ஏரியாவில் முதல் ஆளா நீங்க வாங்கி போடுங்க... யமஹா ஷோரூம்களில் இளைஞர்கள் குவிய போறாங்க!

யமஹா (Yamaha), ஜப்பானை சேர்ந்த முன்னணி மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம். இந்தியாவில் நீண்ட காலமாக பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் யமஹா நிறுவனத்தின் மிகுந்த நம்பிக்கைக்குரிய பைக்குகளுள் ஒன்றாக எம்டி-15 (MT-15) விளங்குகிறது. பிரபலமான, யமஹா ஆர்15 (R15) பைக்கின் நேக்டு-ஸ்ட்ரீட்ஃபைட்டர் வெர்சனாக விளங்கும் எம்டி-15 பைக்கில் ஆர்15-இன் அதே 155சிசி என்ஜின் தான் பொருத்தப்படுகிறது.

ஆர்15 பைக்கை காட்டிலும் விலை குறைவான பைக்காக இருப்பதால், சில நேரங்களில் ஆர்15 பைக்கை விட எம்டி-15 பைக்குகள் அதிகம் விற்பனை ஆகுவது உண்டு. இதனாலேயே எம்டி-15 பைக்கை குறிப்பிட்ட கால இடைவெளியில் யமஹா நிறுவனம் தவறாமல் அப்டேட் செய்துவிடுகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் எம்டி-15 அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

yamaha launches 2025 mt-15 version 2 0

ஸ்டாண்டர்ட் (Standard) மற்றும் டீலக்ஸ் (Deluxe) என இரு விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2025 யமஹா ஆர்15 பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆக ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 550 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதிகப்பட்சமாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 500 வரையில் புதிய எம்டி-15 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

இந்த விலைகள் பைக்கின் நிறத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. இரு வேரியண்ட்களில் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டை மெட்டாலிக் கருப்பு அல்லது மெட்டாலிக் சில்வர் சியான் நிறத்தில் வாங்கலாம். அதுவே டீலக்ஸ் வேரியண்ட் ஐஸ் ஸ்டோர்ம், விவிட் வயோலெட் மெட்டாலிக் மற்றும் மெட்டாலிக் கருப்பு என மூன்று விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

yamaha launches 2025 mt-15 version 2 0

ரூ.1,69,550 என்பது ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டை மெட்டாலிக் கருப்பு நிறத்தில் வாங்கினால் விதிக்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இன்ஸ்சூரன்ஸ், ஆர்டிஓ கட்டணம் எல்லாம் சேர்த்து பைக்கின் ஆன்-ரோடு விலை இன்னும் சில பத்தாயிரம் ரூபாய்கள் அதிகமாக வரும். புதிய எம்டி-15 பைக்கில் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் திரை வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட யமஹா எஃப்.இசட்-எக்ஸ் ஹைப்ரீட் (FZ-X Hybrid) பைக்கில் வழங்கப்படுவதை போன்று மாடர்ன் தரத்தில் 4.2 இன்ச்சில் ப்ளூடூத் உடன் இணைக்கக்கூடியதாக இந்த டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் திரை உள்ளது. இதன் மூலமாக ஒவ்வொரு திருப்பலுக்கும் தேவையான வழிக்காட்டுதலை பெறுவதுடன், மொபைல் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளையும் இந்த பைக் திரையின் வாயிலாகவே கண்ட்ரோல் செய்யலாம்.

yamaha launches 2025 mt-15 version 2 0

மற்றப்படி, 2025 எம்டி-15 பைக்கிலும் வழக்கமான 155சிசி லிக்யுடு-கூல்டு என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 18.4 பிஎஸ் மற்றும் 14.1 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் & ஸ்லிப்பர் க்ளட்ச் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: யமஹா எம்டி-15 பைக்கின் விற்பனை இந்தியாவில் ஏற்ற இறக்கமாகவே உள்ளது. மற்ற புதிய பைக்குகளின் அறிமுகத்தினாலும், தொடர்ந்து மாறிக்கொண்டே வரும் டிரெண்டிங்கினாலும் எம்டி-15 பைக்கை குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது அப்கிரேட் செய்ய வேண்டிய கட்டாயம் யமஹாவுக்கு ஏற்படுகிறது. அந்த வகையில்தான், தற்போது 2025 யமஹா எம்டி-15 வெர்சன் 2.0 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, August 1, 2025, 19:36 [IST]
English summary
Yamaha india launches 2025 mt 15 version two point zero check price features all details here
மேலும்... #yamaha #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X