ஓலாவை ரவுண்டு கட்டி அடிக்க போறாங்க! இப்ப எல்லாருக்கும் பிடிச்ச இந்த கம்பெனி இவி வேற வரப்போகுதாம்!

இந்தியாவின் ஆட்டோ துறையில் முக்கியமான நிறுவனமான யமஹா, எலெக்ட்ரிக் வாகன (EV) மார்கெட்டில்ல் இன்னும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா மற்றும் சுஸுகி போன்ற பிற முக்கிய பிராண்டுகள் இந்தத் துறையில் ஏற்கனவே இருந்திருந்தாலும், யமஹா இன்னும் திட்டமிடும் நிலையில் உள்ளது. இந்திய மார்கெட்டிற்க்காக குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஒரு தளத்தை உருவாக்குவதில் தற்போது அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

யமஹா மோட்டார் இந்தியாவின் தலைவர் இட்டாரு ஒட்டானி, இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றாலும், இந்திய EV மார்கெட்டில் விரைவில் நுழைய திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இருப்பினும், இந்த தளம் உள்ளூர் அல்லது உலகளாவியதாக இருக்குமா என்பது குறித்த விவரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை. "டைம் லைன் வரையறுக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்த நேரத்தில் அதை வெளியிட முடியாது. இந்திய மார்கெட்க்கு ஏற்றவாறு எலெக்ட்ரிக் வாகனங்களை ஒரு தளக் கான்செப்டின் அடிப்படையில் நாங்கள் பொதுவாக உருவாக்குகிறோம். இதில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய அம்சம் குறித்து ஆய்வு செய்கிறோம்," என்று ஒட்டானி கூறினார்.

Yamaha Electric Vehicle

யமஹா சமீபத்தில் பெங்களூரில் தலைமையிடமாக கொண்ட ஒரு EV பிராண்டான ரிவர் நிறுவனத்தில் யமஹா நிறுவனம் முதலீடு செய்தது. இந்த நிறுவனம் இந்தியாவில் தனது வரவிருக்கும் EV மாடல்களுக்கு ரிவர் இண்டியின் தளத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது. "ரிவர் EV மார்கெட்டில்ல் முன்னேற்றம் அடைந்து வருகிறது, அவர்கள் நல்ல வாகனங்களை தயாரிக்கிறார்கள். அவர்களின் தளத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்," என்று ஒட்டானி கூறினார்.

இந்தியாவின் EV துறையில் பிராண்டுகள் எதிர்கொள்ளும் ரேஞ்ச், வேகம் மற்றும் விலை போன்ற சவால்களை ஒட்டானி எடுத்துரைத்தார். வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது எளிதான காரியம் அல்ல. யமஹா 2022 முதல் பல்வேறு ஐரோப்பிய மார்கெட்ளில் தனது நியோ e-ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. மேலும் கான்செப்ட் ஆய்வுக்காக ஜப்பானில் ரிவர் இண்டி ஸ்கூட்டரை சோதித்துள்ளது.

Yamaha Electric Vehicle

தற்போது, பல இந்திய EV பிராண்டுகள் மலிவு விலையில் கவனம் செலுத்துகின்றன. இருப்பினும், உயர் செயல்திறன் கொண்ட மாடல்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு, யமஹா வேறுபட்ட அணுகுமுறையை எடுத்துக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த யுத்தி யமஹாவின் பிராண்ட் இமேஜுடன் ஒத்துப்போகிறது, ஆனால் விலையை கணிசமாக அதிகரிக்கும் பெரிய பேட்டரிகளின் தேவை காரணமாக சவால்கள் உள்ளன.

"இந்த நேரத்தில், பெரும்பாலான இந்திய EV மார்கெட் பல சிறிய ஸ்கூட்டர்களால் செயல்படுகிறது. நாங்கள் செயல்திறன் சார்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பற்றி யோசித்து வருகிறோம், ஏனெனில் அது யமஹாவின் பிராண்ட்டுடன் ஒத்துப்போகிறது. இருப்பினும், உயர் செயல்திறன் என்பது பெரிய பேட்டரிகள் கொண்டது, அவை விலை உயர்ந்தவை. இது நாங்கள் மதிப்பிட்டு வருகின்ற சவால்களில் ஒன்று," என்று அவர் விளக்கினார்.

Yamaha Electric Vehicle

யமஹா இந்தியாவின் EV சந்தையில் நுழைவது நிச்சயமாக இருந்தாலும், விலை மற்றும் செயல்திறன் எதிர்பார்ப்புகள் தொடர்பான தடைகளை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சூழலில், நிறுவனத்தின் விரைவில் இந்நிறுவனமும் தனது எலெக்ட்ரிக் வாகனங்களை களம் இறக்கும் என எதிர்பார்க்கலாம். எதிர்பார்த்தபடி இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன மார்கெட் பல தளங்களில் விரிவைடந்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாக வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் மார்கெட்டை பிடிக்க பல நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. தற்போது எலெக்ட்ரிக் டூவீலரில் ஓலா நிறுவனம் தான் அதிக வாகனங்களை விற்பனை செய்கிறது எதிர்காலத்தில் இந்நிறுவனத்தின் மார்கெட் பங்கிற்கு பங்கம் ஏற்படும் வகையில் மற்ற நிறுவனங்களின் செயல்பாடு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, March 3, 2025, 10:40 [IST]
English summary
Yamaha is planning to enter the Indian electric vehicle market, focusing on high-performance models and evaluating challenges related to pricing and battery costs. The company is exploring partnerships to develop suitable platforms for its EVs.
மேலும்... #yamaha #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X