யமஹா செய்த சிறிய மாற்றம்... இந்த பைக்கில் கடைசியா பெட்ரோல் எப்போ போட்டோம் என்பதையே மறந்துடுவீங்க!!

யமஹா (Yamaha) நிறுவனத்தின் எஃப்.இசட் (FZ) பைக்குகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இன்னும் சொல்லப்போனால், யமஹாவில் இருந்து எப்போதும் அதிகமாக விற்பனையாக கூடியவைகளாக எஃப்.இசட் பைக்குகள் விளங்குகின்றன. இருப்பினும், அத்தகைய யமஹா எஃப்.இசட் பைக்குகளுள் மக்கள் மத்தியில் பெரியதாக கவனத்தை பெறாத பைக் என்றால் அது எஃப்.இசட்-எக்ஸ் (FZ-X) ஆகும்.

மற்ற யமஹா எஃப்.இசட் பைக்குகளில் இருந்து முற்றிலும் வேறுப்பட்ட தோற்றத்திலான எஃப்.இசட்-எக்ஸ் பைக் சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட போதே இது மார்க்கெட்டில் பெரியதாக வெற்றி பெறாது என கூறினோம். அதேபோல், எஃப்.இசட்-எக்ஸ் பைக்கின் விற்பனை பெரிய அளவில் இல்லை என்பதை சாலையில் இந்த பைக்கை அதிகமாக பார்க்க முடியாததில் இருந்து அறிய முடிகிறது.

yamaha fz-x mild-hybrid bike launched

இருப்பினும், எஃப்.இசட்-எக்ஸ் பைக்கை அவ்வப்போது அப்டேட் செய்ய யமஹா மறப்பது இல்லை. எப்படியாவது இந்த பைக்கின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் யமஹாவின் நோக்கமாக உள்ளது. அந்த வகையில் தற்போது, யமஹா எஃப்.இசட்-எக்ஸ் மைல்ட்-ஹைப்ரீட் (Mild-Hybrid) பைக் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பைக்கின் பெயரை பார்த்தவுடனே தெரிந்திருக்கும், இது ஒரு ஹைப்ரீட் பைக் என்று.

ஆனால், இது முழுமையான ஹைப்ரீட் பைக் கிடையாது. அதாவது, பெட்ரோல் இல்லாமல் எலக்ட்ரிக் பவரில் மட்டும் குறுகிய தொலைவிற்கு இயங்கும் திறன் எஃப்.இசட்-எக்ஸ் மைல்ட்-ஹைப்ரீட் பைக்கிற்கு கிடையாது. இதனால்தான், இந்த பைக்கின் பெயரில் 'மைல்ட்' என்கிற வார்த்தையை சேர்த்துள்ளனர். மேலும், பிரத்யேகமான எலக்ட்ரிக் ரைடு மோட் எதுவும் இந்த பைக்கில் வழங்கப்படவில்லை.

இருப்பினும், மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்தின் மூலமாக, குறைந்த எரிபொருள் செலவில் பைக்கை இயக்குவது மட்டுமில்லாமல், சிறப்பான பயண அனுபவத்தையும் பெறலாம். புதிய யமஹா எஃப்.இசட்-எக்ஸ் மைல்ட்-ஹைப்ரீட் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மைல்ட்-ஹைப்ரீட் பைக்கில் புதிய ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் (SMG) சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது.

yamaha fz-x mild-hybrid bike launched

இந்த சிஸ்டம் ஆனது ஆரம்பத்தில் யமஹா ஃபேஸினோ (Fascino) மற்றும் ரே இசட்.ஆர் (RayZR) ஸ்கூட்டர்கள் மற்றும் எஃப்.இசட்-எஸ் (FZ-S) பைக்குகளில் வழங்கப்பட்ட நிலையில், தற்போது எஃப்.இசட்-எக்ஸ் பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் சிஸ்டத்தின் உதவியுடன் என்ஜின் எந்தவொரு இரைச்சலும் இல்லாமல் மென்மையாக வேலை செய்ய துவங்கும்.

மேலும், எலக்ட்ரிக் மோட்டாரின் உதவியினால் பிக்-அப் சிறப்பாக கிடைக்கும். இது மட்டுமின்றி, ஆக்ஸலரேட்டரை முறுக்கும்போது என்ஜினின் பவர் உடன் எலக்ட்ரிக் பவரும் சேர்ந்து அதிக இயக்க ஆற்றல் கிடைக்கும். மற்றப்படி, யமஹா எஃப்.இசட் பைக்குகளில் பொருத்தப்படும் அதே 149சிசி என்ஜின் தான் இந்த மைல்ட்-ஹைப்ரீட் பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது ஒரு முழுமையான ஹைப்ரீட் பைக் கிடையாது என்றாலும், குறைந்த எரிபொருள் செலவில் இயங்குவதற்கும், எலக்ட்ரிக் பைக்குகளை போன்று மென்மையான என்ஜின் ஸ்டார்ட்டிற்கும் புதிய எஃப்.இசட்-எக்ஸ் மைல்ட்-ஹைப்ரீட் பைக் ஏற்றதாக இருக்கும். இருப்பினும், எஃப்.இசட்-எக்ஸ் பைக்கின் தோற்றத்தில் யமஹா எந்த மாற்றத்தையும் கொண்டுவராதது சற்று ஏமாற்றம் அளிக்கிறது.

Source: Yamaha Motor India (https://www.yamaha-motor-india.com/)

More from DriveSpark

Article Published On: Monday, July 14, 2025, 17:23 [IST]
English summary
Yamaha fz x mild hybrid bike launched in india check price features all details here
மேலும்... #yamaha #new launches #hybrid bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+