ரூ17,500 விலை குறையுது! இந்த கம்பெனி வண்டிய இனி ஈஸியா வாங்கலாம்!
யமஹா மோட்டார் நிறுவனம் ஜிஎஸ்டி வரி குறைப்பில் உள்ள பலன்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் வரும் 22ம் தேதி ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பின்னர் இந்தியவாில் விற்பனையாகும் யமஹா வாகனங்களின் விலை கணிசமாக குறையப்போகிறது. இதன்படி எந்தெந்த வாகனங்கள் எவ்வளவு விலை குறையப்போகிறது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
வரும் செப்டம்பர் 22ம் தேதிக்க பிறகு இந்தியாவில் விற்பனையாகும் 350 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட பைக் மற்றும் ஸ்கூட்டர்களுக்க 28 சதவீத வரிக்க பதிலாக 18 சதவீத வரியே விதிக்கப்படுகிறது. இதனால் பெரும்பாலான வாகனங்களின் விலை கணிசமாக குறைகிறது. இந்நிலையில் யமஹா நிறுவனத்தின் வாகனங்களின் விலையும் குறைகிறது. இதன்படி இந்நிறுவனத்தின் வாகனங்களின் விலை ரூ7759 முதல் ரூ17,581 வரை குறைகிறது. ஒவ்வொரு வாகனத்தின் புதிய விலை விலை மற்றும் அது எவ்வளவு குறைந்துள்ளது என்ற விபரங்களை காணலாம்.

யமஹா ஆர்15 பைக்கை பொருத்தவரை ஏற்கனவே விற்பனையாகி வந்த விலையிலிருந்து ரூ17,581 குறைந்து இனி ரூ1,94,439 என்ற விலைக்க விற்பனையாகும். யமஹா, எம்டி 15 பைக்கை பொருத்தவரை ஏற்கனவே விற்பனையாகி வந்த விலையிலிருந்து ரூ14,964 குறைந்து ரூ1,65,536 என்ற விலைக்கு விற்பனைக்கு வரும். யமஹா எஃப்இசட் -ற எஃப்ஐ ஹைபிரிட் பைக்கை பொருத்தவரை ஏற்கனவே விற்பனையாகி வந்த விலையிலிருந்து ரூ12,031 குறைந்து இனி ரூ1,33,159 என்ற விலைக்கு விற்பனையாகும்
யமஹா எஃப் இசட் எக்ஸ் ஹைபிரிட் பைக்கை பொருத்தவரை ஏற்கனவே விற்பனையாகி வந்த விலையிலிருந்து ரூ12,430 குறைந்து வெறும் ரூ1,37,560 என்ற விலைக்கு விற்பனையாகும். யமஹா ஏராக்ஸ் 155 வெர்ஷன் எஸ் ஸ்கூட்டரை பொருத்தவரை ஏற்கனவே விற்பனையாகி வந்த விலையிலிருந்து ரூ12,753 குறைந்து ரூ1,41,137 என்ற விலையில் விற்பனையாகும். யமஹா ரே இசட் ஆர் ஸ்கூட்டரை பொருத்தவரை ஏற்கனவே விற்பனையாகி வந்த விலையிலிருந்து ரூ7,759 குறைந்து இனி ரூ86,001 என்ற விலையில் விற்பனையாகும். ஃபேஸினோ ஸ்கூட்டரை பொருத்தவரை ஏற்கனவே விற்பனையாகி வந்த விலையிலிருந்து ரூ8509 குறைந்து ரூ94,281 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

தற்போது 28 சதவீத வரி விதிக்கப்படும் நிலையில் இந்த வாகனங்களுக்கு செப் 22ம் தேதி முதல் 18 சதவீதம் வரி தான் விதிக்கப்படும். இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இனி குறைந்த விலையில் வாகனங்களை விற்பனை செய்ய முடியும் 10 சத வரி குறைந்ததால் இனி ஏற்கனவே விற்பனையான கார் விலையிலிருந்து 7-7.5 சதவீதம் வரை குறைவான விலையில் வாகனங்களை வாங்க முடியும்.
பண்டிகை காலம் வேறு நெருங்கி வருவதால் பலர் வாகனங்களை வாங்கும் ஆர்வத்தில் இருப்பார்கள். இந்நிலையில் விலை வேறு குறைக்கப்பட்டதால்இந்த பண்டிகை காலத்தில் விற்பனை கணிசமாக அதிகமாகும் என எதிர்பார்க்கலாம். வரும் செப் 22ம் தேதிக்கு பிறகு மிகப்பெரிய அளவில் விற்பனை நடக்கும் என எதிர்பார்க்கப்பபடுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டூவீலர் வாகன விற்பனை பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது விலை குறைவதால் மேலும் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம். இதனால் யமஹா வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை கணிசமாக அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









