ரூ.1.17 லட்சம் மட்டும்தான் விலையா... மற்ற பைக்குகளை எல்லாம் ஓட விட யமஹா அதிரடியாக களமிறக்கிய 150சிசி பைக்!

இந்தியாவில், யமஹா மோட்டார் இந்தியா (Yamaha Motor India) நிறுவனம் புதிய எஃப்.இசட்-ரேவ் (FZ-RAVE) பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 150சிசி மோட்டார்சைக்கிள் பிரிவில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. ரூ.1.17 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய எஃப்.இசட்-ரேவ் ஒரு புதிய வடிவமைப்பு, நம்பகத்தன்மை மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

இளைஞர்களைக் கவரும் வகையில், ஸ்டைல் மற்றும் நடைமுறைத் தேவைகளை சமநிலைப்படுத்தும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. எஃப்.இசட்-ரேவ் பைக் உடன், எக்ஸ்.எஸ்.ஆர்155 (XSR 155) மோட்டார்சைக்கிளையும், ஏரோக்ஸ் இ (Aerox E) மற்றும் இசி-06 (EC-06) என்ற இரு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் யமஹா இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

yamaha fz-rave launch

வழக்கமான யமஹா எஃப்.இசட் பைக்குகளின் வடிவமைப்பில் இருந்து உத்வேகம் பெற்று, புதிய எஃப்.இசட்-ரேவ் ஷார்ப்பான, மஸ்குலர் தோற்றத்துடன் வந்துள்ளது. இதில் ஒருங்கிணைந்த பொசிஷன் லைட்டுடன் கூடிய முழு LED புரோஜெக்டர் ஹெட்லேம்ப், கவர்ச்சிகரமான வடிவமைப்பில் பெட்ரோல் டேங்க் மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றத்தை மேம்படுத்தும் வகையில் சிறிய எக்ஸாஸ்ட் குழாய் ஆகியவை உள்ளன.

ஒற்றை இருக்கை மற்றும் ஸ்டைலான LED டெயில் லேம்ப் நகர்ப்புற பயணங்கள் மற்றும் வார இறுதி நீண்ட தூர பயணங்களுக்கு வசதியாக இருக்கும். யமஹாவின் "கால் ஆஃப் தி ப்ளூ" வடிவமைப்பு தத்துவத்திற்கு ஏற்ப, இது தன்னம்பிக்கையையும், நெரிசலான போக்குவரத்திலும் செல்வதற்கு ஏற்ற ஆக்ரோஷமான தோற்றத்தை கொண்டுள்ளது.

இந்த பைக் மேட் டைட்டன் மற்றும் மெட்டாலிக் பிளாக் ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த வண்ணங்கள், இளம் இந்திய வாடிக்கையாளர்களின் கருத்துக்களைப் பெற்று உருவாக்கப்பட்ட கவர்ச்சிகரமான கிராபிக்ஸ் மூலம் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளன. யமஹா எஃப்.இசட் ரேவ் பைக்கில் 149சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, SOHC, 2-வால்வு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இது, அதிகப்பட்சமாக 7,250 ஆர்பிஎம்-இல் 9.1 கிலோவாட் (12.4 பிஎஸ்) சக்தியையும், 5,500 ஆர்பிஎம்-இல் 13.3 நியூட்டன் மீட்டர் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் இ20 பெட்ரோலை (எத்தனால் 20% கலக்கப்பட்ட பெட்ரோல்) ஏற்கக்கூடியது மற்றும் திறமையான எரிபொருள் விநியோகத்திற்காக எரிபொருள் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

இந்த என்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது நகர்ப்புற போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளில் சிறந்த செயல்திறனை வழங்குகிறது. ஈரமான மல்டி-டிஸ்க் கிளட்ச் மற்றும் எலக்ட்ரிக் ஸ்டார்ட்டர் அன்றாட பயன்பாட்டை எளிதாக்குகிறது. அடிப்படையில் புதிய எஃப்.இசட்-ரேவ் பைக் டயமண்ட்-வகை சட்டகத்தைக் கொண்டுள்ளது. இதில் டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் முன்பக்கத்திலும், பின்பக்கத்தில் ஸ்விங்கார்ம்-மவுண்டட் சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பைக்கின் எடை 136 கிலோகிராம் (கெர்ப் எடை) மற்றும் 165மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸை கொண்டுள்ளது, இதன் மூலமாக இது இந்திய சாலைகளுக்கு ஏற்றதாக அமைகிறது. 13 லிட்டர் எரிபொருள் டேங்க், அன்றாட பயணங்கள் மற்றும் வார இறுதி பயணங்களுக்கு போதுமான வரம்பை வழங்குகிறது. இரு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

அவசரகால பிரேக்கிங்கின் போது மேம்பட்ட கண்ட்ரோல் மற்றும் பாதுகாப்பிற்காக சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் இதில் உள்ளது. 100/80-17 (முன்) மற்றும் 140/60-17 (பின்) அளவிலான டயர்கள் சிறந்த சாலை பிடியையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்கின்றன. தரையில் இருந்து 790மிமீ உயரத்தில் உள்ள இருக்கை ஆனது பல்வேறு உயரங்களை கொண்ட ஓட்டுநர்கள் போக்குவரத்து நெரிசலிலும் எளிதாக பைக்கை இயக்க உதவுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நவீன கால ஓட்டுநர்களின் தேவைகளுக்கு ஏற்ப, புதிய யமஹா எஃப்.இசட்-ரேவ் பைக் சௌகரியத்திற்கும் மற்றும் சிறந்த ஹேண்ட்லிங்கிற்கும் சமநிலையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 27.5 லட்சத்திற்கும் அதிகமான கஸ்டமர்களை கொண்டுள்ள யமஹா எஃப்.இசட் பைக்குகள் வரிசையில் இணைந்துள்ள புதிய எஃப்.இசட்-ரேவ் பைக்கிற்கு டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் மற்றும் பஜாஜ் பல்சர் என்150 பைக்குகள் போட்டியாக இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 12, 2025, 11:25 [IST]
English summary
Yamaha introduces new fz rave motorcycle in india price features all details here
மேலும்... #yamaha #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+