ஹீரோ பைக் எல்லாம் மூட்டையை கட்டி கிளம்ப வேண்டியதுதான்... யமஹா கொண்டுவரும் பிரேசில் நாட்டு பைக்!!

யமஹா (Yamaha) நிறுவனம் நடைபெற்றுவரும் ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சியில் அதன் புதிய லேண்டர் 250 (Lander 250) மோட்டார்சைக்கிளை காட்சிக்கு நிறுத்தி உள்ளது. டெல்லியில் நடைபெற்றுவரும் இந்த மோட்டார் கண்காட்சியில் யமஹாவின் பெவிலியனில் பலரது பார்வையை கவர்ந்துள்ள புதிய லேண்டர் 250 பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பாரத் மொபைலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 கண்காட்சியின் ஒரு பகுதியாக டெல்லியின் துவார்கா என்கிற பகுதியில் நடைபெற்றுவரும் இந்த கண்காட்சியில் பல முன்னணி பைக் நிறுவனங்கள் கலந்துக் கொண்டுள்ளன. அவற்றுள் ஒரு நிறுவனமாக பங்கேற்றுள்ள யமஹா அதன் சில புதிய பைக்குகளை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு நிறுத்தியுள்ளது.

yamaha at auto expo 2025

அவற்றுள் ஒன்று, யமஹா லேண்டர் 250 ஆகும். தற்சமயம் பிரேசில் நாட்டில் விற்பனையில் இருக்கும் இந்த அட்வென்ச்சர் பைக்கை இந்தியாவில் தற்போதைக்கு யமஹா நிறுவனம் வெளியீடு மட்டுமே செய்துள்ளது. மற்றப்படி, பைக்கை நம் நாட்டில் அறிமுகம் செய்யும் திட்டம் எதையும் யமஹா வெளியிடவில்லை.

யமஹா லேண்டர் 250 பைக்கில் பல்வேறு மாடர்ன் தரத்திலான டிசைன் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானது, பைக்கிற்கு முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள புரோஜெக்டர் எல்இடி ஹெட்லைட் ஆகும். இதனுடன், முன்பக்கத்தில் நீளமான ஃபெண்டரை கொண்டிருக்கும் இந்த புதிய யமஹா பைக்கில் அளவில் பெரியதான பெட்ரோல் டேங்க் எக்ஸ்டென்ஷன்ஸ் மற்றும் சிங்கிள்-பீஸ் இருக்கை வழங்கப்பட்டுள்ளது.

எக்ஸாஸ்ட் குழாய் ஆனது மேல்நோக்கி வளைக்கப்பட்டதாக உள்ளது. யமஹா லேண்டர் 250 பைக்கில் 249சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 20.5 பிஎச்பி மற்றும் 20.6 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு உள்ளது.

இரட்டை-தொட்டில் ஃப்ரேமில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 220மிமீ டிராவல் உடன் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் 204மிமீ டிராவல் உடன் மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங் பணியை கவனிக்க இரு சக்கரங்களிலும் ஏபிஎஸ் உடன் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த பைக்கின் ஹேண்டில்பாரில் வழங்கப்பட்டுள்ள எல்சிடி திரை ஆனது ஸ்மார்ட்போன் கனெட்டிவிட்டி வசதி உடன் உள்ளது. மேட் க்ரீன், சாலிட் ரெட், மேட் கிரே மற்றும் மெட்டாலிக் சிவப்பு என 4 விதமான கலர் ஆப்ஷன்களில் பிரேசில் நாட்டில் விற்பனை செய்யப்படும் இந்த யமஹா பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.2 லட்சம் என்கிற அளவில் நிர்ணயிக்கப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அட்வென்ச்சர் ரக பைக்குகளுக்கு கடந்த சில வருடங்களில் நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதனால்தான், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் எக்ஸ்பல்ஸ் 210 பைக்கை அறிமுகம் செய்தது. அதே பாணியில் யமஹா கொண்டுவரும் லேண்ட் 250 தற்போது ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதால், இந்தியாவில் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, January 17, 2025, 14:58 [IST]
English summary
Yamaha lander 250 at bharat mobility auto expo 2025
மேலும்... #yamaha #auto expo 2025 #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+