பைக்கை பார்த்த பின் எத்தனை பேருக்கு தூக்கம் கெட போகுதோ...!! விலையை அறிவிச்சுட்டாங்க, புக்கிங்கை போடுங்க!
யமஹா (Yamaha) நிறுவனத்தில் இருந்து உலகளவில் வரவேற்பை பெற்ற மோட்டார்சைக்கிள்களுள் ஆர்15 (R15) ஒன்றாகும். குறிப்பாக, இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் யமஹா பைக்காக ஆர்15 விளங்குகிறது. இதனாலேயே ஆர்15 பைக்கை அவ்வப்போது அப்டேட் (Update) செய்வதை யமஹா வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது மேம்படுத்தப்பட்ட 2025 ஆர்15 பைக்கை மார்க்கெட்டில் யமஹா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இருப்பினும், இந்த முறை ஆர்15 பைக்கில் பெரியதாக எந்த அப்கிரேடும் கொண்டுவரப்படவில்லை. பைக்கின் தோற்றத்தில் சிறு சிறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன மற்றும் முக்கியமாக 4 புதிய கலர் ஆப்ஷன்கள் 2025 யமஹா ஆர்15 பைக்கில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. மற்றப்படி, பைக்கின் மெக்கானிக்கல் பாகங்களிலும், தொழிற்நுட்ப வசதிகளிலும் எந்த அப்கிரேடும் வழங்கப்படவில்லை.

இந்தியாவில் ஆர்15 பைக்குகள் ஆர்15 எம், ஆர்15 வெர்சன் 4 மற்றும் ஆர்15 எஸ் என 3 வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், ஆர்15 எம் பைக் இனி மெட்டாலிக் கிரே (Mettalic Grey) நிறத்தில் கிடைக்கும். அதேபோல், ஆர்15 வெர்சன் 4 பைக்கில் புதியதாக மெட்டாலிக் பிளாக் (Black) கலர் ஆப்ஷன் சேர்க்கப்பட்டு உள்ளது.
வாடிக்கையாளர்கள் பலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆர்15 வெர்சன் 4 பைக்கில் மெட்டாலிக் பிளாக் கலர் ஆப்ஷன் சேர்க்கப்பட்டு உள்ளது. இது இல்லாமல், ஆர்15 வெர்சன் 4 பைக்கில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் ரேசிங் ப்ளூ கலர் ஆப்ஷனில் பெயிண்ட்டின் கிராஃபிக்ஸ் (Graphics) சற்று மாற்றப்பட்டு உள்ளது.

மேலும், ஆர்15 வெர்சன் 4 பைக்கிற்கு வெளிநாடுகளில் வழங்கிவந்த 'மேட் பேர்ல் வெள்ளை' (Matte Pearl White) கலர் ஆப்ஷனை இந்தியாவில் யமஹா அறிமுகம் செய்துள்ளது. இவற்றுடன், ஆர்15 எஸ் பைக்கிற்கு புதியதாக வெர்மிலியன் சக்கரங்கள் உடன் மேட் கருப்பு நிற கலர் ஆப்ஷன் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த ஆர்15 எஸ் ஆனது ஆர்15 பைக்கின் பழைய தலைமுறை வெர்சனில் உருவாக்கப்படும் பைக் ஆகும். இதனாலேயே, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஆர்15 பைக்குகளிலேயே விலை குறைவானதாக ஆர்15 எஸ் விளங்குகிறது. இந்த கலர் ஆப்ஷன்கள் உடன் சேர்த்து, ஆர்15 பைக்குகளின் விலைகளையும் யமஹா மாற்றியமைத்து உள்ளது.

இதன்படி, ஆர்15 எம் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-showroom Prices) இனி ரூ.2,01,000-இல் இருந்தும், ஆர்15 வெர்சன் 4 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1,84,770-இல் இருந்தும் ஆரம்பிக்கின்றன. ஆர்15 எஸ் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1,67,830-இல் இருந்து துவங்குகின்றன. மற்றப்படி, ஏற்கனவே கூறியதுபோல் ஆர்15 பைக்குகளின் மெக்கானிக்கல் பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. மேற்கூறப்பட்ட மூன்று ஆர்15 பைக்குகளிலும் 155சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.
அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம்-இல் 18 எச்பி மற்றும் 7,500 ஆர்பிஎம்-இல் 14.2 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இவற்றுடன், குயிக்-ஷிஃப்டர் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டமும் ஆர்15 பைக்குகளில் வழங்கப்படுகின்றன. டெல்டாபாக்ஸ் ஃப்ரேமில் உருவாக்கப்படும் ஆர்15 பைக்குகளில் முன்பக்கத்தில் தலைக்கீழான ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் இணைக்கப்பட்ட மோனோகிராஸ் சஸ்பென்ஷனும் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: யமஹா ஆர்15 ஆனது இந்திய இளைஞர்கள் பலரது கனவு வாகனமாக உள்ளது. ஏழை, எளிய இளைஞர்களுக்கு சற்று விலையுயர்ந்த மோட்டார்சைக்கிளாக ஆர்15 இருப்பதினாலேயே இந்த பைக்கை அவ்வப்போது அப்டேட் செய்து தொடர்ந்து புத்துணர்ச்சியான தோற்றத்தில் வைத்திருக்க யமஹா முயற்சிக்கிறது. இருப்பினும், இந்த முறை ஆர்15 பைக்கின் தோற்றத்தில் பெரியதாக எந்த அப்டேட்டும் கொண்டுவரப்படாதது அதன் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









