RX100, RD350 பைக்குகளை இந்தியாவில் காட்சிப்படுத்திய யமஹா.. டூ-வீலர்களின் லெஜண்ட்டை மீண்டும் கொண்டு வராங்களா!!

80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் பைக் மாடல்களான யமஹா ஆர்எக்ஸ் 100 (RX 100) மற்றும் ஆர்டி 350 (RD 350) மீண்டும் இந்தியாவில் காட்சி தந்திருக்கின்றது. சமீபத்தில் தொடங்கிய 'பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025' (Bharat Mobility Global Expo 2025) வாயிலாகவே இந்த இரண்டு பைக்குகளையும் யமஹா (Yamaha) காட்சிப்படுத்தியுள்ளது. இது இந்த பைக்கை நேசிப்போரைக் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, இந்த பைக்கை நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்தோரை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

இதை விற்பனைக்குக் கொண்டு வருவதற்காக நிறுவனம் இங்கு காட்சிப்படுத்தி இருக்கின்றதா என்கிற சந்தேகத்தையும் இந்த காட்சிப்படுத்தல் எழுப்பி இருக்கின்றது. ஆனால், இந்த பைக் மாடல்களின் 40 ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாகவே ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருக்கின்றனர். ஒல்லியான தோற்றம், அதீத திறன் வெளிப்பாடு மற்றும் மனதை மயக்கும் எக்சாஸ்ட் சவுண்டு ஆகியவற்றிற்கு பெயர்போன ஓர் மோட்டார்சைக்கிளாகவே இது காட்சியளிக்கின்றது.

Yamaha rx 100 showcase

1996 வரை உற்பத்தியில் இருந்து ஓர் பைக் மாடலே இதுவாகும். இப்போதும் இதற்கும் சந்தை மிகப் பெரிய அளவில் தென்படுகின்றது. இது ஓர் 100 சிசி சிங்கிள் பாட் ஏற் கூல்டு எஞ்சின் ஆகும். 7000 ஆர்பிஎம்மில் 11 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 10.39 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என்பது கவனிக்கத்தகுந்தது.

கியர்பாக்ஸைப் பொருத்தவரை 4 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனே வழங்கப்பட்டு இருந்தது. இந்த வாகனத்தையே ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதைப் போல தற்போது ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருக்கின்றனர். இது ஒவ்வொரு பைக் காதலர்களையும் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. இதைப்போலவே ஆர்டி 350 பைக்கையும் காட்சிப்படுத்தி இருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

Yamaha rd 350 showcase

இந்த பைக்கின் உற்பத்தி 1973லேயே தொடங்கப்பட்டு விட்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இதுவும் ஓர் அதிக ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட மோட்டார்சைக்கிளே ஆகும். இதனாலேயே இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த டிமாண்ட் இப்போதும் இந்த பைக் மாடல்களுக்கு இருக்கின்றன.

இதனால்தான் இவற்றை மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் யமஹா நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. ஆனால், இவை எப்போது விற்பனைக்கு வரும் என்பது இப்போதும் கேள்விக் குறியாகவே உள்ளது. யமஹா நிறுவனம் ஆர்எக்ஸ் 100 மற்றும் ஆர்டி 350 பைக் மாடல்களை மட்டுமல்ல, இன்னும் பல்வேறு மாடல்களைக் காட்சிப்படுத்தின.

Yamaha rx 100 rear

ஒய்இசட்ஆர்-எம்1, ஒய்/ஏஐ கான்செப்ட், லேண்டர் 250 மற்றும் டெனரே 700 அட்வென்சர் பைக் உள்ளிட்டவற்றையும் அது காட்சிப்படுத்தியது. இதுதவிர, எம்டி-15, எம்டி-03, எம்டி-03, ஆர்15, ஆர்3 மற்றும் ஆர்7 ஆகிய பைக் மாடல்களையும் அது காட்சிப்படுத்தியது என்பது கவனிக்கத்தகுந்தது. இதில் சில பைக் மாடல்களை ஒன்றன் ஒன்றாக நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் யமஹா நிறுவனம் சீக்கிரமே இந்த பைக் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே நிறுவனத்தின் செயல்பாடுகளும் இருக்கின்றன. ஆனால், பழைய ஆர்எக்ஸ் 100 பைக்கில் இருந்த ஏதே எக்சாஸ்ட் ஒலியை திருப்பிக் கொண்டு வருவது மிகவும் சவால் நிறைந்ததாக இருப்பதாக நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் தெரிவித்தது. ஆகையால், இந்த பைக் விற்பனைக்கு வந்தாலும் அதே ஒலி மற்றும் பிக்-அப் திறனுடன் அது விற்பனைக்கு வருமா என்பது சந்தேகமே.

More from DriveSpark

Article Published On: Monday, January 20, 2025, 19:14 [IST]
English summary
Yamaha celebrates 40 years of rx 100 and rd 350 in india at bharat mobility expo 2025
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X