டிவிஎஸ் பஜாஜ் எல்லாம் ஓரம்போ! யமஹாவின் இந்த வண்டி தான் இனி செம ஹிட்டாக போகுது!

யமஹா நிறுவனம் தனது இசி 06 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இன்று வெளியிட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஏராக்ஸ் இ என்ற ஸ்கூட்டர் உடன் சேர்ந்து வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சிறப்பாக விற்பவனையாகிவரும் நிலையில் இந்த ஸ்கூட்டர்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

யமஹா இசி06 ஸ்கூட்டரை பொருத்தவரை ஹரிசான்டல் டிசைன் மொழியில் உருடவாக்கப்பட்டுள்ளது. ஷார்ப்பான பாடி லைன்களுடன் இந்தியாவிற்கென பிரத்தியேகமாக இந்த ஸ்கூட்டரை அந்நிறவனம் உருவாக்கியுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 4.5 கிலோ வாட் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 8.98 எச்பி பவரை வெளியிடுகிறது. இந்த ஸ்கூட்டரில் 4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. பேட்டரி லித்தியம் அயான் பேட்டரியாக வழங்கப்பட்டுள்ளது.

Yamaha EC-06

இந்த பேட்டரிகள் பெர்ஃபார்மென்ஸ் மற்றும் எனர்ஜி பயன்பாட்டிற்கு ஏற்றவாறு ஆப்டிமைஸ் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஸ்மூத்தான, நீண்ட கால பெர்ஃபார்மென்ஸை வழங்கும், தினசரி பயன்பாட்டிற்கு உறுதியான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரை ஒரு முறை சார் செய்தால் 160 கி.மீ வரை பயணிக்க முடியும். இந்த ஸ்கூட்டரில் ரைடு மோடுகளை தேர்வு செய்யும் ஆப்ஷன் இருக்கிறது.

பார்க்கிங் வசதிக்காக ரிவர்ஸ் மோடு ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் உள்ள பேட்டரியை வீட்டிலேயே சார் செய்ய முடியும். ஆனால் ஒரு முறை பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏற 9 மணி நேரம் வரை எடுத்துக்கொள்ளும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

இந்தஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட், டெயில் லைட், மற்றும் இன்டிகேட்டர்கள் உள்ளன. இது போக கலர்டு எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் வழங்கப்பட்டுள்ளது. இது முக்கியமான தகவல்களை இதில் வழங்கும். இந்த ஸ்கூட்டரில் 24.5 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது. இதில் ஹெல்மெட் அல்லது சிறிய லக்கேஜ்களை வைத்தக்கொள்ள முடியும்.

இந்த ஸ்கூட்டரில் உள்ள முக்கியமான ஹைலைட் டிஜிட்டல் கனெக்டிவிட்டி தான். இதில் இன்பில்டாக டெலிமேட்டிக்ஸ் கனெக்டிவிட்டி இருக்கிறது. இது போக சிம் அடிப்படையிலான கனெக்டிவிட்டி உள்ளது. இது ரியல் டைம் டேட்டா ஆக்ஸஸ் மற்றும் லோக்கேஷன் டிராக்கிங்கிற்காக பயன்படுத்தப்படும். இது போக ரைடு அனலிடிக்ஸ் மற்றும் சர்வீஸ் குறித்த எச்சரிக்கைகளையும் வழங்க இந்த ஸ்கூட்டர் சிஸ்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இபந்த ஸ்கூட்டரை யமஹா நிறுவனனம் வரும் 2026ம் ஆண்டு முதல் காலாண்டிலேயே கொண்டு வர திட்டமிட்டுள்ளது இந்த ஸ்கூட்டர் எலெக்ட்ரிக் வாகன உலகில் ஒரு புரட்சியை செய்து தற்போது சிறப்பாக விற்பனையாகி வரும் போட்டி தயாரிப்புகளுக்கு கடும் போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நல்ல மார்கெட் இருக்கிறது. இந்த ஸ்கூட்டர்கள் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன. இந்த ஸ்கூட்டர்களில் உள்ள அம்சங்கள் நிச்சயம் மக்களை கவரும் வகையில் உள்ளது. இந்த ஸ்கூட்டர் டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக் விற்பனையில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 12, 2025, 13:40 [IST]
English summary
Yamaha ec 06 electric scooter unveiled with 160km range
மேலும்... #yamaha #india #electric vehicles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+