எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்னா இதாம்பா! 2026ல பெரிய சம்பவமே வெயிட்டிங்!
எலெக்ட்ரிக் டூவீலர் செக்மெண்ட் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த செக்மெண்டில் பல்வேறு விதமான தயாரிப்புகள் களம் இறங்குகிறது. குறைந்த விலை முதல் பிரிமியம் விலை வரை பல தயாரிப்புகள் களம் இறங்குகிறது. இந்நிலையில் பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களம் இறக்க தயாராகி வருகின்றனர். அதன்படி யமஹா, ஏத்தர் மற்றும் பஜாஜ் நிறுவனங்களின் அடுத்த இவி குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பஜாஜ் நிறுவனம் அடுத்த தலைமுறை சேத்தக் எலெக்ட்ரிக் ஸஅகூட்டரை களம் இறக்க தயாராகி வருகிறது.இந்த ஸ்கூட்டர் 2026ம் ஆண்டு விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் சேத்தக் ஒரு வாகனமாக உள்ளது. இந்த புதிய தலைமுறை சேத்தக் ஸகூட்டர் இ்நதியாவில் பல்வேறு இடங்களில் சோதனை செய்யப்படுவதை காண முடிகிறது. இதில் புதிய டிசைன்கள் மாற்றப்பட்டுள்ளது தெரிகிறது.

இதன்படி புதிய டெயில் லைட், பின்பக்க டயர் ஹக்கர், ஃபிளாட்டான சீட், புதிய ஸ்விட்ச் கியர் கன்சோல் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இதன் மோட்டார் குறித்த விபரங்கள் தெரியவில்லை. ஆனால் அதே 3.5 kWh பேட்டரியுடன் 150 கி.மீ ரேஞ்ச் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் இஎல் என்ற பிளாட்ஃபார்மை வெளியட்டினர். அதில் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அட்வான்ஸ்டு எலெக்ட்ரிக் பிரேக்கிங் சிஸ்டம் உடன் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். மேலும் பைக்கிலேயே சார்ஜரை பொருத்தும் தொழிற்நுட்பம் இதில் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.
இதில் தயாரிக்கப்படும் EL01 கான்செப்ட் ஸ்கூட்டர் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த பைக் வரும் 2026ம் ஆண்டு பண்டிகை காலத்தில் இந்த வண்டி விற்பவனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
யமஹா நிறுவனம் ஏராக்ஸ் இ மற்றும் இசி-6 ஆகிய ஸ்கூட்டர்களை ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் விற்பனைக்கு வருகிறது. இதில் ஏராக்ஸ் இ வாகனம் அதன் பெட்ரோல்இன்ஜின் வெர்ஷன் உடன்விற்பனைக்கு வருகிறது. இதில் 3kWh பேட்டரி பேக் உடன் 9.4kW எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 48 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.
அடுத்தாக யமஷா இசி-06 ரிவர் நிறுவனத்தின் மாடலை அடிப்படையாக கொண்டது. இதில் 4 kWh பேட்டழி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் 160 கி.மீ ரேஞ்ச் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 4.5kW எலெக்ட்ரிக் மோ்டார் பொருத்தப்படும். இந்தபைக் 2026ல் முதல் மூன்று மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் பிரபலமாக வருகிறது. இந்த புதிய வாகனங்கள் நிச்சயம் மிகப்பெரிய அளவில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.
யமஹா நிறுவனம் ஏராக்ஸ் இ மற்றும் இசி-6 ஆகிய ஸ்கூட்டர்களை ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் விற்பனைக்கு வருகிறது. இதில் ஏராக்ஸ் இ வாகனம் அதன் பெட்ரோல்இன்ஜின் வெர்ஷன் உடன்விற்பனைக்கு வருகிறது. இதில் 3kWh பேட்டரி பேக் உடன் 9.4kW எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 48 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.
அடுத்தாக யமஷா இசி-06 ரிவர் நிறுவனத்தின் மாடலை அடிப்படையாக கொண்டது. இதில் 4 kWh பேட்டழி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் 160 கி.மீ ரேஞ்ச் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 4.5kW எலெக்ட்ரிக் மோ்டார் பொருத்தப்படும். இந்தபைக் 2026ல் முதல் மூன்று மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் பிரபலமாக வருகிறது. இந்த புதிய வாகனங்கள் நிச்சயம் மிகப்பெரிய அளவில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Click it and Unblock the Notifications