போதும் நீங்க தான் ஓனர்!!
பொங்கல் பண்டிகை (Pongal Festival) நெருங்கி வருகிறது. தீபாவளிக்கு அடுத்து இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகையாக பொங்கல் பண்டிகையை சொல்லலாம். ஒவ்வொரு வருடமும் பொங்கலுக்கு மறக்காமல் சலுகைகளை அறிவித்துவிடும் நிறுவனம் யமஹா (Yamaha) ஆகும். அந்த வகையில் இந்த வருடமும் தமிழ்நாட்டில் யமஹா அதன் பிரபலமான 2-வீலர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. அவை என்னென்ன என்பதை பற்றியும், சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள யமஹா 2-வீலர்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் 2-வீலர்களை விற்பனை செய்யும் நிறுவனமாக யமஹா விளங்குகிறது. குறிப்பாக, இந்த நிறுவனத்தின் எஃப்.இசட் (FZ) பைக்குகளுக்கும், ஃபேஸினோ (Fascino), ரே இசட்.ஆர் (Ray ZR) என்கிற 125சிசி ஸ்கூட்டர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் அதிக எண்ணிக்கையில் கஸ்டமர்கள் குவிந்து வருகின்றனர்.

இதனை தக்க வைத்து கொள்ளும் முயற்சியாக, அவ்வப்போது மறக்காமல் யமஹா நிறுவனம் சலுகைகளை அறிவித்துவிடுகிறது. குறிப்பாக, பொங்கல் சமயத்தில் யமஹாவில் இருந்து நிச்சயமாக சலுகைகளை எதிர்பார்க்கலாம். ஏனெனில், தென்னிந்தியாவில் இருந்துதான் யமஹாவுக்கு அதிக கஸ்டமர்கள் கிடைப்பதால், பொங்கல் போன்ற தென்னிந்தியர்களால் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளை யமஹா மறப்பது இல்லை.
இந்த 2025ஆம் வருடத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி, தமிழ்நாட்டு கஸ்டமர்களுக்கு என பிரத்யேகமாக சிறப்பு சலுகைகளை யமஹா அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு மட்டும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு சலுகைகளில் கவர்ச்சிக்கரமான பணம் தள்ளுபடி மற்றும் குறைந்த முன்தொகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை பெற, யமஹா 2-வீலரை தமிழ்நாட்டில் வாங்க வேண்டும்.

அனைத்து யமஹா 2-வீலர்களுக்கும் இந்த சலுகைகள் அறிவிக்கப்படவில்லை. எஃப்.இசட் பைக்குகள், ஃபேஸினோ மற்றும் ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்கள் போன்ற யமஹாவில் இருந்து அதிகம் விற்பனையாகும் 2-வீலர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. யமஹா எஃப்.இசட் பைக்குகளுக்கு ரூ.4,000 வரையிலான பணம் தள்ளுபடி மற்றும் ரூ.4,999-இல் குறைந்த முன்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எஃப்.இசட்-எஸ் வெர்சன் 4.0, வெர்சன் 3.0, எஃப்.இசட் மற்றும் எஃப்.இசட்-எக்ஸ் பைக்குகள் யமஹாவின் எஃப்.இசட் பைக்குகளாக விற்பனை செய்யப்படுகின்றன. எஃப்.இசட்-எஸ் பைக் 2 விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகிறது. மறுப்பக்கம், யமஹா ஃபேஸினோ 125 ஹைப்ரீட் மற்றும் ரே இசட்.ஆர் 125 ஹைப்ரீட் ஸ்கூட்டர்களுக்கு ரூ.4,000 வரையிலான பணம் தள்ளுபடியும், ரூ.999இல் குறைந்த முன்தொகை திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை இரண்டும் ஹைப்ரீட் ஸ்கூட்டர்கள் ஆகும். அதாவது இவற்றில் வழங்கப்படும் பேட்டரியை சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 6 கிலோவாட்ஸ் (8.2 பிஎஸ்) வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இவை அனைத்திலும் ஃப்யுல்-இன்ஜெக்டட் (Fuel Injected) என்ஜின் பொருத்தப்படுவதால், இவற்றின் பெயருக்கு பின்னால் எஃப்.ஐ (Fi) என குறிப்பிடப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.4,000 பணம் தள்ளுபடி என்பது கொஞ்சம் குறைவுதான். இருந்தாலும், சலுகையாக வழங்கப்படுவதை குறை சொல்ல முடியாது. யமஹாவின் இந்த சலுகைகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது. இந்த சலுகையை பயன்படுத்தி இந்த பண்டிகையில் யமஹா 2-வீலர்களை வாங்கி மகிழலாம்.


Click it and Unblock the Notifications









